கல்லூரியில் படிக்க உதவித்தொகை எங்கு கிடைக்கும்?
பள்ளி ஆரம்பித்து கல்லூரி வரை படிக்கவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல மாணவர்கள் தங்கள் கல்வியை பின் தொடர முடியாத நிலை இருக்கிறது. இம்மாதிரியான மாணவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் கல்வி உதவித்தொகைகள், பாடப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், வழங்கி வருகின்றன. இம்மாதிரியான விஷயங்களை அனைத்து மாணவர்களும் தெரிந்துகொண்டால், இளநிலைப் பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு உதவித்தொகையை வைத்துக்கொண்டே படித்து முடித்துவிடலாம்,
கலை அறிவியல் கல்லூரி , பொறியியல் கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து தகவல்கள் இதோ:
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன்
ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் என்ற அமைப்பு பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் மூன்று ஆண்டுகாலம் படிப்புக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான உதவித்தொகை அளிக்கிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். சாதி, பாலினம் போன்ற எந்த விதிவிலக்கும் இந்த உதவித்தொகைக்கு கிடையாது.
விவரங்களுக்கு: www.ryabookbank.com
ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட்
படிக்கும் ஆர்வமும் அதேநேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட். இந்த தனியார் நிறுவனம் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களும் சிறந்த கல்வியை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த உதவித்தொகையை அளித்து வருகிறது. இளநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பயின்றுகொண்டிருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள், Jaigopal Garodia Scholarships Centre, Jaigopal Garodia Vivekananda Vidyalaya Trust, U – 6, Seventh Street, Anna Nagar, Chennai. தொலைபேசி எண் : 26206261 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கௌரவ் ஃபவுண்டேஷன்
0 comments:
Post a Comment