Recent Video

Showing posts with label muthupet news. Show all posts

முத்துப்பேட்டையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான இரு கார்கள்..

முத்துப்பேட்டையில் இன்று அதிகாலையில் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இரு கார்களும் நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த காரும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த காரும் முத்துப்பேட்டை ECR பகுதியில் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவமைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை ஆசாத நகர் ஜாம்வோனோடை புதிய இணைப்பு பாலம் விரைவில் திறப்பு விழா கண்டு மக்களின் பயன் பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன் காட்சியை இங்கு பாப்போம்..


100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர் சம்பளம் உயர்வு

சென்னை: நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு நாள் சம்பளத்தை ரூ132 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் ஊரக பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிப்பதாகும். வறுமையை உருவாக்கும் காரணங்களாக உள்ள வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம், இயற்கை ஆதாரங்களின் மேம்பாட்டினை உறுதி செய்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது குறிக்கோளாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், காடு வளர்ப்பு போன்ற பல்வேறு கிராம நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு இதுவரை ஊதியமாக ரூ119 நிர்ணயம் செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ132 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். 

வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்



வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்


வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது.
பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.
அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.
பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.
ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

“இந்த காய் சாப்பிடு, அந்த காய் சாப்பிடு’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சொக்லேட், ஐஸ்கிரீம் எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு.
இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு.
ஆனால் “இதை சாப்பிடு, அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறது” என்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு, சாப்பிடு என்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள்

சிறைக்குள் எங்கள் குழந்தைகள்
உருக்குலைந்து போனார்கள் !
அவர்கள் மரிக்கும் முன்னரே
விடுதலை செய் தமிழக அரசே ! !

police working



I Am Proud To Be An Indian . . . .his name is abdulla. . . .
.