உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்


நீச்சல் குளங்களை குறித்து அறியாத யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.   நகரங்களில் இந்த நீச்சல் குளங்கள் செயற்கையாக கட்டப்பட்டும்  . கிராமங்களில் இந்த நீச்சல் குளங்கள் இயற்கையாக ( அதாங்க நம்ம ஊரு குளம் .. ஹி ஹி ) அமைந்தும் உள்ளது.  இந்த நிலையில்  இந்த உலகின் மிக நீண்ட நீச்சல் குளத்தை ஜெர்மனியில் கட்டுவதற்கு Realitties : United என்ற நிறுவனம் வடிவமைப்பை தயார் செய்துள்ளது.  
 
 
 
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஓடும் Spree என்ற நதியில் தான் இந்த பெரிய நீச்சல் குளம் கட்டப்பட போகிறது .  இந்த நீச்சல் குளத்தின் நீளம் 745 மீட்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  17  ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் மொத்த நீளத்தை விட இது அதிகமாகும். 
 
3.9  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையும் இந்த பெரிய நீச்சல் குளத்தின் தண்ணீரானது நீச்சல் குளத்தின் ஆரம்பத்தில் 1 . 8 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாணல் படுகையினால் வடிகட்டப்பட்டு நீச்சல் குளத்தினுள் அனுமதிக்கப்படும்.   நீச்சல் குளத்தின் பின் பகுதியில் குறுக்காக ஒரு அணை கட்டப்பட்டு சுத்திகரிக்கப்படாத நீர் பின்னால் நீச்சல் குளத்திற்குள் வராமல் தடுக்கப்படும்.
 
 
 
ஆற்றங்கரையின் பல பகுதிகளில் இதற்காக படிகள் அமைக்கப்பட்டு , தோட்டங்கள் , பூங்காக்கள் , உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படுவதினால் ஜெர்மன் மக்கள் அநேகர் இந்த நீச்சல் குளத்திற்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த திட்டம் மிலன் நகரில் நடந்த மூன்றாவது  உலகளாவிய  ஹல்சியம் அவார்ட்ஸ் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் . 

0 comments:

.