Recent Video

நமது பாரம்பரிய விளையாட்டுகள்.....

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை,
விளையாடப்பட்ட
விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர்
தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக
இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள்
அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர்
வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்)
கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

என்ன மூச்சு முட்டுகிறதா..?
போய் தண்ணீர் குடித்துவிட்டு,
உங்கள் கணிப்பொறியில்
cricket, car race விளையாடுங்கள்..

நமது பாரம்பரிய விளையாட்டுகள் எப்படிப்போனால் நமக்கென்ன..
?

கலவரம் நடத்தி உயிர்களை கொன்ற பெண் மருத்துவர்!



 குஜராத் இனப்படுகொலையின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட97 முஸ்லிம்களை கொடூரமாக கொலைச் செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தவர்களுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடுச் செய்யவேண்டும்.
2002 குஜராத் இனப்படுகொலையில் மிகவும் கொடூரமான கூட்டு படுகொலைதான் நரோதா பாட்டியாவில் நடந்தது. இதன் தீர்ப்பு இப்பொழுது  வெளிவந்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டோரில் 32 பேர் தண்டிக்கப் பட்டிருக்கின்றனர் 29 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 
மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி என்பவருக்குத்தான்  28 ஆண்டுகள் கடும்காவல் சிறையும், பாபு பஜ்ரங்கி என்பவருக்கு சாகும்வரை சிறையும் என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பதில் என்று நடத்தப்பட்ட இந்தப் படுகொலையில் ஒரு இடத்தில் மட்டும் கூட்டாக கொல்லப்பட்ட முஸ்லிம்கள் 97 பேர். அவர்களில் 36 பேர் குழந்தைகள், 35 பேர் பெண்கள். 9 மாத கர்ப்பிணியான கவுசர் பீவி என்ற பெண்ணின் வயிற்றைக்கிழித்து சிசுவை வெளியே இழுத்து வெட்டிக் கொன்ற குற்றவாளிகள்தான் தற்போது தண்டிக்கப்பட்டிருப்பவர்கள்.

சிறுமிகளும் பெண்களும் கணவன்மார்களின், சகோதரர்களின் கண் முன்னே ஹிந்துத்துவா வெறியர்களால் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு பின்னர் கண்டதுண்டமாக வெட்டிக்கொல்லப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு பாழுங்கிணற்றில் வீசப்பட்டனர். இப்படி பெண்களை கற்பழித்த இந்த கொடூர செயலை முன்னின்று நடத்தியது யார்தெரியுமா? அவர்தான் நரேந்திர மோடியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சர் மாயா கொத்தானி. இவர் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பழிவாங்க நடந்த கலவரம் என்று சங்க்பரிவார்கள் அளித்த விளக்கத்தை முற்றிலும் நிராகரித்த நீதிமன்றம் நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை முன்னரே திட்டமிட்டு தயார் செய்த சதித் திட்டம் என்று கூறியது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையிலும் இவ்வழக்கில் நீதி கிடைக்க போராடிய சமூக நீதி போராளி வழக்கறிஞசர் தீஸ்தா ஸெடல்வாட் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். 

வழக்கமாக கலவர வழக்குகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவது இல்லை. முதன் முறையாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
இத்தீர்ப்பு ஹிந்துத்துவா வகுப்புவாத வெறியை கட்டுப்படுத்தவும், சங்க்பரிவார சக்திகளை தளர்த்தவும் உதவும். உயர் கல்வி என்பது ஹிந்துத்துவா மதவெறிக்கு ஒரு தடையில்லை என்பதை மகப்பேறு டாக்டரும் பெண்கள் நலத்துறை அமைச்சருமான மாயா கொத்னானியின் செயல் நிரூபிக்கிறது. இதுபோன்ற தருணங்களில்தான் நாம் மிகவும் விழிப்போடு இருந்து மனித நேயம் காட்க்க வேண்டும். 
மனித நேயம் காப்போம்! மதவெறி ஒழிப்போம்!

கயமையே உன்பெயர்தான் உளவுத்துறையா?




அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் முக்கிய  பிரமுகர்களை கொலைச் செய்ய திட்டமிட்டதாக சில நாட்களுக்கு முன் பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் சில படித்த முஸ்லிம் இளஞ்சர்கள் கைது செய்யப்பட்டனர். 
இவர்களுக்கும் தடை செய்யப்பட்ட  வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாக பத்திரிக்கைகளில் செய்திகளை கொடுத்துள்ளது  உளIவுத்துறை. அச்செய்திகளுக்கு வழக்கம் போல கண், மூக்கு, காது வைத்து திரித்து எழுதி சிறுபான்மை எதிர்ப்பு உணர்வை தீர்த்து கொண்டன நமது மேல்ஜாதி பார்பன ஊடகங்கள்.
இந்த இளஞ்சர்களை பிடித்து சென்ற காவல்துறை இவர்களை எங்கே வைத்திருக்கிறோம், இவர்கள் மீது என்ன வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளனர். மேலும் இவர்களை சட்ட பூர்வமாக ஜாமீன் எடுக்கும் முயற்ச்சியை முடக்க பிர் நகலை கொடுக்க மறுத்துள்ளனர். இதன் மூலம் ஜனநாயக மற்றும்  சட்ட ரீதியான உரிமைகள் கூட முஸ்லிம்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் முஸ்லிம்களின் வாழும் அடிப்படை உரிமைகள் கூட கேள்வி குறியாகி உள்ளது.   மேலும் இந்த இளஞசர்கள் இதுவரை எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட்டவர்கள் இல்லை. இதில் ஒருவர் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஒருவர் என்கிற மத்தியஅரசின் கீழ்வரும் துறையில் வேலை செய்பவர், மேலும் இருவர் பிரபல முஸ்லிம் மதகுருவின் பேரப்பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்திய பயங்கரவாத உளவுத்துறை சிறுபான்மை மக்களுக்கும், தலித்களுக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரான சதிவலைகளை பிண்ணி வருகிறது. முஸ்லிம்களை மனோரீதியாக ஒரு குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதே இதன் நோக்கம். தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா சிறுபான்மை மக்களில் சிலரை பிடித்து உள்ளே போடு பின்னர் அவர்களை நாங்கள் விடுதலை செய்கிறோம் பேர்வழி அதனால் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லி ஒருபுறத்தில் கயமை அரசியல் மறுபுறம் ஹிந்துத்துவா சிந்தனை படைத்த காவல்துறை மற்றும் உளவுத்துறையால் இந்திய முஸ்லிம்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. முஸ்லிம்களின் கடைசி புகலிடமான நீதிமன்றங்களோ தொடர்ந்து முஸ்லிம்களை வஞ்சித்தே வந்துள்ளது. இந்த நிலை தொடருமேயானால் அது இந்தியாவை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயம் இல்லை.
*மலர்விழி*

மனிதனின் உடல் ஒரு அதிசயம்


மனிதனின் உடல், அதிசயங்கள் நிறைந்தது. ஒரு வருடத்தில் நமது கல்லீரல் 23 பால் லாரிகளில் நிரப்பக்கூடிய அளவுக்கு இரத்தத்தை வடிகட்டுகிறது. உடலில் கனமான உறுப்பு மூளைதான். இதன் எடை சுமார் ஒன்றேகால் கிலோ ஆக
ும். மனித உடலில் 60 சதவீதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும்.

இதயம் 24 மணி நேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் இரத்தத்தை 1.68 கோடிமைல் நீள இரத்தக் குழாகளின் வழியே பரவச் செய்கிற
து. இது உண்டாக்கும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடையுள்ள பொருளை பூமியில் இருந்து 1 அடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பிதான் உடல் வளர்ச்சியையும் பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு மனிதன் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்று விடுகிறான். 40 வயதிற்கு மேல் வளர்ச்சி நின்று விடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். இது குறுத் தெலும்புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது.

நாம் பகலை விட இரவில் தான் அதிக அளவில் வளர்கிறோம். குழந்தைகள் கோடைக்காலத்தில் மழைக் காலத்தை விட வேகமாக வளர்கிறார்கள். ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்போது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகிறது உறங்கும்போது கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது.

வளர்ச்சியடைந்த ஆண் ஓய்வாக இருக்கும் போது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடற்பயிற்சி செய்யும்போது இது 200 வரை உயரும். நாடி துடிப்பு அன்பது இதயத்தின் துடிப்பையே குறிக்கும். மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும்.

ஒவ்வொரு இரவிலும் தூங்கும் போது உடலசுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சியடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கிவிடும்.உட்காரும் போதும் நிற்கும் போதும் முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும்போது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது. சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். கருத்த முடி உடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உதடு, உள்ளங்கை, உள்ளங்கால், விரல்களின் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

குழந்தை பிறக்கும் போது 300 எலும்புகள் இருக்கும். இவற்றுள் 94 எலும்புகள் இளகி மற்றவற்றுடன் இணைந்து வளர்ந்த பருவத்தில் 206 ஆகிறது. எடையை தாங்குவதில் எலும்புகள் கருங்கல்லைவிட உறுதியானவை. ஒரு தீப்பெட்டி அளவுள்ள எலும்பு 9 டன் எடையை தாங்கும். அதாவது கருங்கல்லை போல நான்கு மடங்கு அதிகம்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எந்த வகையான சத்துக்கள் தேவை !!!



ஆகஸ்ட் 06: கர்ப்ப காலங்களில் பெண்களின் உடலில் உள்ள இரத்தத்தின் கொள்ளளவு 50 சதவிகிதம் அதிகமாகும். எனவே அவர்களுக்கு இந்த சமயத்தில் இரும்பு சத்து தேவை இரட்டிப்பாகும். 

உண்மையில், கர்ப்பம் இல்லாவிட்டாலும், பெண்களுக்கு ஆண்களை விட அதிக அயன இரும்பு சத்து தேவை. கர்ப்ப காலத்தில் போதிய இரும்பு சக்தி கிடைக்காவிடில், சிக்கல்கள் ஏற்படலாம்.

பாதாம் பருப்பில் இரும்பு, வைட்டமின்கள் மட்டும் இல்லாமல், செம்பும் இருக்கிறது. செம்பு ஹேமோகுளோபின் உற்பத்தியை ஊக்குவிக்கும். ஏழு பாதாம் பருப்புக்களை வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, பின் தோல்களை உரித்துக் கொள்ளவும். இவற்றை அரைத்து அந்த கூழ் பசையை தினமும் காலையில் மூன்று மாதங்களுக்கு சாப்பிட்டு வரவும் கறுப்பு எள் இரும்புச்சத்து நிறைந்தது.

இதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அரைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்த பாலுடன் அருந்தவும். தேன் அயச்சத்து நிறைந்தது. சோகைக்கு மருந்து. பூசணிக்காய் இரத்த இழப்பு, சிறுநீரில் ரத்தம் போதல் இவற்றை கண்டிக்கும். எனவே சோகை வராமல் தடுக்கப்படுகிறது. வெங்காயமும் சோகைக்கு மருந்தாகும். பேரிச்சம்பழம், வெல்லம் இவைகள் சோகையை போக்கும்.


கர்ப்ப காலங்களில் கால அட்டவணைப்படி நேரத்திற்கேற்ப நன்கு சாப்பிட வேண்டும். சரியான உணவு மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமாகும்.அதுதான் சிசுவுக்கும் தாய்க்கும் சிறந்ததாகும். 


கருத்தரித்த ஆரம்பத்தில் இருந்தே கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் ஏற்பட நேரிடும். கர்ப்பிணிப் பெண்கள் தளர்வான ஆடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவதன் மூலம் இயல்பாக மூச்சு விட முடியாது. குழந்தைக்கும் அதிக அழுத்தம் தரக்கூடும். அதனால் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கலாம். நீங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் அதிக வேலைகள் செய்வதை தவிர்த்து விடுங்கள். குறைந்த அளவு வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்.

மாதா மாதம் கண்டிப்பாக மருத்துவமனை சென்று இரத்தப் பரிசோதனை செய்வது மிக அவசியம். இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்ள முடியும். வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கையில் அமர்ந்து வேலை செய்து விட்டு எழும்பும் போது கவனமாக எழ வேண்டும். வயிற்றில் ஏதேனும் அடிக்க நேரிடும்.

இயல்பாக கா்ப்பிணிப் பெண்களுக்கு மயக்கம் வருவது இயல்பு. அதனால் தனியாக வெளியில் செல்ல நேர்ந்தால் தண்ணீர்ப் போத்தல் அல்லது ஜுஸ் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த அரசு பள்ளியிடம் தனியார் பள்ளிகள் பிச்சைதான் எடுக்கணும்...


"அரசுப் பள்ளி ஒன்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் பள்ளியாக இருந்து வருகிறது..." - கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அந்த பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக விசிட் அடித்த போது இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.



 கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், ஜடையம் பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் இந்த பள்ளி இயங்கி வருகிறது.  இந்த ஆரம்ப பள்ளி 1930 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.  இராமபாளையம் மட்டுமில்லாமல் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த  34 குழந்தைகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.  இந்த பள்ளியானது ஒரு தரம் வாய்ந்த ஆங்கில பள்ளிக்கு இணையாக இருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற இயல்பான கிராம சூழல், போதுமான கட்டிட அமைப்பு, நவீன பளிங்கு கல்லால் ஆன மாதிரி வகுப்பறைகள்.  இன்றைய வாழ்க்கைக்கு தேவையான அவசியமான கணினி பயிற்சி வகுப்புகள்.  குழந்தைகள் குழுவாக அமர்ந்து உரையாட வட்ட மேஜை வசதிகள்.  குழந்தைகள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள ஆங்கில, தமிழ் நாளிதழின் தினசரி வாசிப்புகள்.  மாணவ மாணவியரை பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள், வண்ண சீருடைகள், கழுத்தணி அடையாள அட்டை என எதை எடுத்தாலும் பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் வியப்பான சங்கதிகளே !
நூலகத்தில் ஆரம்ப பள்ளி கல்வியிலிருந்தே கற்ற நவீன மின்னணு வசதியுடன் கூடிய நூலக வசதி, கணினி தொலைக்காட்சி, அறிவியல் ஆய்வு உபகரணங்கள், செய்வழி கற்றல், அட்டைகளை சிறப்பாக வைக்க வடிவமைக்கப்பட்ட பலகைகள் என பார்த்தாலே பரவசமூட்டுகிறது.

இப்பள்ளியில் சுத்தமான சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர், குடிநீர், காற்று, மாசுக்களை தடுத்து குழந்தை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தடுப்பு கண்ணாடி ஜன்னல்கள்.  இந்தபள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில், சிறந்த கல்வியினை கற்கின்றனர்.  விரும்பி வந்தும் சேருகிறார்கள்.  சென்ற ஆண்டு மெட்ரிக் பள்ளியிலிருந்து 4 குழந்தைகள் இந்தப் பள்ளிக்கு வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    
குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் கல்வியினை வரமாய், தவமாய் போதித்து கொண்டிருக்கிறார்கள்.  இந்தப் பள்ளி சிறந்து வளர்ச்சியடைய பொதுமக்கள் தாராளமாய் நன்கொடைகளை அளித்து வருகிறார்கள்.  அந்த நன்கொடைகளை ஆசிரியர்கள் சரியாய் பயன்படுத்தி கொள்கிறார்கள். இந்த பள்ளியின் ஆசிரியர் கூறும்போது "தமிழகத்தில் இதுபோன்ற பள்ளி இது மட்டுமே என்று சொல்லலாம் சார்.  தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு அரசுப் பள்ளியும் பிறர் உதவியை நம்பாமல் மக்கள் உதவியை மட்டுமே நம்பினால் சிறப்பாய் வளரும்" என்கிறார்.

னியார் பள்ளிகளை நோக்கி ஓடும் பெற்றோர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளையும் இது போன்று தத்தெடுத்து மேம்படுத்தினால் எல்லா அரசு பள்ளிகளும் இந்த பள்ளி போன்று சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயமில்லை. தனியார் பள்ளிகளுக்கு வாரி வழங்கும் பணத்தில் பாதியையாவது இது போன்ற அரசு பள்ளிகளுக்கு கொடுத்து அந்த பள்ளிகளில் கவனம் செலுத்தினோமால் அரசு பள்ளி தனியார் பள்ளியை விட பல மடங்கு மேம்பட்டதாக விளங்கும்...

காதலனுடன் ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு..





பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப


்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிகளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோ.

அல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள், ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்

பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு!!


பேஸ்புக்கில் போலி கணக்கு வைத்திருப்பவர்களை கண்டறிவதற்கு!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை, தற்போது சிறியவர்கள்
 முதல் பெரியவர்கள் என அனைவரும் உபயோகப்படுத்துகின்றனர்.
இதில் போலி கணக்கு வைத்திருபவர்கள் ஏராளம்.
 இவர்களை கண்டறிய சில சுலபமான வழிகள் :

இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். 
Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் 
வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல பெண்களின்
புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள்.
 இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு
 மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான 
ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள்.

யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும், அவர்களது 
நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான 
நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகம்.
 காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.

அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். 
உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். 
ஆனால் போலி நபர்களின் Profile கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ 
என நிரப்பப்பட்டும் இருக்கும்.

போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள்.
 உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது. 
ஆண்களுக்கு!… பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக 
ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள், தானாக முன்வந்து முகம் 
தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.

போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். 
அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.



There are millions of profiles on the Facebook. 

Beware of your fake Facebook friends and never assume that all your friends are real people, because 
they may be liars, predators, crooks and thieves who create false profiles by using stolen pictures and identities
 of other people. Eliminate anyone from your friend list, whom you suspect a fake;it could be an issue of life 
and death for you or someone else in your network. For identifying a fake profile, there is not any official method,
but you may check it by some simple ideas. Some funny and useful tips are given below to identify a fake profile.
Naturally a lot of evil characters exist, who create the fake profiles to achieve their goals. If anyone creates a fake celebrity
account on twitter then it will be easily identified as a fake account but on Facebook, it is not easy to identify.
Those fake profile holders attack innocent people by use of social tactics. For staying safe and surviving in the huge social network,
it’s very important to smear fake Facebook profiles.
Profile Photo: Fake profiles mostly use doubtful pictures such as a hot guy having six packs or a very beautiful girl or 
a very hot and sexy picture of a girl.
Every perfect picture creates doubt because no one in this world is perfect, therefore check every profile 

carefully that has a model photo as the profile picture.
Never trust anyone who fulfills a fantasy. The profile having only one profile picture which is pornographic, seems to be fake.

காமராசர் வாழ்க்கை வரலாறு

குமாரசாமி காமராஜர்
(15-7-1903 to 2-10-1975)

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார். விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமராஜின் அன்னையார் பெயர் சிவகாமி. மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார்.

குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் பெருந்தலைவர் என்றும் அறியப்படுகிறார்.
காமராசரின் வாழ்க்கை வரலாற்று சிறு குறிப்பு கேட்டு மகிழுங்கள்..

ரசிகர்களின் அமோக வரவேற்பில் மாற்றான் டிரைலர்!!


சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையர்களாக நடித்துள்ள மாற்றான் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் கே.வி. ஆனந்தின் இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை.
இதுவரைக்கும் வெளியான ஜீன்ஸ், மிஸ்டர் ரோமியோ, வாலி போன்ற படங்களில் இரட்டை சகோதரர்கள் வேடம் பெரிதும் வரவேற்பை பெற்றது. இதில் மாற்றான் சற்று வித்தியாசப்படுகிறது.
ஒட்டி பிறந்த இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையை கே.வி.ஆனந்த் தனது பாணியில் சொல்லியிருக்கின்றார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் மற்றொரு தகவல் ஒன்றும் உள்ளது.

அதாவது, கடந்த 2003ம் ஆண்டு stuck on you என்ற இரட்டை சகோதரர்கள் நடித்த இப்படத்தை மையமாக வைத்தே மாற்றான் எடுக்கப்பட்டிருக்கலாம்.
அதில் வரும் சகோதரர்களும் மாற்றானில் வரும் சகோதரர்கள் போலவே ஒட்டியவர்கள். இப்படம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் 9 வருடங்களுக்கு பின்பு மாற்றான் தமிழ் திரை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

நீங்கள் வைத்திருக்கும் PENDRIVE வை RAM ஆக பயன்படுத்துவதக்கு ஓர் இலகுவான வழி!!

நாம் சாதரணமாக பயன்படுத்தும் PENDRIVE என்னும் சாதனத்தை RAM ஆக பயன்படுத்தலாம்
அதக்கான வழிமுறை தான் இந்த பதிவு குறைந்த பட்சம் ஒரு RAM வாங்க கடைக்கு சென்றால்
அந்த கடைக்காரர் அந்த
RAM முக்கு ஒரு விலையை சொல்லுவார் எப்படியும் 1750/= க்கு மேல் இருக்கும்
அல்லவா.

இந்த பதிவு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்று 
நம்புகிறேன்.இப்போது PENDRIVE வேண்டிய அளவில் 
கடைகளில் கிடைக்கின்றது நீங்களும் 
அதை கொள்வனவு செய்து RAM ஆக பயன்படுத்தலாம் 

PENDRIVE வை எப்படி RAM ஆக உபயோகிப்பது (Windows 7): 

1.உங்களுடைய PENDRIVE வை கணணி யில் செருகவும் செருகிய பின் மை கம்பியுட்டரில் 
வைத்து ரைட் கிளிக் செய்து உள் நுழையவும் நுழைந்த பின் கீழே படத்தில் காட்டி 
உள்ளவாறு Advance System Settings க்கு செல்லவும்.


2.

Advance என்னும் Tab ஐ கிளிக் செய்து Performance என்னும்
பகுதி யில்
Settings ஐ கிளிக் செய்து உள்நுழையுங்கள் பின்னர் சாரளம் தோன்றும்
இரண்டாவது
(Advance) Tab ஐ கிளிக்செய்து Virtual Memory யில் Change என்னும் பட்டன் ஐ கிளிக்
செய்யவும்.
3."Automatically manage paging file size" இதன் சிறிய பெட்டி யில் சரி அடையாளம் 
இடப்பட்டிருக்கும் அதனை நீக்கி விடவும் உங்களுடைய PENDRIVE வை செலக்ட்
 பண்ணவும்
"Custom size" டிக் பண்ணவும் கீழே படத்தில் காட்டி உள்ளவாறு செய்து கொள்ளவும்.



4.உங்களுடைய PENDRIVE 4GB என்றால் initial size க்கு 700 MB ஐயும் 
maximum size க்கு 3072 MB ஐயும் கொடுக்கவும் அவ்வளவும் 
தான் உங்களுடைய கணணியை Restart செய்து பிறகு பாருங்கள் 
உங்களுடைய கணணி இருந்த வேகத்தை விட பன்மடங்கு வேகத்தில் வேளை செய்யும்.     

இதெல்லாம் முழுமையாக Windows 7 க்கு உரிய முறைகளாகும் Windows xp க்கு 
இதில் சிறிய மாறுபாடு உள்ளது.

ரத்த தானம் யார் கொடுக்க கூடாது? தானம் கொடுக்கும் முன்பு!?



உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி.சி. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒருமுறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்ததானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும். ஒருவருக்கு தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.

நட்பு குட்டி கதை (அரிதான புகைப்படங்களுடன்)


நட்பு குட்டி கதை (அரிதான புகைப்படங்களுடன்)


ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தான்.  ஒரு சமயம் பணக்கார 
நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுபாடு நிலவியது. அந்நேரம் அங்கு வந்த ஏழை நண்பன் அவன் எரிச்சலும், கவலையோடும் இருக்கும் தன்  நண்பனை பார்த்து "எப்பிடி டா இருக்கே?" என்று வழக்கம் போல கேட்டான்.

"சும்மா இரு, எனக்கு உடனே இருபது லட்சம் ரூபாய் தேவை. உன்னால் முடியுமா?" என்று கோபமாக கேட்டு விட்டு தன் அறைக்குள்  சென்றான் .









அவன் பின்னால் சென்ற ஏழை நண்பன் "அரை மணி நேரத்தில் பணம்  கிடைத்தால் பரவாயில்லையா?" என்று ஏழை நண்பன் நிதானமாக கேட்டான். 

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி.

ஏழை நண்பனை  ஏளனமாக பார்த்தான்.

அரைமணி நேரத்தில் பணம் வந்தது.

பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பணத்தை குடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.

"நீ எப்போ பார்த்தாலும் அதிகமா பணத்தை தான் சேர்த்தாய் நண்பா..
நல்ல நண்பர்களை சேர்க்க மறந்திட்டாய். நான் அவைகளை சம்பாதித்து 
கொண்டேன் டா" என்றான்.

இருவரும் ஆரத்தழுவி கட்டி கொண்டார்கள்.



இந்த உலகத்திலே எதை சேர்ப்பதை பார்க்கிலும் உண்மை பலமும், உயிருள்ள 
பலமும் கண்டிப்பாக நண்பர்களை சேர்ப்பது தான்..

ஆகவே நட்பையும் நேசிப்போம்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

நன்றி

மருத்துவம் தொழிலா ..? சேவையா ...?





ஜனத்தொகை பெருகி வரும் இந்தஉலகில் , புதிய புதிய நோய்களும்பெருகி கொண்டு தான்இருக்கின்றன. அது மாத்திரமல்லமருத்துவர்களும் பெருகி கொண்டேஇருக்கிறார்கள். உலக சுகாதாரஅமைப்பின் கருத்துப்படிஇந்தியாவில் கிட்டதட்ட 4 . 4 லட்சம்மருத்துவர்கள் உள்ளனர் . கிட்டத்தட்ட 273 மருத்துவகல்லூரிகளின் மூலம் 32000 மருத்துவ மாணவர்கள் மருத்துவம்படிக்கின்றனர். ஏழை வீட்டில் பிறந்தநன்கு படிக்கும் மாணவன்முதற்கொண்டு பல லட்சங்களைபணமாக கட்டி படிக்கும் மாணவன்என மருத்துவ மாணவர்களை வகைபிரிக்கலாம்.

இவை எல்லாம் ஒரு பக்கம் ஒரு நிம்மதியை கொடுத்தாலும்பெரும்பாலான மருத்துவர்கள் மருத்துவத்தை சேவையாகநினைகின்றனரா அல்லது தொழிலாக செய்கின்றனரா என்பது தான்நம்மை போன்ற பொது ஜனத்தின் சந்தேகம். நேற்று நான் சந்தித்தஒரு சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தபடியால் இந்த பதிவைஎழுத வேண்டிய கட்டயதிற்குள் வந்து விட்டேன். ஒரு 60 வயதுதாயார் ஒருவர் நெஞ்சு வலியின் காரணமாக ஒரு மருத்துவமனைக்குசிகிச்சை பெற வந்திருந்தார். மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அந்த தருணத்தில் நிலைமை மருத்துவருக்குஅறிவிக்கப்பட்ட பிறகும் , தன்னை நாடி வந்திருந்த மருந்து விற்பனைபிரதிநிதிக்கு சமயம் கொடுத்து தங்கள் வியாபாரத்தை பேச ஆரம்பித்துவிட்டார். வேறென்ன சொல்லுவது. நெடு நேரம் காத்திருந்த அந்தமுதியவர் வேறு மருத்துவமனையை நாடி சென்றது தான் கொடுமை.


என்ன நினைக்கிறார்கள் இந்த மருத்துவர்கள். பல லட்சம்செலவழித்து மருத்துவம் படித்தால் பணத்தை குறித்து அக்கறைவராமல் வேறென்ன வரும் என்கிறார் இந்த பொது ஜனம். நாமும்வேறென்ன சொல்லுவது . நோயாளிகளிடம் காண்பிக்கும்அக்கறையை விட மருந்து விற்பனை பிரதிநிதிக்கு கொடுக்கும்முக்கியத்திற்கு வேறென்ன காரணம் இறக்க முடியும்...? தரம்குறைந்த மருந்துகளை பரிந்துரைக்க அவர்களுக்கு கிடைக்கும் அற்பபணத்திற்காகவும் வெகுமதிக்காகவும் அல்லாமல் வேறெதற்கு? சுகாதாரத்தை பேண வேண்டிய மருத்துவமனைகள் சிலவற்றில்நுழைந்தவுடன் ஏற்படும் வாசனை (?) சகிக்கமுடியாது. ஏன் அதை கூடசரி பண்ண மருத்துவர்களுக்கு சமயம் கிடைக்கவில்லை போலும். என்ன சொல்லுவது ... என்னவோ யாதோ என பயந்து வரும்நோயாளிகளை பார்த்து ஒரு புன்முறுவல் கூட செய்யாமல் தங்கள்மேதாவித்தனத்தை காட்டும் மருத்துவர்களும் உண்டு.....


ஆனாலும் எல்லா மருத்துவர்களும் அப்படி என்று சொல்ல முடியாது. கடுமையான விபத்தில் சிக்கி கால்கள் ஒடிந்த நிலையில் ஒருவாலிபன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட போது , ஒருமருத்துவர் கையில் அணிவதற்கு கையுறை தேடி கொண்டிருக்க, தற்செயலாய் அந்த பக்கம் வந்த இன்னொரு மருத்துவர் தான் நல்லஆடைகளை அணிந்துருந்தும் அதை பொருப்படுத்தாது ஓடி சென்றுதனது கைகளினால் அந்த கால்களை தாங்கி பிடித்த காட்சியையும்கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். வெறும் 25 ருபாய் , 50 ருபாய் மாத்திரம்பீஸ் வாங்கும் மருத்துவர்கள் 80 கிமீ பிரயாணம் செய்து வந்துமருத்துவம் பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன்.


ஆனால் கடவுளுக்கு அடுத்தபடியாக போது ஜனம் இவர்களைநினைத்திருக்க , மருத்துவம் என்ற புனிதமான சேவை வியாபாரம்ஆகும் கொடுமை தீர்ந்தால் தான் உண்மையான சேவை செய்யும்மருத்துவர்கள் கூட மதிக்கப்படும் நிலை வந்திருக்கிறது என்றால் , அது கூட மறுக்க முடியாது என்றே நினைக்கிறன்

மரவள்ளிக் கிழங்கு வடை


வடைன்னா உளுந்த வடை, பருப்பு வடை தான் ஞாபகத்துக்கு வரும்... இனிமே மரவள்ளிக் கிழங்கு வடையும் ஞாபகத்துக்கு வரும் பாருங்க... அட! ஆமாங்க.. செலவில்லாத அதேநேரத்தில் மிக எளிதாக செய்யக்கூடிய வடை இது... சுவையோ பிரமாதமாக இருக்கும்......
தேவையான பொருள்கள்:
மரவள்ளிக் கிழங்கு - 500 கிராம்
மிளகாய்தூள் 1 - ஸ்பூன்
வேர்க்கடலை பவுடர் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - அரை ஸ்பூன்
எண்ணெய் - 500 கிராம்
செய்முறை:
* மரவள்ளிக் கிழங்கைத் தோலுரித்து கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.
* அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பொடி, பெருங்காயப் பொடி ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
* தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும்.

கறிவேப்பிலை சாதம்










ஒரேமாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்குதா...இதோ ஒங்களுக்காகதான் இந்த கறிவேப்பிலை சாதம்! கறிவேப்பிலையில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு ரொம்ப நல்லது. கறிவேப்பிலையை உணவில் நிறைய சேர்த்துக்கொண்டால் தலைமுடி நன்கு கருகருவென்று வளரும்... கறிவேப்பிலையை தனியாக சாப்பிட முடியலையென்றால் அடிக்கடி கறிவேப்பிலை சாதம் செஞ்சு சாப்பிடுங்க.... சுவையுடன் நல்ல பலனும் கிடைக்கும்!


தேவையான பொருட்கள்:


சாதம் - 2 கப்
கறிவேப்பிலை - ஒரு கப்
நல்லெண்ணை - 1 டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீ ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி - 5
எலுமிச்சை - 1/4 பழம்
நெய் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:


* சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுகலாக வறுத்து, மைய பொடித்துக்கொள்ளவும்.


* பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.


* அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.


* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.


* பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.


* பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.


* அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.


* பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.


* பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.


குறிப்பு:


* இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.


* முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.
.