டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை : மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைப்பு










தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழு

அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அமைக்கப்பட்டுள்ள

இந்தக் குழுக்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கள இயக்குநர்கள்,

சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வார்டுகளில், மருந்து மாத்திரைகளின் கையிருப்பை அதிகரிக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மாநிலம் முழுவதும் 400 இடங்களில் டெங்கு மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


200 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை : இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்ச்ல அறிகுறியுடன் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை தலைமை அரசு மருத்துவமனையில் 222 பேரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 22 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, நாகை மருத்துவமனையில் 10 அறைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தனியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 11 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 25 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

0 comments:

.