வருகிற 2-ந்தேதி அஜீத்தின் 'பில்லா-2' டிரெய்லர் ரிலீஸ்

வருகிற 2-ந்தேதி அஜீத்தின் 'பில்லா-2' டிரெய்லர் ரிலீஸ்














அஜீத்தின் 'பில்லா-2' படம் ஜூலை 13-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

வருகிற 2-ந்தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்கிறது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கதாநாயகி பார்வதி ஓமன குட்டனும் பங்கேற்கிறார். அஜீத் இவ்விழாவில் கலந்து கொள்வாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் இதுபோன்ற விழாக்களில் முன்பெல்லாம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. வன்முறை, கவர்ச்சி சீன்கள் அதிகம் இருப்பதால் இச்சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவை படக்குழுவினர் கைவிட்டு விட்டனர்.

'பில்லா-2' படத்தை சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்களின் அதிநவீன சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளது

1 comments:

ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் காயம்

ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் காயம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நாகர்ஜூனா ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டது. தீ தொடர்ந்து எரிந்த நிலையில் 5வது மாடியில் இருந்த ரசாயன கலவை சாதனங்கள் வெடித்து சிதறின.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்வம் நடந்த இந்த தொழிற்சாலையில் 200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை தொழிற்சாலையில் பணியில் இருந்த 17 பேர் மட்டுமே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்ட தகவல்களின்படி சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என ஸ்ரீகாகுளம் துணை போலீஸ் அதிகாரி அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த முழு தகவல்கள் கிடைக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி கலெக்டர் ஜி. வெங்கட்ராம் ரெட்டி, துணை கலெக்டர் பி. பாஸ்கர் மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்

0 comments:

போன் செய்தால் போதும் சினிமா டிக்கெட் தேடி வரும்

சென்னை: திரையரங்கத்துக்கு சென்று கூட்ட நெரிசலில் காத்திருந்து, கடைசியில் டிக்கெட் கிடைக்காமல் விரக்தி யோடும், அபிமான ஸ்டாரின் படத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும் திரும்பும் ரசிகர்களுக்கு இனி அந்த கவலை இல்லை. ஒரு போன் செய்தால் அல்லது மெயில் அனுப்பினால் போதும், நீங்கள் விரும்பும் திரைப்படத்தின் டிக்கெட் இல்லம் தேடி வரும். சாலிகிராமத்தில் உள்ள மேக்ஸ் டிக்கெட் ஏஜென்சி இந்த சேவையை செய்கிறது.

சென்னையில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளின் சிறப்பு காட்சிகள், தினசரி காட்சிகள் என அனைத்து  டிக்கெட்களும் கிடைக்கும். குடும்பமாக வும், நண்பர்களுடன் சேர்ந்தும்  பார்க்கும் வகை யில் மொத்தமாக டிக்கெட் பெறலாம் என்கிறார் இதன் உரிமையாளர் டேவிட். விவரங்களுக்கு 9884199516 என்ற எண்ணிலும், Email: bookcinema.david@gmail.com   என்ற மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்

0 comments:

பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசினால் டிரைவர் டிஸ்மிஸ்

பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசினால் டிரைவர் டிஸ்மிஸ்


சென்னை : சென்னை மாநகரில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இதில் 275 பஸ்கள் மாற்று பஸ்களாக இருக்கும். இதுதவிர 3,222 பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 8,140 டிரைவர்கள் பணியாற்றுகின்றனர். ''செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. எனவே அரசு பஸ்களில் பணியில் இருக்கும்போது ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்'' என்று தமிழக அரசு கடந்த 2010 ஜனவரியில் உத்தரவிட்டது.


இதையடுத்து பஸ்சை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் உடனே பயணிகள் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்த தடை உத்தரவு சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பதை காற்றில் பறக்கும் தடையுத்தரவு என்று தினகரன் கடந்த 24ம் தேதி சுட்டிக் காட்டியிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு டிரைவர் செல்போன் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது: 

பஸ் ஓட்டும் போது டிரைவர்கள் செல்போன் பேசினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படும். ஏற்கனவே உள்ள தடை உத்தரவுகளை அனைத்து டிரைவர்களும் பின்பற்ற வேண்டும். டிரைவர்கள் செல்போன் பேசுவதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். இவர்களின் பணி தீவிரப்படுத்தப்படும்.

சோதனையின்போது செல்போன் பேசியது உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர். தொடர் ந்து 3 அல்லது 4 முறை செல்போன் பேசிய புகாரில் சிக்கினால் அவரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.  இவ்வாறு அவர் கூறினர்.

புகாருக்கு : 93833 37639

மாநகர பேருந்து டிரைவர் பஸ் ஓட்டும் போது, செல்போனில் பேசினால் ''93833 37639'' என்ற எண்ணில் பயணிகள் புகார் அளிக்கலாம்.
புகார் கொடுக்கும் போது, அந்த பஸ் தடம் எண், நேரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். நாங்கள் ஓயர்லெஸ் மூலம் சம்பந்தப்பட்ட பஸ்சை மடக்கி பிடித்து சோதனை நடத்துவோம். அப்போது டிரைவர் செல்போன் பேசியது உறுதி செய்யப்பட்டால் முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்.  தொடர்ந்து புகாரில் சிக்கினால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்'' என்று மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments:

விபத்தை திசைதிருப்ப முயற்சி டிரைவர் மீது பழிபோட்டு நிர்வாகம் தப்பிப்பதா?

விபத்தை திசைதிருப்ப முயற்சி


டிரைவர் மீது பழிபோட்டு நிர்வாகம் தப்பிப்பதா?



சென்னை : பஸ் விபத்து பற்றி முழுமையாக விசாரணை நடத்தாமல், நிர்வாகம் தப்பிக்க டிரைவரை கைது செய்துள்ளதாக கூறி, போக்குவரத்து ஊழியர்கள் நேற்று சென்னை பல்லவன் இல்லத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் (சிஐடியு) சந்திரன் கூறியதாவது:

தொழில்நுட்ப பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக பணிநியமனம் கிடையாது. இந்த பிரிவில் மட்டுமே தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் அரசு பஸ்கள் அடிக் கடி விபத்து ஏற்படுவதற்கு காரணம். தரமான உதிரி பொருட்கள் வாங்குவதில்லை. இந்நிலையில் அண்ணா மேம்பாலத்தில் ஏற்பட்ட பஸ் விபத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் நிர்வாகம் டிரைவர் மீது பழிப்போட்டு தப்பிக்கிறது. பஸ் முழுமையான பராமரிப்பு இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்காது. எனவே விபத்துக்கு என்ன காரணம் என்று உரிய விசாரணை குழு அமைத்து ஆய்வு செய்து உண்மையை வெளியிட வேண்டும்.

 விபத்து நடந்ததாக கூறும் வடபழனி மனைகளில் தினந்தோறும் 200 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், வெறும் 5 தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். விபத்து நடந்த பஸ்சில் டிரைவர் இருக்கை உடைந்ததும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர். நேற்றுமுன்தினம் இரவே இந்த பஸ்சின் இருக்கையை புதிய போல்ட் போட்டு சரிசெய்து இருந்தால், இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம். தொழில்நுட்ப பணியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை இதற்கான பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

0 comments:

ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்ப ஏடிஜிபி துக்கையாண்டி சஸ்பெண்ட்

ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்ப


ஏடிஜிபி துக்கையாண்டி சஸ்பெண்ட்


சென்னை : சென்னை விரைவு போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் ஏடிஜிபியாக இருப்பவர் துக்கையாண்டி. இவரது பணிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில் அவர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் இருப்பதாகவும், இதனால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறைச் செயலாளர் ராஜகோபால் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். துக்கையாண்டி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குரூப் ஒன் தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந் தார். 1986ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு பிரிவு ஆகியவற்றில் ஏடிஜிபியாக பணியாற்றினார்.  பல்வேறு முக்கிய வழக்குகளையும் விசாரித்து வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7 மாதத்துக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். பதவி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக துக்கையாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் வட்டாரத்தில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை என்ன?

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை என்ன?




சென்னை : குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், Ôமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும். நாளுக்கு நாள் மதுபான கடைகளை அதிகரிப்பது தவறானது. எனவே மேலும் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்Õ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் நாராயணன் நேரில் ஆஜராகி, ''கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனுவை தாக்கல் செய்தேன். வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது 32 ஆயிரம் பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 44 பேர் சாலை விபத்தால் இறந்துவிடுகிறார்கள். இதில் 60 சதவீதம் பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் இறக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் பார்கள் உள்ளது. ஆனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை அங்கு தடை செய்துள்ளார்கள். எனவே இங்கும் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.

அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜராகி, ''குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லைசென்சு ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது''என்றார். தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ''தமிழகத்தில் மதுபானத்தை அரசே விற்கிறது. இதனால் அரசுக்கு வருமானம் வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் கண் மூடித்தனமாக உத்தரவிட முடியாது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது அரசே நடவடிக்கை எடுக்கிறது. இதற்காக ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் சோதனையிட முடியுமா? இதற்காக ஆயிரக்கணக்கில் போலீசாரை நியமிக்க முடியுமா? இது சாத்தியமாகுமா? இதில் தலையிட்டால் 100க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகளை தாக்கல் செய்வார்கள். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்றார்.

மனுதாரர் நாராயணன் பதில் அளிக்கும்போது, ''அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட நான் கோரவில்லை. மது மூலம் அரசுக்கு  18 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இருந்தாலும் ஒரு வகையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது மனித உரிமை பிரச்னை. எனவே இதில் அரசுக்கு அறிவுரை கூறவேண்டும். உரிய உத்தரவு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகன விபத்து நடக்கிறது. இதை தடை செய்ய வேண்டும்'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ''குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று 2 வாரத்தில் விளக்கம் அளிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

0 comments:

ஆசிரியர்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும்

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 55667 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1 கோடியே 35 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களை இப்போது கல்வித் துறை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டது. 

வருகைப்பதிவில் தொடங்கி பாடம் நடத்தும் முறை, தேர்ச்சி வீதம் குறைவது என பல விஷயங்களில் ஆசிரியர்களை கல்வித்துறை நெருக்கி வருகிறது. இதற்கிடையே, மாணவர்களை கடுமையாக தண்டிப்பது, பலர் முன்னிலை யில் திட்டுவது, கட்டண விஷயத்தில் தனிமைப்படுத்துவது என்று ஆசிரியர்கள் நடந்து கொள்வதாகவும், மாணவ, மாணவியரிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் வருகின்றன. புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

பாலியல் புகார் கூறப் படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் தமிழக அரசு அதிரடி உத்தரவு போட்டுள் ளது. இதன்படி, மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும்  ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு மற்றும் டிஸ்மிஸ், வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்ற இயலாத வகையில் அவரது கல்வி சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

இப்போது மேலும் சில அதிரடி விதிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை கொண்டு வருகிறது. இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கிறது. அதில் கூறப் பட்டுள்ளதாவது: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடத்துடன் ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்றும் வகை யில் ஆசிரியர்களும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆசிரியர்களுக்கென சில சீருடை விதிகள் உள்ளன. அதன்படி ஆசிரியர்கள் உடை அணிந்து வரவேண்டும். 

மாணவர்களும் சீருடை அணிந்து வருவதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். பெண் ஆசிரியர்கள் தேவையற்ற அணிகலன்களை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. மாணவர்கள் இடையே ஒழுக்கத்தை வளர்க்கும் ஆடைகளை ஆசிரியைகள் உடுத்தி வரவேண்டும். மாணவ மாணவியருக்கு அருவருப்பு ஊட்டும் வகையான  ஆடைகள், அணிகலன்களை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக் கூடாது. மரியாதை வரும் அளவுக்கான உடைகளை உடுத்தி வர வேண்டும்.  

ஆசிரியர்கள் நாகரிகமாகவும், ஒழுங்காகவும் உடை அணிந்து வருகிறார் களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒழுங்காக உடை அணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். நேரம் தவறாமல் ஆசிரியர்கள்  பள்ளிக்கு வருகிறார்களா என்பதையும் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்a

0 comments:

வேளச்சேரி, பல்லாவரம், கொளத்தூரில் ரூ.232 கோடியில் புதிய மேம்பாலங்கள்


வேளச்சேரி, பல்லாவரம், கொளத்தூரில்


ரூ.232 கோடியில் புதிய மேம்பாலங்கள்


சென்னை : ''போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி, பல்லாவரம், கொளத்தூர் ஆகிய 3 இடங்களில் ரூ.231 கோடியே 68 லட்சம் செலவில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்'' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெருகி வரும் மக்கள்தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு ஏற்ப சாலை கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள், மேம்பாடுகளை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் ஜி.எஸ்.டி. சாலை, பல்லாவரத்தில் உள்ள சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.80 கோடியே 74 லட்சம் மதிப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில்  98 கோடியே 22 லட்சம் மதிப்பில் தரமணி சாலை, தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச் சாலையை இணைத்து மேம்பாலம் மற்றும் வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

அடுத்து கொளத்தூர் அருகில் இரட்டை ஏரி பகுதியில் ரூ.52 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பூர் செங்குன்றம் சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் ஒரு சுரங்க நடைபாதை என மொத்தம் ரூ.231 கோடியே 68 லட்சம் மதிப்பில் மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மெட்ரோ ரயில் பாதை அமைப்பதன் காரணமாக ஜிஎஸ்டி சாலையில், சென்னை விமான நிலையம் அருகே அதிகளவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை விமான நிலையத்திற்கு அருகே ஜிஎஸ்டி சாலையை ஒரு கிலோ மீட்டர் வரை ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் அகலப்படுத்தவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

0 comments:

லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

தூத்துக்குடி அருகே சோகம்


லாரி மீது கார் மோதி 4 பேர் பலி



தூத்துக்குடி : ஈரோடு எம்ஜிபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் ராஜகோபால்(61). இவரது மகன் ரஜினிகாந்த்(34).  இவர் நெல்லையில் உள்ள பிரபல தனியார் கார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு ரிசன்யா (6), வினய்ரிஷி(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் ஈரோட்டில் வசிக்க ரஜினிகாந்த் மட்டும் பாளை என்ஜிஓ காலனி பாரதிநகரில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.

தூத்துக்குடியில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ராஜாகோபால், வினிதா மற்றம் குழந்தைகள் நெல்லை வந்தனர். நேற்று காலை அனைவரும் ரஜினிகாந்துடன் காரில் தூத்துக்குடி சென்றனர். அங்கிருந்து மாலையில் அவர்கள் நெல்லை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரஜினிகாந்த் ஓட்டினார். தூத்துக்குடி, பாளையங்கோட்டை நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரம் அருகே வந்த போது ரோட்டின் குறுக்கே வந்த மாட்டின் மீது கார் மோதியது. 

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி தொடர்ந்து மற்றொரு கன்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் கார் முழுவதும் நொறுங்கியது. 
ரஜினிகாந்த்(34), தந்தை ராஜகோபால், உறவினர் சரோஜா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் மகள் ரிசன்யா பரிதாபமாக இறந்தார். ரஜினிகாந்தின் மனைவி டாக்டர் வினிதா, மகன் வினய்ரிஷி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments:

எடியூரப்பாவுக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் ராஜினாமா





பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டினால் அதில் முதல்வரை மாற்ற வேண்டுமென்று 113ல் 60 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றி விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தெரிந்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை சதானந்தா கூட்டாமல் இருக்கிறார். ‘மேலிடம் உத்தரவிட்டால் கூட்டம் நடத்தப்படும்’ என்கிறார்.  இந்த நிலையில், ஜூலைக்குள் முதல்வரை மாற்ற மேலிடத்துக்கு எடியூரப்பா தரப்பு கெடு விதித்தது. கவுடாவை மாற்றினால் 13 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அமைச்சர் ஜாரகிகோலி எச்சரித்துள்ளார். 

இந்த பரபரப்பு தொடர்பாக நேற்று அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் வீட்டில் ஆலோசனை நடந்தது. பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தை 48 மணி நேரத்துக்குள் கூட்டாவிட்டால் 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வது என அதில் தீர்மானிக்கப்பட்டது. அது குறித்து சதானந்தாவிடம் கேட்டதற்கு, ‘ராஜினாமா கடிதம் கொடுத்தால் மேலிடத் துக்கு அனுப்பி வைப்பேன். மீதமுள்ள ஓராண்டுக்கும் நானே முதல்வராக நீடிப்பேன்’ என்றார். 

இது குறித்து கவர்னர் பரத்வாஜ் நேற்று தும்கூரில் கூறுகையில், ‘பாரதிய ஜனதாவின் உள்கட்சி பிரச்னைனயில் தலையிட மாட்டேன். 
யாராவது புகார் கொடுத்தால் மட்டுமே தலையிட முடியும்‘ என்றார்.

10 அமைச்சர்கள் யார்?

ராஜினாமா செய்ய இருக்கும் அமைச்சர்கள்: ஜெகதீஷ் ஷெட்டர் (ஊரக வளர்ச்சி), ரேணுகாச்சார்யா (கலால்), பசவராஜ் பொம்மை (நீர்ப்பாசனம்), உதாசி (பொதுப்பணி), ஷோபா கரந்தலஜே (மின்சாரம்), சோமண்ணா (வீட்டுவசதி), உமேஷ்கத்தி (வேளாண்மை), முருகேஷ் நிராணி (தொழில்), ரேவுநாயக் பெலமகி (கால்நடை பராமரிப்பு) மற்றும் ராஜுகவுடா (சிறுதொழில்).

0 comments:

பெட்ரோல் விலை ரூ 3.13 குறைப்பு

0 comments:

.