Recent Video

வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்



வேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்


வேலை தேடுபவர்களுக்கு பயோடேட்டாவின் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். நல்ல வேலை கிடைப்பது நல்ல பயோடேட்டாவை சார்ந்தே இருக்கிறது.
பயோடேட்டா பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் பலருக்கும் தெரியாத விஷயம் பக்காவான பயோடேட்டாவை தயாரிப்பது எப்படி என்பது தான். அதிலும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இந்த குழப்பம் அதிகமாகவே இருக்கும்.
நல்ல பயோடேட்டாவிக்கு என்று எழுதப்படாத விதிகள் எதுவும் இல்லாவிட்டாலும் பலவித குறிப்புகளும் ஆலோசனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. இவை மேலும் குழப்பலாம்.
பயோடேட்டா விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாக புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக பயோடேட்டாவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை.
அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்து கொண்டால் பயோடேட்டா பயோடேட்டாவாக இருக்காது.
பயோடேட்டா நிறுவன அதிகாரியை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் அலங்காரங்க‌ளையும் பொய்யான தகவல்களையும் இடம்பெற வைக்க வேண்டியதில்லை.
பக்காவான, செயல்திறன் மிக்க பயோடேட்டாவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம் மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது.
இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல பயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்து கொள்கிறது.
வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதை கொண்டு அழகான பயோடேட்டா ரெடியாகி விடுகிற‌து.
பயோடேட்டாக்களுக்கு என்று நாலைந்து வகையான பொதுவான டெம்ப்லேட்கள் இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.
அதற்கு முன்பாக பாயோடேட்டாக்களின் மாதிரியை பார்த்து கொள்ள்லாம். துறைவாரியாக சம்பிக்கப்பட்ட பயோடேட்டாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன.
ஆனால் மூர்த்தி தான சிறியதே தவிர கீர்த்தி பெரிது தான். அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன.
ஆக பக்காவான பயோடேட்டாவை வெகு சுலபமாக இந்த தளத்தின் மூலம் உருவாக்கி கொண்டு விடலாம். இது முதல் படி தான். இந்த பக்காவான பயோடேட்டாவை அப்படியே அச்சிட்டு கொள்ளலாம்.
பிடிஎப் கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம். இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தள‌ங்கள் மூலம் பகிர்ந்து கொள்ள‌லாம்.‌
ப‌யோடேட்டாக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

குழந்தைகளை சாப்பிடச் சொல்லி தொந்தரவு செய்ய வேண்டாம்: ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

“இந்த காய் சாப்பிடு, அந்த காய் சாப்பிடு’’ என்று குழந்தைகளை அளவுக்கு மீறி தொந்தரவு செய்தால் அவர்கள் சாப்பிடும் அளவு குறைந்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சொக்லேட், ஐஸ்கிரீம் எவ்வளவு கொடுத்தாலும் பிள்ளைகள் சாப்பிடுவார்கள். சோறு என்றாலே எரிச்சலாவார்கள். நாலு வாய் சோற்றை அரை மணி நேரமாக சாப்பிடுவது இதன் வெளிப்பாடு.
இதுபற்றி அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகம் மற்றும் அப்பலேச்சியன் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தினர்.
4 வயது குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டிருப்பதாவது: அதிக சத்துள்ள காய்கறிகள், பழங்கள் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டு.
ஆனால் “இதை சாப்பிடு, அதை சாப்பிடு. இதில் நிறைய சத்து இருக்கிறது” என்று பெற்றோர் திரும்ப திரும்ப சொல்லும் போது அந்த உணவு மீது அவர்களுக்கு வெறுப்பு வருகிறது. அதை தவிர்க்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு காய், பழம் அல்லது உணவு பொருளை குழந்தைகளிடம் கொடுத்து சாப்பிடு, சாப்பிடு என்று பல முறை கட்டாயப்படுத்துவதைவிட அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது.
இதில் ஏதோ சத்து அல்லது ருசி இருப்பது போல தெரிகிறது. சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்து அவர்களாகவே சாப்பிடுவார்கள்

சிறைக்குள் எங்கள் குழந்தைகள்
உருக்குலைந்து போனார்கள் !
அவர்கள் மரிக்கும் முன்னரே
விடுதலை செய் தமிழக அரசே ! !

police working



I Am Proud To Be An Indian . . . .his name is abdulla. . . .
.