உருளைக்கிழங்கை வளர்க்க ஈஸியான வழி இருக்கு...
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கு மிகவும் பிடித்தது. அத்தகைய காய்கறியை வீட்டில் உள்ள தோட்டத்தில் வளர்த்தால், வீட்டில் சமைக்கும் குழம்பு, கிரேவி, சூப், சாலட், ஸ்நாக்ஸ் போன்றவற்றில் ஈஸியாக பயன்படுத்தலாம். இத்தகைய உருளைக்கிழங்கில் பல வகைகள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன. மேலும் அவை மிகவும் அழகான வடிவத்தில், நிறத்தில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சில சமயங்களில் புளுக்கள் புகுந்து, பூச்சிகள் அரித்து, கருப்பாக காணப்படும். இத்தகைய காயை கடைகளில் வாங்குவதை, வீட்டுத் தோட்டத்தில் சரியாக வளர்த்தால், வீட்டிலேயே சூப்பரான உருளைக்கிழங்கை பெறலாம். அதுமட்டுமல்லாமல், உருளைக்கிழங்கை வளர்க்க ஆறு வழிகள் இருக்கின்றன. இப்போது அதில் நல்ல பிரபலமான 2 வழிகளைப் பார்ப்போமா!!!
* இது மற்றொரு வகையான பொதுவாக முறையாகும். இதற்கு முளைக்கட்டிய உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டவும். முக்கியமாக ஒவ்வொரு துண்டிலும், இரண்டுக்கு மேற்பட்ட கண்கள் இருக்க வேண்டும். இப்போது அதனை ஒரு காகிதத்தில் மடித்து, 24 மணிநேரம், லேசான ஈரப்பதமான இடத்தில் வைக்க வேண்டும். இதனால் தண்டுகள் ஈஸியாக வளர்ந்துவிடும். பின் அந்த காகிதத்தில் மக்கிய இலைகளைப் போட்டு, நன்கு மூடி, தரையில் 4 இன்ச் வரை குழிதோண்டி, அதனை வைத்து, ஒரு சிறு ஓட்டையை போட்டு, தரையில் வைத்து, மண்ணால் மூடி, தண்ணீர் ஊற்றி வரவும். எப்போது அது வளர்ந்து, அதன் இலைகள் ப்ரௌன் நிறத்தில் மாறி வருகிறதோ, அப்போது அதனை வெளியே எடுத்து வைத்து, 24 மணிநேரம் அதனை நீரில் தேய்ககாமல், அதில் உள்ள மண்ணை மட்டும் நீக்கிவிட்டு, பின் பயன்படுத்த வேண்டும்.
மேற்கூறியவாறு செய்தால், உருளைக்கிழங்கு நன்கு வேகமாக வளரும். ஆமா, நீங்கள் எப்படி வளர்க்குறீங்க...
0 comments:
Post a Comment