Recent Video

Showing posts with label சிந்திக்கவும். Show all posts

திட்டமிட்டு பொய் வழக்குகளில் சிக்கவைக்கப்படுவது ஏன்?


 

                             தீவிரவாத வழக்குகளில் சிக்கவைத்து முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைக்கும் விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஹைதராபாத் குண்டு வெடிப்பு அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதின் எதிர்வினை என்பதாக மத்திய உள்துறை அமைச்சர் சொன்ன கருத்தின் மூலம், இந்திய அரசு பயங்கரவாதம் முஸ்லிம்களை குறிவைக்க தொடங்கியது.

ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள் நடத்தியதாக சொல்லி அப்பாவி முஸ்லிம் இலஞசர்களை வேட்டையாடிய, அதே ஹைதராபாத் உளவுத்துறைதான் இப்பொழுது இந்த குண்டு வெடிப்பையும் விசாரிக்கிறது.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால்? மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களைதான் இப்பொழு நடந்த குண்டு வெடிப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இளஞசர்கள் குற்றமற்றவர்கள் என்று கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு போதிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பளித்து இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் ஹிந்துத்துவா பயங்கரவாதம் எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத தாக்குதல்களுக்கு, ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள்தான் காரணம் என்று கைது செய்து சித்திரவதை செய்யப்பட்டனர். பின்னர்தான் காவி பயங்கரவாதத்தின் முகம் வெளிச்சத்திற்கு வந்தது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சரியான கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. அதை விட்டு முன்பு ஒரு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு நஷ்ட ஈடுவழங்க பரிந்துரைக்கப்பட்ட அதே நபர்களை மீண்டும் கைது செய்வது இந்திய அரசு பயங்கரவாதத்தின் அடாவடி, அராஜக, ஒரு சார்பு நடவடிக்கையாகும். இதை சம்மந்தப்பட்டவர்கள் மாற்றி கொள்ள வில்லை என்றால் இது பிற்காலத்தில் இந்தியா உடைந்து போக காரணிகளாக மாறிப்போகும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

WHO IS THE HERO! WHO IS THE HERO!




காக்க வந்த வாத்தியாரோ!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.


இந்த சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும். மலையாள நடிகர் மம்முட்டியை பாராட்டியே ஆகவேண்டும். நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளி குழந்தைகள் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதாக அறிவித்த நமது நடிகர்கள் பலர் மாயமானார்கள். தலைவா உன் சொல்லுக்காக தமிழகமே காத்து நிற்கிறது என்று மிகைபடுத்தப்பட்ட ரஜினி என்ன செய்தார்? மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே? இதுபோன்ற பெரும் விபத்துகளிலும், பேரிடர்களிலும் இந்த நடிகர்களின் பங்கு என்ன?

சிடி பிளையர் வாங்க வசதியில்லாத இந்த அன்றாடம் காட்சிகள் தியேட்டரில் சென்று படம்பார்த்துதானே நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு 5 கார், 10பங்களா, ஒரு தலை முறைக்கு சொத்து இதல்லாம் போதும் தானே. இது போக மீதத்தையாவது மக்களுக்கு கொடுங்கலேண்டா! ஏன் இந்த பணவெறி.. பணவெறி.. பணவெறி டா!.
 

இந்த கம்பம் கலி தின்னவனும் மண்ணுக்குள்ளே! அந்த தங்க பஷ்ப்பம் தின்னவும் மண்ணுக்குள்ளே! நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல!

இது ரஜினி காந்த் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இவர்தான் முணு முணுப்பார். நம்ம விசிலடிச்சான் குஞ்சிகள் எல்லாம் ஓ.. தங்க தலைவா! வருங்கால தமிழக முதல்வரே! என்று கோசம் எழுப்புவார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் ரஜினி ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலை ஊற்றி அபிசேகம் செய்வர். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க வழியில்லாமல் தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள்.

 

பாரதியும், பெரியாரும் வாழ்ந்த மண்ணில் மானம் கெட்டு குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிக பெருமக்கள்தானே. குஷ்பு தன்னை போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டு பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சை உண்டாக்கினார். இந்த குஷ்பு கடவுள் இந்த மக்களுக்கு ஏதாவது பண்ண போறாரா? இல்லையே! இதையெல்லாம் சிந்திக்க கூட வழியில்லாமல் நமது தமிழ் சமூகம் அடிமுட்டாளாகி போனது.

சினிமாவை பற்றியே செய்திகள் எழுதி சமூக வலைத்தளங்களை நாறடிக்கும் மக்கள் திருந்துவார்களா?
.