நட்பு குட்டி கதை (அரிதான புகைப்படங்களுடன்)


நட்பு குட்டி கதை (அரிதான புகைப்படங்களுடன்)


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.  ஒரு சமயம் பணக்கார 
நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது. அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன்  நண்பனை பார்த்து "எப்பிடி டா இருக்கே?" என்று வழக்கம் போல கேட்டான்.

"சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?" என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள்  சென்றான் .









அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் "அரை மணி நேரத்தில் பணம்  கிடைத்தால் பரவாயில்லையா?" என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான். 

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.

ஏழை நண்பனை  ஏளனமாக பார்த்தான்.

அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.

"நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து 
கொண்டேன் டா" என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.



இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள 
பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..

ஆகவே நட்பையும் நேசிப்போம்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

நன்றி

0 comments:

மருத்துவம் தொழிலா ..? சேவையா ...?





ஜனத்தொகை பெருகி வரும் இந்தஉலகில் , புதிய புதிய நோய்களும்பெருகி கொண்டு தான்இருக்கின்றன. அது மாத்திரமல்லமருத்துவர்களும் பெருகி கொண்டேஇருக்கிறார்கள். உலக சுகாதாரஅமைப்பின் கருத்துப்படிஇந்தியாவில் கிட்டதட்ட 4 . 4 லட்சம்மருத்துவர்கள் உள்ளனர் . கிட்டத்தட்ட 273 மருத்துவகல்லூரிகளின் மூலம் 32000 மருத்துவ மாணவர்கள் மருத்துவம்படிக்கின்றனர். ஏழை வீட்டில் பிறந்தநன்கு படிக்கும் மாணவன்முதற்கொண்டு பல லட்சங்களைபணமாக கட்டி படிக்கும் மாணவன்என மருத்துவ மாணவர்களை வகைபிரிக்கலாம்.

இவை எல்லாம் ஒரு பக்கம் ஒரு நிம்மதியை கொடுத்தாலும்பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாகநினைகின்றனரா அல்லது தொழிலாக செய்கின்றனரா என்பது தான்நம்மை போன்ற பொது ஜனத்தின் சந்தேகம். நேற்று நான் சந்தித்தஒரு சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தபடியால் இந்த பதிவைஎழுத வேண்டிய கட்டயதிற்குள் வந்து விட்டேன். ஒரு 60 வயதுதாயார் ஒருவர் நெஞ்சு வலியின் காரணமாக ஒரு மருத்துவமனைக்குசிகிச்சை பெற வந்திருந்தார். மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அந்த தருணத்தில் நிலைமை மருத்துவருக்குஅறிவிக்கப்பட்ட பிறகும் , தன்னை நாடி வந்திருந்த மருந்து விற்பனைபிரதிநிதிக்கு சமயம் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பேச ஆரம்பித்துவிட்டார். வேறென்ன சொல்லுவது. நெடு நேரம் காத்திருந்த அந்தமுதியவர் வேறு மருத்துவமனையை நாடி சென்றது தான் கொடுமை.


என்ன நினைக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். பல லட்சம்செலவழித்து மருத்துவம் படித்தால் பணத்தை குறித்து அக்கறைவராமல் வேறென்ன வரும் என்கிறார் இந்த பொது ஜனம். நாமும்வேறென்ன சொல்லுவது . நோயாளிகளிடம் காண்பிக்கும்அக்கறையை விட மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும்முக்கியத்திற்கு வேறென்ன காரணம் இறக்க முடியும்...? தரம்குறைந்த மருந்துகளை பரிந்துரைக்க அவர்களுக்கு கிடைக்கும் அற்பபணத்திற்காகவும் வெகுமதிக்காகவும் அல்லாமல் வேறெதற்கு? சுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகள் சிலவற்றில்நுழைந்தவுடன் ஏற்படும் வாசனை (?) சகிக்கமுடியாது. ஏன் அதை கூடசரி பண்ண மருத்துவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை போலும். என்ன சொல்லுவது ... என்னவோ யாதோ என பயந்து வரும்நோயாளிகளை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாமல் தங்கள்மேதாவித்தனத்தை காட்டும் மருத்துவர்களும் உண்டு.....


ஆனாலும் எல்லா மருத்துவர்களும் அப்படி என்று சொல்ல முடியாது. கடுமையான விபத்தில் சிக்கி கால்கள் ஒடிந்த நிலையில் ஒருவாலிபன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது , ஒருமருத்துவர் கையில் அணிவதற்கு கையுறை தேடி கொண்டிருக்க, தற்செயலாய் அந்த பக்கம் வந்த இன்னொரு மருத்துவர் தான் நல்லஆடைகளை அணிந்துருந்தும் அதை பொருப்படுத்தாது ஓடி சென்றுதனது கைகளினால் அந்த கால்களை தாங்கி பிடித்த காட்சியையும்கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். வெறும் 25 ருபாய் , 50 ருபாய் மாத்திரம்பீஸ் வாங்கும் மருத்துவர்கள் 80 கிமீ பிரயாணம் செய்து வந்துமருத்துவம் பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன்.


ஆனால் கடவுளுக்கு அடுத்தபடியாக போது ஜனம் இவர்களைநினைத்திருக்க , மருத்துவம் என்ற புனிதமான சேவை வியாபாரம்ஆகும் கொடுமை தீர்ந்தால் தான் உண்மையான சேவை செய்யும்மருத்துவர்கள் கூட மதிக்கப்படும் நிலை வந்திருக்கிறது என்றால் , அது கூட மறுக்க முடியாது என்றே நினைக்கிறன்

0 comments:

.