விஜய் படத்தின் 'துப்பாக்கி' தலைப்பை மாற்ற முடிவு?

சென்னை, செப்.25 (டிஎன்எஸ்)விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்பிற்கான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டிருப்பதால், அப்படக்குழுவினர் மிகவும் சோர்ந்துப்போயிருக்கிறார்கள். இதற்கிடையில் படத்தை தீபாவளியன்று வெளியிடப்போவதாகவும் அறிவித்திருப்பதால், வேறு வழி இல்லாமல் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவள்கள் வெளியாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் தலைப்புக்கு எதிராக 'கள்ளத்துப்பாக்கி' என்றப் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயின் துப்பாக்கி படத்திற்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு விசாரனைக்கு வரும்போதெல்லாம் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் சோர்ந்துபோயிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதியன்று படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதால், படத்திற்கான விளம்பரங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. எனவே துப்பாக்கி தலைப்புக்கு பதிலாக 'சரவெடி' அல்லது 'மும்பை தமிழன்' என்ற இரண்டு தலைப்புகளில் எதையாவது ஒன்றை வைத்துவிடலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம்.

இதற்கிடையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதியன்று மீண்டும் 'துப்பாக்கி' படத்தின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதும் தடை நீடிக்கப்பட்டால், கண்டிப்பாக துப்பாக்கி படத்தின் தலைப்பு மேலே கூறிப்பிட்ட இரு தலைப்புகளில் எதாவது ஒன்றாகத்தான் இருக்கும். (டிஎன்எஸ்)

0 comments:

போலீஸ் கமிஷ்னரிடம் இயக்குநர் பிரபு சாலமன் புகார்


 போலீஸ் கமிஷ்னரிடம் இயக்குநர் பிரபு சாலமன் புகார்
சென்னை, செப்.25 (டிஎன்எஸ்)இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்திருக்கும் படம் 'சாட்டை'. பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த வாரம் வெளியான இப்படத்தின் திருட்டு வி.சி.டி க்கள் சென்னையில் விற்கப்படுவதாக கூறி, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபு சாலமன் இன்று (செப்.25) சென்னை, போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.

புகாரி கூறியிருப்பதாவது, "நான் சாட்டை என்ற படத்தை தயாரித்தேன். அப்படம் சமீபத்தில் ரிலிசானது. சாட்டை படத்தை திருட்டு சி.டி.யில் தயாரித்து விற்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்களிலும் சாட்டை திரைப்படம் திரையிடப்படுகிறது. இணையதளங்களிலும் படத்தை வெளியிட்டுள்ளனர். திருட்டு வி.சி.டி விற்பவர்களை தண்டிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறிப்பிடப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

0 comments:

.