Recent Video

Showing posts with label இன்று ஒரு தகவல். Show all posts

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன்.
பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..?
வேற ஒன்னுமில்ல, குழப்பம்தான்! அட ஆமாங்க, சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்கள்ல 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக்கூட தூக்கமே வராது. இப்படியானா குழப்பம் வராம என்ன செய்யும் சொல்லுங்க….?
சரி இப்படி வேற எதாவது யுக்திகள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த முறை முயற்சி பண்ணி பார்க்குறேன். ஆனா, இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பத்தியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியல் பொருட்களையும் பத்தி விளக்கமா தெரிஞ்சிக்கலாம் வாங்க……
செர்ரி பழங்கள்!
“இத பார்த்த உடனே, ரெண்டு எடுத்து சாப்பிடனும்போல இருக்கே” அப்படீங்கிற மாதிரி இருக்குற செர்ரி பழங்களுக்கும், உறக்கத்துக்கும் ஒரு ரகசிய உறவிருந்தது இதுவரைக்கும் எனக்கு தெரியாமப்போச்சு!
என்ன….., உங்களுக்குமா?
“என்னது செர்ரி பழத்துக்கும் உறக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கா?” அப்படீன்றீங்களா…..?
அட ஆமாங்க! நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது, நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்/தூண்டும் திறனுள்ள மெலடோனின் (melatonin) அப்படீங்கிற வேதியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் நம்ம செர்ரி பழங்கள். செர்ரி பழங்களில் மிக அதிக அளவில் மெலெடோனின் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனால, இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், பயணங்களின்போதும் கொஞ்சம் செர்ரி பழங்களைச் சாப்பிட்டீங்கன்னா, இந்த தூக்கமானது “எங்கே எங்கே” அப்படீன்னு உங்கள தேடிகிட்டு வந்துடும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! சாப்பிட்டுதான் பாருங்களேன்…..
வாழைப்பழம்!
ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5-HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா?
டோஸ்ட்!
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா எனக்குதான் இது நம்புற மாதிரி இல்ல…..
என்ன உங்களுக்குமா?
சரி விடுங்க, நம்ம சந்தேகத்தை நிவர்த்தி பண்றமாதிரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களா இந்த விஞ்ஞானிங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்த்துடுவோம்.
அதாவது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறதாம். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாம். எப்படின்னா, இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்யும் சமிக்ஞைகளை உருவாக்குகிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது!
ஓட் மீல்!
இந்த ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்கா காரைங்க ஓட் மீல் அப்படீங்கிறாய்ங்க! ஆமா, உங்கள்ல (வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள்) எத்தன பேரு ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்+பால் சாப்பிடுறீங்க? கண்டிப்பா, மிக குறைவான எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள்தான் ஓட்ஸ் சாப்பிடுறாங்கன்னு நெனக்கிறேன்?!
ஏன்னா, ஒரு நீயா நானா விவாதத்துல பார்த்தேன். சரி அத விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம்…..
அதாவது, மேலே சொன்ன டோஸ்டு மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட, அதன் விளைவாக உறக்கம் தூண்டும் மூளை ரசாயனங்கள் சுரந்து, கடைசியா…..
“உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே…… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே……”அப்படீன்னு நாம தூங்கிடலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். (முக்கியமா ஓட்ஸுலயும் மெலடோனின் அதிகமா இருக்குதாமாம்!) என்ன முயற்சி செஞ்சி பார்க்குறீங்களா?
கதகதப்பான பால்!
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?
ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?
ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு.
ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்!
என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க?
ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……!
நான் போய்ட்டு வரேன்……. :-)

காதலனுடன் ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு..





பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப


்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ.

அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள், ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்

நீங்கள் வைத்திருக்கும் PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!!

நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம்
அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால்
அந்த கடைக்காரர் அந்த
RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும்
அல்லவா.

இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று 
நம்புகிறேன்.இப்போது PENDRIVE வேண்டிய அளவில் 
கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் 
அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம் 

PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7): 

1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் 
வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி 
உள்ளவாறு Advance System Settings க்கு செல்லவும்.


2.

Advance என்னும் Tab ஐ கிளிக் செய்து Performance என்னும்
பகுதி யில்
Settings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும்
இரண்டாவது
(Advance) Tab ஐ கிளிக்செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக்
செய்யவும்.
3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் 
இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட்
 பண்ணவும்
"Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.



4.உங்களுடைய PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MB ஐயும் 
maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் 
தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் 
உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.     

இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு 
இதில் சிறிய மாறுபாடு உள்ளது.

ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?



உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

புகை பிடிப்பவரா நீங்கள் .....? இதை கொஞ்சம் பாருங்கள்


புகை பிடிக்கும் பழக்கம் 3000 வருடங்களுக்கு முன்பாகவே இந்த உலகில் தோன்றி உள்ளது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இன்றைய உலகில் புகை பிடிப்பது ஒரு ஸ்டைலான காரியமாக மாறி உள்ளது . டென்ஷன் ஆனால் தான் புகை பிடிக்கிறோம் என அநேகர் சாக்கு சொல்லுகிற போது அநேகம் இளைஞர்கள் .., ஏன் மாணவர்கள் கூட புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது . உண்மையில் இந்த புகை பிடிப்பதால் வருகிற காரியங்களை கொஞ்சம் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது .





சிகரட்கள் கிட்டத்தட்ட 4000 வேதிபொருட்களை கொண்டுள்ளது அவற்றில் 100 க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த உண்மை . தகவலுக்கு : http://quitsmoking.about.com/od/chemicalsinsmoke/a/chemicalshub.htm . சிகரெட்டில் கலந்துள்ள பொருட்களை அறிந்து கொள்ள கொஞ்சம் http://quitsmoking.about.com/cs/nicotineinhaler/a/cigingredients.htm பாருங்கள் .


சிகரெட்டில் உள்ள நிகோட்டின் புகையை உள் இழுக்க ஆரம்பித்த 10 வினாடிகளுக்குள் மூளையை சென்று அடைந்து விடும் . இது உடலின் எல்லா பகுதிகளிலும் கலந்து இருக்கும் . புகை பிடிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு இருக்குமாம் .
சிகரெட்டில் உள்ள கார்பன் monaxide ரத்த சிவப்பணுக்களின் ஹீமோ க்ளோபினை பாதித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜென் கிடைக்காமல் செய்து விடும் .
சிகரெட்டில் உள்ள கான்சர் உருவாக்கும் நச்சு பொருட்கள் , செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான ஜீன்களை பாதித்து அவற்றின் மூலம் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி உண்டாகி கான்சர் உருவாகிறது .
புகை பிடிப்பதினால் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .
சேதமடைந்த செல்களை சரி செய்யும் antioxidants அளவு ரத்தத்தில் புகை பிடிப்பதின் மூலம் குறைகிறது .
புகை பிடிப்பவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன அருகில் நிற்ப்பவருக்கும் இதே பாதிப்பை ஏற்ப்படுதுகிறார் .


இத்தனை பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் இந்த புகை பழக்கத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சமுதாயம் உள்ளது . என்ன தான் சொன்னாலும் சம்பந்தப்பட்ட நீங்கள் முடிவு எடுத்தால் தான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடிகோல முடியும் .


டிஸ்கி : இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கு இரண்டு காரியங்கள் நியாபகத்திற்கு வருகிறது .

கடவுள் மனிதன் புகை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவனது மூக்கு தலைக்கு மேலே புகை போக்கி போல வைத்திருக்கலாம் .
ஒரு சிகரெட்டின் அளவு குறைய குறைய அதை புகைப்பவரின் ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது .

பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!



பிறந்த குழந்தைகளுக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்ககூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கனும். குழந்தை தலையிலும் உடம்பிலும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் பொடியை போட்டு இறக்குங்க. பின்னர் அந்த எண்ணையை குந்தைக்கு பயன்படுத்துங்க.

குழந்தைக்கு 1 வயது வரும் வரை இந்த எண்ணையை தான் தேய்க்கனும். ஆனால் இந்த எண்ணெய் நல்லா போகுற மாதிரி தேய்ச்சி குளிப்பாட்டனும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்பில் சொறி சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டு போல் இருக்கும்.  பொதுவாக குழந்தைகளுக்கு நான்கு வயது வரை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பாட்டுவது தான் உசிதம். நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது.

முன்னெல்லாம்  ப்ரெஷ்ஷா தேங்காய் பால் எடுத்து காய்ச்சி அதிலிருந்து எண்ணை எடுத்து குழந்தைகளுக்கு தேய்ச்சி குளிப்பாட்டுவாங்க.. இப்பவும் கேரளாவுள அப்படிதான் செய்யறாங்க. ஆனா இந்த காலத்துல உடனுக்குடன் எண்ணெய் எடுக்குறதுலாம் முடியுற காரியமா? அதுக்கு பதிலா நல்ல தேங்காய் எண்ணெய்யை இரண்டு கரண்டி அளவுக்கு எடுத்து சுட வைத்து அதுல கால் கரண்டி தேங்காய்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா  தேங்காய் பால் சடசடங்கற சத்தத்தோட முறிஞ்சு ப்ரெஷ் தேங்காய் எண்ணையை கமகமன்னு மணக்கும்.

இதை குழந்தையோட தலை உடம்புன்னு ழுழக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைபசை போக சீயக்காயெல்லாம் போக்கூடாது.. பாசிப்பயறு அல்லது கடலைமாவு தேய்ச்சு குளிப்பாட்டினாலே எண்ணைபசை போயிடும். இப்படி குளிக்க வைச்சா குழந்தைக்கு கரப்பான் சொறிசிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கதுலேயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலேயே

குழந்தைகள் தலைக்குக் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டுக் குளிப்பாட்டுவது நல்லது. மாதமொரு முறை வெந்தயம் 1 ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிஷம் ஊறியபின் குளிப்பாட்டுவது சூட்டைத் தணிக்கும். கிருமிகள் அணுகாமல் தடுக்கும்.

பிறந்த குழந்தைகளுக்கு வேம்பின் கொழுந்து இலை சிறிதளவு, 2 மிளகு, சீரகம் இவைகளை மை போல் அரைத்து, அதில் சுண்டைக்காயளவு வெந்நீரில் கலக்கி, எண்ணெய் ஸ்நானம் முடிந்ததும் கொடுத்துவர, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.

உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!


உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

பெரிய அலை மின் நிலையம்

மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் , மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அணைத்து நாடுகளும் முயன்று வரும் சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஓன்று பிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.





அயர்லாந்து வை தலைமையிடமாக கொண்ட Open Hydro என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொறுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது . இந்த டர்பைன்கள் ஒவ்வொன்றும் 2 MWe மின்சாரத்தை கொடுக்கும் சக்தி படைத்தவை .


72 அடி விட்டமுள்ள இந்த டர்பைன்கள் கடலில் 115 அடி ஆழத்தில் நிறுவப்பட போகிறது . 2012 ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த அலை மின் நிலையத்தின் மூலம் 4000 வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது .

பாரிமுனை என்ற பெயர் வர காரணம் ( வரலாற்று சுவடுகள் ) !!!


மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு? பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்? சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.

பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது. தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார். கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்துகொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.

வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள். திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.
இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்தபிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ். அப்போதுதான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.
ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி. 1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare). பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம். கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர். இந்தளவு மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும்தான் காரணம்.

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போனபோது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.

'உல்லாசமாக' வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி. தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி. தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண்பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார். 1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார். ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

* தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது
* முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
* அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது.

ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்! நிம்மதி பெறுங்கள்!

ஒரு அறிஞரின் கூற்று : ஏழு குணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் உடல் ரீதியாக நிம்மதி பெறுங்கள். கண்ணியம் மற்றும் பொருளாதாரத்தில் பாதுகாப்பு பெறுங்கள் :

  1. உங்களை விட்டுப்போன பொருளைப்பற்றி கவலை கொள்ளாதே.
  2. உன்னை அடையாத விஷயத்தைப்பற்றி பயம் கொள்ளாதே.
  3. உன்னிடமும் அதே போன்ற ஒரு குறையிருக்க அதற்காக நீ அடுத்தவரை இழித்துரைக்காதே.
  4. நீ செய்யாத வேலைக்கு கூலியை எதிர்பார்காதே.
  5. உன் உடமை (மனைவி) அல்லாத வேறு பொருளை (அன்னியப்பெண்னை) இச்சையோடு பார்க்காதே.
  6. உன் கோபம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதே அப்படிப்பட்ட கோபம் கொள்ளாதே.
  7. இறைவன் தான் அனைத்தையும் செய்விக்கிறான் என்று எண்ணாதவனை நீ புகழாதே.

உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே!!!

சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்:
நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் மிகமிக முக்கியமாகும்!அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் இணையத்தில் உள்ளதை எடுத்து அனுப்பியுள்ளார்


1.
சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
10,
சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.

2.
அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3.
சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

4.
சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5.
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!

6.
சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.

நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!

7.
மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு.எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!

இது எனக்கு மெயிலில் வந்தது அனைவரும் பயன்பெற தந்துள்ளேன். படித்து அதன்படி செயல்படுங்கள்,உயிர் இருக்கும்வரை உடல் ஆரோக்கியம் முக்கியமே !!!

உங்க உடம்பை நீங்கதானே பார்த்துக்கொள்ளோனும் அதுக்குதேன் இதெல்லாம் ஓகேவா..

ஜூலை 09 - 2012 இணையத்தை முடக்க போகும் வைரஸ், உங்கள் கணினியை காப்பாற்ற.......




ஜுலை 07: இன்றைய இணையதளங்களில் ஹாட் டாபிக் இது தான். வரும் திங்கட் கிழமை 9 July 2012 அன்று பெரும்பாலான கணினிகள் இணையத்தை பயன்படுத்த முடியாது. DNS Changer என்ற வைரஸ் இணையத்தை முடக்க போகிறது என்று. இதை பற்றி சற்று விரிவாக மற்றும் இந்த வைரஸில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பற்றியும் கீழே காண்போம்.

DNS(Domain Name System) என்பது நாம் கொடுக்க கூடிய தளத்தின் முகவரியை (ex: www.google.com) கணினிக்கு புரியும் வகையில் அந்த தளத்தின் சரியான ஐபி எண்ணாக மாற்றி அந்த குறிப்பிட்ட தளங்கள் திறக்க உதவி புரிகிறது. உதாரணமாக www.facebook.com என கொடுத்தால் 204.15.20.0 என்ற ஐபி எண்ணாக மாற்றி தரும்.



இப்பொழுது ஆரம்பித்துள்ள புதிய பிரச்சினை என்னவென்றால் DNS Changer என்ற ஒரு அபாயகரமான வைரசை உருவாக்கி உள்ளனர். இந்த வைரஸ் DNS சர்வர்களில் புகுந்து நாம் கொடுக்க கூடிய இணைய முகவரியை போலியான ஐபி முகவரியை மாற்றி உங்கள் இணையத்தை செயலிழக்க வைக்கின்றனர். மற்றும் போலி தளங்களை வர வைத்து பணம் பறிக்கவும், கணினியில் மால்வேர்களை புகுத்தி சில முக்கிய ரகசியங்களையும் திருடுகின்றனர். இந்த வைரஸ் கடந்த வருடம் நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இது வரை உலகம் முழுவதும் பல லட்ச கணக்கான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வருடம் வைரஸ் உருவாக்கப்பட்டும் இன்னும் பலர் தொடர்ந்து எந்த பதிப்பும் இல்லாமல் இணைய சேவையை பெற்று கொண்டிருக்க காரணம் அமெர்க்காவின் உளவு அமைப்பான FBI இந்த வைரசை கண்டறிந்து உள்ளனர். இது சம்பந்தமாக FBI இதுவரை 7 பேரை கைது செய்து உள்ளது. அதில் 6 பேர் எஸ்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒருவர் ரஷ்யாவை சேர்ந்தவர். இந்த வைரஸிற்கு தற்காலிக தீர்வாக தற்காலிக DNS சர்வர்களை நிறுவி அதன் மூலம் DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்ட கணினிகளும் தொடர்ந்து இணைய சேவையை பெற்று வந்தன.

இப்பொழுது பிரச்சினை என்னெவென்றால் இந்த தற்காலிக DNS சர்வர்களின் செயல்பாடு வரும் திங்கட் கிழமை 9 ஜூலை 2012 அன்று நிறுத்த பட இருக்கிறது. ஆதலால் பாதிக்கப்பட்ட கணினிகள் தொடர்ந்து இனி இணைய சேவையை பயன்படுத்த முடியாது. ஆகவே வைரசை இன்னும் நீக்காமல் இருக்கும் கணினிகள் வரும் திங்கட் கிழமை முதல் இணையத்தை பயன்படுத்த முடியாது. அல்லது பயன்படுத்தினால் உங்கள் கணினிகள் மேலும் பாதிக்கப்படலாம். இதனால் உலகம் முழுவதும் சுமார் 277,000 கணினிகள் பாதிக்க படலாம் என கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 64,000 கணினிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக FBI அறிவித்து உள்ளது.

உங்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய: 
உங்கள் கணினி DNS Changer வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என அறிய இந்த தளத்திற்குwww.dns-ok.us சென்றால் போதும் உங்கள் கணினி பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை இந்த தளம் உங்களுக்கு சொல்லி விடும். கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதிக்க படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் தெரியும்.


இந்த வைரசை முற்றிலுமாக அழிக்க :
ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தைforms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு:

DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.


ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு:

மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Toolடவுன்லோட் செய்து நீக்கி கொள்ளுங்கள்.

Source - www.fbi.gov

குறைந்த கால அவகாசமே இருப்பதால் இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து கூடிய விரைவில் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்


முதுகுவலியை தவிர்க்க 10 சிறந்த வழிகள்


முதுகுவலி வராமல் தடுக்க டிப்ஸ்

1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.

2. தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.

3. உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.

4. நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.

5. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.

6. அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.

7. அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.

8. அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.

9. முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.

கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்

1. தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.

2. வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.

3. குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.

4. நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.
.