Recent Video

Showing posts with label ஆரோக்கியம். Show all posts

நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்





பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும்போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை


உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுரு வக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய் களை தடுக்கிறது.

நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat – 65%

Mono – unsaturated fat – 32%

Linoleic – unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள் வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி...

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

o ஞாபக சக்தியை தூண்டும்

o சரும பளபளப்பைக் கொடுக்கும்

o கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின் மையேஸ

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலு க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர் களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போ தை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க





பருவகாலம் மாறுவது உடலுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். அதிலும் மழைக்காலம் வந்துவிட்டால், உடலில் இருமல், சளி மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்றவை வந்துவிடும்.
ஆகவே வரும் முன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப அத்தகைய நோய்கள் வருவதற்கு முன் எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்று இருக்கிறது. அப்படி எதுவும் வராமல் ஆரோக்கியமாக இருக்க ஒரு சில டிப்ஸ்கள் இருக்கிறது.

மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க

1. குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம்:

கோடை காலத்தில் வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து குடிப்போம்.

ஆனால் மழைக் காலத்தில் அந்த பழக்கத்தை தொடர வேண்டாம். சில சமயம் அதை குடிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அப்படி குடிக்க வேண்டாம். இல்லையென்றால் வராத நோயை வர வைத்துக் கொண்டது போல ஆகிவிடும்.

2. உணவில் கட்டுப்பாடு வேண்டும்:

மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் மழைக்காலத்தில் தெரு ஓரத்தில் நிறைய நீர் தேங்கியிருப்பதால் கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அதிகம் இருக்கும்.

எனவே தெரு ஓரத்தில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மக்கிய காய்கறிகள், நாள்பட்ட தயிர், சுத்தமில்லாத தண்ணீர் அனைத்துமே உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியது. ஆகவே அனைத்தையுமே பார்த்து வாங்க வேண்டும்.




3. சுகாதாரம் தேவை:

மழைக்காலத்தில் நிறைய தொற்று நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதிலும் அந்த நேரத்தில் மழையால் பாதமானது ஈரமாக இருக்கும்.

ஆகவே அடிக்கடி கால் விரல்களில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் கூந்தலை அதிகம் பாதிக்கும், ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும், மறக்காமல் கூந்தலை நீரில் அலச வேண்டும்.

மேலும் காலணியை வெயில் அடிக்கும் போது, வெயிலில் வைத்து காய வைத்தால், காலணியில் இருக்கும் பாக்டீரியா மற்றும் மற்ற கிருமிகள் இருந்தால் அழிந்து விடும்.

மேலும் சுத்தமான உடைகளையே தினமும் உடுத்த வேண்டும். இதனால் உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம்.






4. வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும்:

குளிக்கும் போது ஷவரில் குளித்தால் இருமல் அல்லது காய்ச்சல் போன்றவை வரக்கூடும். ஆகவே குளிக்கும் போது வெதுவெதுப்பான சுடு நீரில் குளித்தால் எந்த ஒரு நோயும் வராது.

மேலும் சுடு தண்ணீர் உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். ஆகவே சுடு தண்ணீரில் குளித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

மனிதனின் உடல் ஒரு அதிசயம்


மனிதனின் உடல், அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ ஆக
ும். மனித உடலில் 60 சதவீதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும்.

இதயம் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை 1.68 கோடிமைல் நீள இரத்தக் குழாகளின் வழியே பரவச் செய்கிற
து. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடையுள்ள பொருளை பூமியில் இருந்து 1 அடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் வளர்ச்சியையும் பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு மனிதன் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்று விடுகிறான். 40 வயதிற்கு மேல் வளர்ச்சி நின்று விடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இது குறுத் தெலும்புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது.

நாம் பகலை விட இரவில் தான் அதிக அளவில் வளர்கிறோம். குழந்தைகள் கோடைக்காலத்தில் மழைக் காலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது உறங்கும்போது கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சியடைந்த ஆண் ஓய்வாக இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடி துடிப்பு அன்பது இதயத்தின் துடிப்பையே குறிக்கும். மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது உடலசுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சியடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கிவிடும்.உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும்போது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். கருத்த முடி உடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்கால், விரல்களின் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

குழந்தை பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும். இவற்றுள் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லைவிட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவுள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும். அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த வகையான சத்துக்கள் தேவை !!!



ஆகஸ்ட் 06: கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். 

உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.

பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும் கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது.

இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.


கர்ப்ப காலங்களில் கால அட்டவணைப்படி நேரத்திற்கேற்ப நன்கு சாப்பிட வேண்டும். சரியான உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமாகும்.அதுதான் சிசுவுக்கும் தாய்க்கும் சிறந்ததாகும். 


கருத்தரித்த ஆரம்பத்தில் இருந்தே கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் இயல்பாக மூச்சு விட முடியாது. குழந்தைக்கும் அதிக அழுத்தம் தரக்கூடும். அதனால் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கலாம். நீங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் அதிக வேலைகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். குறைந்த அளவு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.

மாதா மாதம் கண்டிப்பாக மருத்துவமனை சென்று இரத்தப் பரிசோதனை செய்வது மிக அவசியம். இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள முடியும். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்து விட்டு எழும்பும் போது கவனமாக எழ வேண்டும். வயிற்றில் ஏதேனும் அடிக்க நேரிடும்.

இயல்பாக கா்ப்பிணிப் பெண்களுக்கு மயக்கம் வருவது இயல்பு. அதனால் தனியாக வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர்ப் போத்தல் அல்லது ஜுஸ் எடுத்துச் செல்ல வேண்டும்.
.