Recent Video

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!


தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.
அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன்.
பலன் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க…..?
வேற ஒன்னுமில்ல, குழப்பம்தான்! அட ஆமாங்க, சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்கள்ல 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக்கூட தூக்கமே வராது. இப்படியானா குழப்பம் வராம என்ன செய்யும் சொல்லுங்க….?
சரி இப்படி வேற எதாவது யுக்திகள் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க. அடுத்த முறை முயற்சி பண்ணி பார்க்குறேன். ஆனா, இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பத்தியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியல் பொருட்களையும் பத்தி விளக்கமா தெரிஞ்சிக்கலாம் வாங்க……
செர்ரி பழங்கள்!
“இத பார்த்த உடனே, ரெண்டு எடுத்து சாப்பிடனும்போல இருக்கே” அப்படீங்கிற மாதிரி இருக்குற செர்ரி பழங்களுக்கும், உறக்கத்துக்கும் ஒரு ரகசிய உறவிருந்தது இதுவரைக்கும் எனக்கு தெரியாமப்போச்சு!
என்ன….., உங்களுக்குமா?
“என்னது செர்ரி பழத்துக்கும் உறக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கா?” அப்படீன்றீங்களா…..?
அட ஆமாங்க! நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது, நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும்/தூண்டும் திறனுள்ள மெலடோனின் (melatonin) அப்படீங்கிற வேதியல் பொருளின் இயற்கை உறைவிடம்தான் நம்ம செர்ரி பழங்கள். செர்ரி பழங்களில் மிக அதிக அளவில் மெலெடோனின் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனால, இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவும், பயணங்களின்போதும் கொஞ்சம் செர்ரி பழங்களைச் சாப்பிட்டீங்கன்னா, இந்த தூக்கமானது “எங்கே எங்கே” அப்படீன்னு உங்கள தேடிகிட்டு வந்துடும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! சாப்பிட்டுதான் பாருங்களேன்…..
வாழைப்பழம்!
ஏன்னா, இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நெறைய இருக்குதாமாம். அதுமட்டுமில்லாம, எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குதாம். இந்த எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5-HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிடும். அதன்பிறகு இந்த 5-HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.
மெலடோனின் என்ன செய்யும்னுதான் உங்களுக்கு இப்போ நல்லாத்தெரியுமே! அதனால இனிமே தூங்க போறதுக்கு முன்னாடி மறக்காம ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க, சரியா?
டோஸ்ட்!
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்! ஆனா எனக்குதான் இது நம்புற மாதிரி இல்ல…..
என்ன உங்களுக்குமா?
சரி விடுங்க, நம்ம சந்தேகத்தை நிவர்த்தி பண்றமாதிரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களா இந்த விஞ்ஞானிங்க என்னதான் சொல்றாங்கன்னு பார்த்துடுவோம்.
அதாவது, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டுகிறதாம். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாம். எப்படின்னா, இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச்செய்யும் சமிக்ஞைகளை உருவாக்குகிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது!
ஓட் மீல்!
இந்த ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்கா காரைங்க ஓட் மீல் அப்படீங்கிறாய்ங்க! ஆமா, உங்கள்ல (வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள்) எத்தன பேரு ஓட்ஸ் கஞ்சி அல்லது ஓட்ஸ்+பால் சாப்பிடுறீங்க? கண்டிப்பா, மிக குறைவான எண்ணிக்கையிலான இந்தியர்கள், குறிப்பா தமிழர்கள்தான் ஓட்ஸ் சாப்பிடுறாங்கன்னு நெனக்கிறேன்?!
ஏன்னா, ஒரு நீயா நானா விவாதத்துல பார்த்தேன். சரி அத விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம்…..
அதாவது, மேலே சொன்ன டோஸ்டு மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி, அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட, அதன் விளைவாக உறக்கம் தூண்டும் மூளை ரசாயனங்கள் சுரந்து, கடைசியா…..
“உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே…… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே……”அப்படீன்னு நாம தூங்கிடலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். (முக்கியமா ஓட்ஸுலயும் மெலடோனின் அதிகமா இருக்குதாமாம்!) என்ன முயற்சி செஞ்சி பார்க்குறீங்களா?
கதகதப்பான பால்!
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில நாம இன்னிக்கு பார்த்த, மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான். இல்லீங்களா?
ஆனா, கதகதப்பான பால் மட்டும் பழசுன்னு நெனக்கிறேன். ஆமாங்க, சின்ன வயசுலேர்ந்து “ஒரு டம்லர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும்” அப்படீன்னு சொல்லிதான் நமக்கெல்லாம் அம்மா காய்ச்சின பாலை கொடுத்திருப்பாங்க, இல்லீங்களா?
ஆனா, நம்ம அம்மாவுக்கு அந்த பால்ல இருக்குற எந்த வேதியல் மூலப்பொருள் காரணமா நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை! இப்போ அம்மாவா இருக்குற உங்கள்ல பலருக்கு அந்த வாய்ப்பு நம்ம விஞ்ஞானிகள் மூலமா கிடைச்சிருக்கு.
ஆமாங்க, வாழைப்பழத்துல இருக்குற எல்-ட்ரிப்டோபான் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறதாம். அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்குதாம். அதுமட்டுமில்லாம, பாலில் அதிக கால்சியம் இருப்பது உங்களில் பலருக்கு தெரியும்னு நெனக்கிறேன். இந்த கால்சியமும் உறக்கத்தை தூண்டும் அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
ஆக, உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகள சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, சரிங்களா? ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகள சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்!
என்னங்க, திடீர்னு எல்லாரும் காணாமப் போய்ட்டீங்க?
ஓ……செர்ரி பழங்கள்ல ஆரம்பிச்சி பால் வரைக்கும் வீட்ல இருக்குதான்னு தேட ஆரம்பிச்சிட்டீங்களா? சரி சரி, இதையெல்லாம் சாப்பிட்டு நல்ல உறங்கி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்குங்க……!
நான் போய்ட்டு வரேன்……. :-)

வரதட்சனையை ஒலிப்பொம்


வரதட்சனை என்ற கொடுமையான சமூகதீமையை இந்த முஸ்லிம் சமுதாயம்

விட்டொழிக்காதவரை இத்தகையநிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும்.

அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர்கொடுத்து திருமணம

செய்யுங்கள் என்று கூறும் பொழுது, மானங்கெட்ட நம் முஸ்லிம்

இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்;

ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்

வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு

செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை

இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.

 


வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லைமகளை திருமணம் முடித்த மருமகனுக்குவேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு

வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும்.

அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து,

அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.இவன்மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை)

மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ

செலவு வரை – அவனுடைய மனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த

மாதிரியான இழிவான ஆண

பிறவிகளுக்கு எதற்கு வாரிசுகள்?. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை

மனைவியானவள் கருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின

சுமையை அவளால் குறைக்க முடியும். அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந்

பெண் குழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும

அழைத்து போவானாம். என்பது கொடுமையிலும் கொடுமை.சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால்அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு

மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம்பண்ணுவானுங்க.

மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில்எல்லாவற்றிலும்.

தலையிடுவது தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும்முடிவுகளில்

சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.

அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி வீட்டில

அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த

வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் *மனைவி*க்க

கண்ணியம் கொடுத்து தன் *வீட்டுக்காரியாக* – தன் *இல்லத்துக்கு அரசியாக*

இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாகஆக்கிவிடுகிறான்.அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும்.என்பதில் அவன் செய்யும் தவற

(
கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும்அதிகமோ.

அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனைஅவனுடைய

வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடையஅண்ணன் தம்பியால் அவளுக்குஎற்படும்

(
கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாட

திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனேவேண்டாம்

என்ற முடிவுக்கு வரும் மனைவியின் மிகக்கொடுமையான நிலைமை. இதையெல்லாம் தன்னைஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று

பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ்முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு,

உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும்

உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்

சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நகைதுணிமனிகளுடன்

வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு என்று இவ்வளவையும் உனக்குகொடுத்து

உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படிநடத்துகிறார்கள்.

என்று சிந்தித்து பார். (கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண

உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)நீ நியாயமான மனிதனாய்இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்ற


நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்தஉழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம்

உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து. உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாகமரணிப்போம்.

அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!முதலில் இதை பற்றி நாம் வாய்கிழிய பேசுவதற்கு முன் - நாம் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தோமா;

அல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை திரும்பவும் அந்த பெண்

வீட்டாரிடையே கொடுத்து விட்டோமா; நமது பிள்ளைகளுக்கு நாம் வரதட்சனை வாங்காமல் அல்லதுவரதட்சன

கொடுக்காமல் திருமணம் செய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஏனென்றால் அல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்க

சொல்கிறீர்கள் என கடும் கோபம் கொள்கிறான்.முதலில், பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்துதிருமணம் செய்ய சொல்கிறான் ;

மஹர் கொடுக்காமல் - வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில்

ஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொர

முஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை : மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைப்பு










தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்புக் குழு

அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் அமைக்கப்பட்டுள்ள

இந்தக் குழுக்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கள இயக்குநர்கள்,

சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வார்டுகளில், மருந்து மாத்திரைகளின் கையிருப்பை அதிகரிக்கவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தவிர, மாநிலம் முழுவதும் 400 இடங்களில் டெங்கு மருத்துவ முகாம்களை நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


200 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை : இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்ச்ல அறிகுறியுடன் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகை தலைமை அரசு மருத்துவமனையில் 222 பேரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 22 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதையடுத்து, நாகை மருத்துவமனையில் 10 அறைகளில் டெங்கு காய்ச்சலுக்காக தனியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 11 சிறப்பு மருத்துவர்கள் உட்பட 25 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, சிகிச்சை உரிய முறையில் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

facebook உருவான கதை



அன்பு நண்பர்களே
இவை என் பதிப்பு இல்லையென்றாலும்
உங்களுக்கு உதவும் என்பதே என் மகிழ்ச்சி ..
கிழே இருப்பவர் FACEBOOK OWNER - facebook owner mark zuckerberg





ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின்நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு.

அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.

2005

காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்றமைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!

‘மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?’

ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப்படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
‘எனக்கு இன்று மனசு சரியில்லை’ என்று ஒரு செய்தியை இதில் போட்டால் போதும்… குறைந்தது 10 நண்பர்களிடம் இருந்தாவது உங்களுக்கு ஆறுதல் செய்திவந்துவிடும். நமது பிறந்த நாளை நாமே மறந்துவிட்டாலும்கூட அதை நினைவில் வைத்திருந்து வாழ்த்து சொல்கிற நண்பர்களை ஃபேஸ்புக்கில் பார்க்கலாம்.
மனிதர்களுக்குப் பணம் மட்டுமே எல்லா மகிழ்ச்சியையும் கொடுத்து விடுவதில்லை. ஒரு மனிதனின் ஆளுமையை வடிவமைப் பதில் ‘சமூக மூலதனம்’ எனச் சொல்லப்படுகிற சமூக
உறவுகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ள மனிதன், ஒரு பக்கம் அந்த மூலதனத்தை குவித்துக்கொண்டு இன்னொரு பக்கம் சமூக மூலதனத்தை இழந்து கொண்டிருக் கிறான். அதை சரி செய்து கொள்வதற்கு அவனுக்குக் கிடைத் துள்ள வாய்ப்பு என் றும் இத்தகைய இணைய தளங்களைச் சொல்லலாம். கூட்டுச் செயல்பாட்டி லிருந்து விலகிப்போய்விட்ட மனிதன் தனக்கென ஒரு சமூகக் குழுவை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தை இத்தகைய இணைய தளங்கள் நிறைவு செய்கின்றன. தனிப்பட்ட பிரச்னைகளை மட்டுமின்றி, சமூகப் பிரச்னைகளையும் இத்தகைய தளங்களில் பகிர்ந்துகொள்ள முடிகிறது.
நான் ஃபேஸ்புக்கில் உறுப்பினரானவுடன் தமிழ கத்தைக் குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது பற்றிப் பிரசாரம் ஒன்றை அதன்மூலம் மேற்கொண்டேன். அதற்காக குழு ஒன்றை அதில் அமைத்தேன். சென்னை குப்பங்கள் பற்றி ஆய்வுசெய்த அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தன்னிட மிருந்த புள்ளிவிவரங்களை அதன்மூலம் எனக்கு அனுப்பிவைத்தார். அந்தப் பிரசாரத்தைப் பார்த்த சில பத்திரிகையாள நண்பர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அதுகுறித்து கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளி யிட்டனர். அந்த உற்சாகத்தில்தான் சட்டப்பேரவையில் தொடர்ந்து அந்த விஷயத்தை நான் வலியுறுத்தினேன். இன்று அந்தக் கனவுத் திட்டம் நனவாகிவிட்டது.

ஃபேஸ்புக் என்பது பல்வேறு நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கும் பயன்படுகிறது. அதன்மூலம் எளிதில் உங்கள் நண்பர்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்துவிடலாம். தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் பலர் தங்களது திரைப்படங்கள் பற்றிய செய்திகளை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு விளம்பரப் படுத்தி வருகிறார்கள். தாங்கள் படிக்கும் நல்ல பல கட்டுரைகளை மற்ற நண்பர்களின் பார்வைக்காக ஃபேஸ்புக்கில் போடுவது இப்போது அதிகரித்துவருகிறது. அதற்கேற்ப பத்திரிகைகள் தங்களது இணைய தளங்களை வடிவமைத்துவருகின்றன. ஃபேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் இப்போது ஏதேனும் ஓர் இடத்தில் கூடிக் குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்கிறார்கள். இப்படியான சந்திப்புகள் இளம் தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன.
இந்தியாவில் கணினிப் பயன்பாடு இன்னும் பெருமள வில் வளர்ச்சி அடையவில்லை என்றபோதிலும் மொபைல் போன்களின் பெருக்கம் ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. இப்போது, சுமார் 30 கோடி மொபைல் போன்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கை 2011-ம் ஆண்டின் இறுதியில் 60 கோடி யாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வெறும் 10 சதவிகிதம் பேர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால்கூட சுமார் ஆறு கோடி வந்து விடும். தற்போது உலகெங்கும் உள்ள ஃபேஸ்புக் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இது கணிசமான அளவாக இருக்கும். எல்லாவற்றையும் கூட்டமாகச் செய்தே பழகிப்போன இந்திய மனோபாவத்துக்கு ஃபேஸ்புக் மிகவும் பொருத்தமாயிருப்பதால், மற்ற நாடுகளையெல்லாம் வீழ்த்திவிட்டு இந்தியர்கள் இதை ஆக்கிரமிக்கப்போவது நிச்சயம். இதை உணர்ந் திருப்பதால்தானோ என்னவோ… இந்தியாவைத் தனது முக்கியமான இலக்காக ஃபேஸ்புக் நிறுவனம் கருதுகிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த இலக்கை எட்டுவதற்காக ஹைதராபாத்தில் அலுவலகம் ஒன்றைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் கூறி யுள்ளது. ஆசிய நாடுகளிலேயே சிங்கபூர்க்கு அடுத்து ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் போன்ற தளங்களால் நன்மைகள் மட்டுமின்றி, தொந்தரவுகளும் உண்டு என்பதை மறுப்ப தற்கில்லை. ஃபேஸ்புக்கில் நாம் பகிர்ந்துகொள்கிற விவரங்களை யார் யார் பார்க்கலாம் எனநாமே வரையறுத்துக்கொள்கிற வசதி இருக்கிறது, நம்மு டைய ‘ப்ரைவஸி’ பாதுகாக்கப்படுகிறது என சொல்லப்பட்டாலும் நாம் அதில் வெளிப்படுத்துகிற விவரங்களை மற்றவர்கள் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமின்றி, ஃபேஸ்புக்கிலிருந்து நாம் விலகிவிட்டாலும் நாம் வெளியிட்ட தகவல்கள் இணையத்தில் இருந்துகொண்டுதான்இருக்கும்.அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் எளிதான வையாக இல்லை. ஆனால், இத்தகைய குறைபாடுகள் ஃபேஸ்புக்கின் பயன்பாட்டை எந்த விதத்திலும் குறைத்துவிடவில்லை. ‘அதனால் ஆபத்து… இதனால் தொந்தரவு!’ என்று பேசி நம்மை நாமே முடக்கிக் கொள்வதைவிட தொழில்நுட்பம் தரும் அனுகூலங் களையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதே புத்திசாலி

WebCam Recorder



நீங்கள், வெப்கேம் பக்கவாதத்தால் நீங்கள் ஏதாவது நல்லது நீங்கள் பார்த்து வருகிறோம் வெப்கேமில் இருந்து விலகி இருக்க உடனடி இழப்பேன் என்று பயம் பாதிக்கப்படுகின்றனர்? உதவி வெப்கேம் ரெக்கார்டர், கூட எந்த வெப்கேம், செருகுநிரல்களை பயன்படுத்த அந்த கண்காணித்து பதிவு செய்ய முடியும் என்று ஒரு சிறிய ஆனால் ஏற்ற மென்பொருள் பயன்பாடு வடிவில் Solent மென்பொருள் கிடைக்கும். இது உங்கள் கணினி அல்லது ஆன்லைன் இல் வெப்கேம்களை மற்றும் வெப்கேம் ஓடைகளை பதிவு செய்யலாம் - உண்மையில், உங்கள் டெஸ்க்டாப் அதன் ஆக காட்ட முடியும் என்று எந்த வெப்கேம். ஒரு வழிகாட்டி அடிப்படையிலான அமைப்பு முறை மற்றும் எளிமையான இடைமுகத்தை, அதை செய்த 'தேவைகளை பல்வேறு வகையான இன்னும் வளைந்து கொடுக்கும் போதும் பயன்படுத்த எளிதானது. வெப்கேம் ரெக்கார்டர் 25-பயன்பாடு எல்லை மற்றும் வெளியீடு கோப்புகள் ஒரு நீர் கொண்டு, முயற்சி இலவசம்.
வெப்கேம் பதிவு சிறிய முகப்பு பாடல் தலைப்பு என்று அங்கு ஸ்க்ரோலிங் விளம்பர செய்தி மற்றும் மென்பொருள் வாங்க பெரிய பொத்தானை கொண்டு, மீடியா பிளேயர் போன்ற நிறைய இருக்கிறது. ஒரு டூல்பாரை தேர்வு கேமரா / பதிவு செய்யும் விசார்ட் மற்றும் நிறுத்து பதிவு உட்பட திறக்க பொத்தானை தொடங்கி, அனைத்து கட்டுப்பாடுகள் உள்ளது, இன்னும் படம், இடைநிறுத்து, நிறுத்து, மற்றும் கட்டுப்பாடுகள், அதேபோல ஒரு தகவல் பொத்தானை மற்றும் உதவி கோப்பு, ஒரு முழு கையேடு அணுகும் பிந்தைய இயக்கு . நாம் தானாக விரைவில் அதை திறந்து நம் வெப்கேம் கண்டுபிடிக்கப்பட்டால் இதில் தேர்வு கேமரா / பதிவு செய்யும் விசார்ட், தொடங்கியது. வழிகாட்டி நீங்கள் உருவாக்க சேமிக்க, நீங்கள் பின்பற்ற வேண்டும் என பல வெப்கேம்களை என நிர்வகிக்க எளிதாக செய்ய விவரக்குறிப்புகள் நினைவுகூர முடியும். பதிவு வழிகாட்டி திரையில் நம் இணைய உலாவியில் திறந்து இருந்தது எந்த வெப்கேம்களை உட்பட அனைத்து எங்கள் கிடைக்க ஜன்னல்கள், பட்டியலிடப்பட்டுள்ளது. நாம் சாதாரணமாக நாம் பின்பற்ற வேண்டும் வெப்கேம் தேர்ந்தெடுத்து அடுத்து என்பதை கிளிக் செய்யவும் வேண்டும். அடுத்த படி கிளிக் செய்து நீங்கள் கண்காணிக்க வேண்டும் சதுர தேர்ந்தெடுக்க கர்சரை இழுத்து அடங்கும். ஆவணங்களை வழிகாட்டி இந்த நடவடிக்கை போது காணாமல் கூறினார், ஆனால் அது நம் கணினியில் தெரியும் இருந்தது. தேவைப்பட்டால் உறுதிப்படுத்தல் பிராந்தியம் படி பின்னர், நாம் விரும்பினால் உள்ளீடு சாதனங்கள் உட்பட, ஒலிப்பதிவு விருப்பங்களை தேர்வு செய்யலாம். கிளிக் செய்து முடி வழிகாட்டி நீக்கப்பட்ட மற்றும் முக்கிய சாளரத்தில் எங்கள் பதிவு தொடங்கியது.
வெப்கேம் ரெக்கார்டர் முழு பதிப்பு நிரந்தரமாக பதிவுகளை சேமிக்கப்படுகிறது விரைவில் சிறந்த பிட்கள் காண்கிறது என்று ஒரு அம்சம் கொண்டுள்ளது. வழக்கு விசாரணை ஒரு நல்ல அறிமுகம் வழங்குகிறது

விஜய் படத்தின் 'துப்பாக்கி' தலைப்பை மாற்ற முடிவு?

சென்னை, செப்.25 (டிஎன்எஸ்)விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்பிற்கான இடைக்கால தடை மீண்டும் நீடிக்கப்பட்டிருப்பதால், அப்படக்குழுவினர் மிகவும் சோர்ந்துப்போயிருக்கிறார்கள். இதற்கிடையில் படத்தை தீபாவளியன்று வெளியிடப்போவதாகவும் அறிவித்திருப்பதால், வேறு வழி இல்லாமல் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவள்கள் வெளியாகியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் தலைப்புக்கு எதிராக 'கள்ளத்துப்பாக்கி' என்றப் படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயின் துப்பாக்கி படத்திற்கு இடைக்கால தடை விதித்தார். இந்த வழக்கு விசாரனைக்கு வரும்போதெல்லாம் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வருகிறது. இதனால் படக்குழுவினர் சோர்ந்துபோயிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதியன்று படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதால், படத்திற்கான விளம்பரங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறது. எனவே துப்பாக்கி தலைப்புக்கு பதிலாக 'சரவெடி' அல்லது 'மும்பை தமிழன்' என்ற இரண்டு தலைப்புகளில் எதையாவது ஒன்றை வைத்துவிடலாம் என்று படக்குழுவினர் யோசித்து வருகிறார்களாம்.

இதற்கிடையில் வரும் அக்டோபர் 3ஆம் தேதியன்று மீண்டும் 'துப்பாக்கி' படத்தின் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போதும் தடை நீடிக்கப்பட்டால், கண்டிப்பாக துப்பாக்கி படத்தின் தலைப்பு மேலே கூறிப்பிட்ட இரு தலைப்புகளில் எதாவது ஒன்றாகத்தான் இருக்கும். (டிஎன்எஸ்)

போலீஸ் கமிஷ்னரிடம் இயக்குநர் பிரபு சாலமன் புகார்


 போலீஸ் கமிஷ்னரிடம் இயக்குநர் பிரபு சாலமன் புகார்
சென்னை, செப்.25 (டிஎன்எஸ்)இயக்குநர் பிரபு சாலமன் தயாரித்திருக்கும் படம் 'சாட்டை'. பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த வாரம் வெளியான இப்படத்தின் திருட்டு வி.சி.டி க்கள் சென்னையில் விற்கப்படுவதாக கூறி, அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரபு சாலமன் இன்று (செப்.25) சென்னை, போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்தார்.

புகாரி கூறியிருப்பதாவது, "நான் சாட்டை என்ற படத்தை தயாரித்தேன். அப்படம் சமீபத்தில் ரிலிசானது. சாட்டை படத்தை திருட்டு சி.டி.யில் தயாரித்து விற்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்களிலும் சாட்டை திரைப்படம் திரையிடப்படுகிறது. இணையதளங்களிலும் படத்தை வெளியிட்டுள்ளனர். திருட்டு வி.சி.டி விற்பவர்களை தண்டிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் கூறிப்பிடப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

நண்பர்களே. . . .

நம் உயிரிலும் மேலாக...நாம் நேசிக்க கூடிய நமது உத்தம இறைதூதரையும்..நமது மார்க்கத்தையும் கொச்சை படுத்திய திரைபடத்தை தடை விதிக்காத யூத நாயின் இருப்பிடமான அமெரிக்காவிற்க்கு எதிராக போரட்டம் நடத்தினால் மட்டும் போதாது..ஒவ்வொறு முஸ்லிமும் அமெரிக்காவிலுருந்து தயாரிக்க கூடிய அனைத்து பொருட்களை வாங்குவதை தவிற்க்க வேண்டும்..நாம் நண்பர்களுக்கும் இதை தெரிய படுத்துவோம்..பெரும்பாலும் நம் மக்கள் தான் அதிக அள்வில் அமெரிக்கவின் தாயரிப்பான KFC ,PEPSI, KOLA,7UP. .இன்னும் மற்ற பொருட்க்ளையும் வாங்குவதை பார்க முடிகிறது..அல்லாஹ்விற்க்காக அந்த அமெரிக்க நாயின் தாயரிப்புகளை வாங்க மாட்டோம் என் உறுதி கொள்வேம்..நமது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்துவோம்....இன்ஷா அல்லாஹ்...

நபி (ஸல்) நாயகத்தை தரைகுறைவாக விமர்சித்த அமெரிக்க நாய்களை கண்டித்து அதிரையில் நடந்த பேரணி ஆர்ப்பாட்டம்



அமெரிக்காவை கண்டித்து அதிரையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்









அதிரையில் அமெரிக்காவை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர் ! 
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களை காமுகராகவும், தீவிரவாதியாகவும் சித்தரித்து திரைப்படம் எடுத்துள்ள அமெரிக்க பாதிரியையும் ,அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சார்பாக பிரம்மாண்டமான பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது






தக்வா பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y.அன்வர் அலி அவர்கள் துவக்கிவைத்தார்.


அதிரை கிளை தலைவர் பீர்முகம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் எப்போதும் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான பெண்களும் கலந்து கொண்டனர் .அதிரை வரலாற்றில் இது ஒரு மைல்கல் !.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சகோதரர் யாசர் அரஃபாத் இம்தாதி அவர்களும் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப் தீன் ஃபிர்தவ்சி அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் .தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அதிரை ஸாலிஹ் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள் .
 
இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியுடன் முடித்து தந்த வல்ல ரஹ்மானுக்கு புகழனைத்தும் ! அல்ஹம்துலில்லாஹ்






































நெய்யில் உள்ள மருத்துவ குணங்கள்





பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும்போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை


உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுரு வக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய் களை தடுக்கிறது.

நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat – 65%

Mono – unsaturated fat – 32%

Linoleic – unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள் வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி...

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடு வதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ண த்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

o ஞாபக சக்தியை தூண்டும்

o சரும பளபளப்பைக் கொடுக்கும்

o கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிக மாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின் மையேஸ

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலு க்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர் களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போ தை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

திரைப்படம் மூலம் குழப்பம் உண்டாக்கும் யூதர்கள்!


      முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிக மோசமாக அவமதிக்கும் திரைப்படம் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் யூதன் ஒருவனால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வெளிவராத இந்த படத்தின் ட்ரைலர் யூட் டுயுப்யில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் முஸ்லிம்கள் இதற்க்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.



தமிழகத்தில் SDPI கட்சி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தவ்கீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த இஸ்லாம் எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்தவருடன் தொடர்பு கொண்டிருந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவரிடம் FBI போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

 
இந்நிலையில் அமெரிக்க கலிபோர்னிய மாநில தலைநகர் சாக்கரமேண்டோவில் அமைந்துள்ள மஸ்ஜித் நூர் பள்ளியில் நேற்று வெளிக்கிழமை ஜும்மா தொழுகையின் போது இம்மாம் கூறியாதாவது. இந்த திரைப்படத்தின் மூலம் டெவில் (DEVIL) எதை செய்ய நாடியதோ அதை செய்துவிட்டது. முஸ்லிம்கள் உணர்ச்சி வயப்பட்டு லிபியாவில் உள்ள அமெரிக்க தூதர் உட்பட 3பேரை கொன்றதை இஸ்லாம் அனுமதிக்க வில்லை, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

இது போன்று விசயங்களில் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றார். இதை எதிர்த்து அமெரிக்கா தழுவிய பிரச்சாரத்தையும், சட்ட ரீதியான நடவடிக்கையையும் தாங்கள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க உலகின் கிரீன் லேன்ட், இங்கே அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுகின்றனர். உலகின் சுதந்திர பூமி என்று அமெரிக்காவை சொல்லலாம் என்றார். இதனால் முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டித்தார்.

WHO IS THE HERO! WHO IS THE HERO!




காக்க வந்த வாத்தியாரோ!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார்.


இந்த சிகிச்சைக்கு ரூபாய் 25 லட்சம் செலவாகும். மலையாள நடிகர் மம்முட்டியை பாராட்டியே ஆகவேண்டும். நம்ம தமிழ்நாட்டு நடிகர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

கும்பகோணம் தீவிபத்தில் பலியான பள்ளி குழந்தைகள் குடும்பங்களுக்கு நிதி வழங்குவதாக அறிவித்த நமது நடிகர்கள் பலர் மாயமானார்கள். தலைவா உன் சொல்லுக்காக தமிழகமே காத்து நிற்கிறது என்று மிகைபடுத்தப்பட்ட ரஜினி என்ன செய்தார்? மற்ற நடிகர்கள் எல்லாம் எங்கே? இதுபோன்ற பெரும் விபத்துகளிலும், பேரிடர்களிலும் இந்த நடிகர்களின் பங்கு என்ன?

சிடி பிளையர் வாங்க வசதியில்லாத இந்த அன்றாடம் காட்சிகள் தியேட்டரில் சென்று படம்பார்த்துதானே நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள். ஒரு மனிதனுக்கு 5 கார், 10பங்களா, ஒரு தலை முறைக்கு சொத்து இதல்லாம் போதும் தானே. இது போக மீதத்தையாவது மக்களுக்கு கொடுங்கலேண்டா! ஏன் இந்த பணவெறி.. பணவெறி.. பணவெறி டா!.
 

இந்த கம்பம் கலி தின்னவனும் மண்ணுக்குள்ளே! அந்த தங்க பஷ்ப்பம் தின்னவும் மண்ணுக்குள்ளே! நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல!

இது ரஜினி காந்த் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இவர்தான் முணு முணுப்பார். நம்ம விசிலடிச்சான் குஞ்சிகள் எல்லாம் ஓ.. தங்க தலைவா! வருங்கால தமிழக முதல்வரே! என்று கோசம் எழுப்புவார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் ரஜினி ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலை ஊற்றி அபிசேகம் செய்வர். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பச்சிளம் குழந்தைகளுக்கு பால்வாங்க வழியில்லாமல் தாய்மார்கள் அவதிப்படுகிறார்கள்.

 

பாரதியும், பெரியாரும் வாழ்ந்த மண்ணில் மானம் கெட்டு குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிக பெருமக்கள்தானே. குஷ்பு தன்னை போலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டு பெண்களின் கற்ப்பை பற்றி பேசி சர்ச்சை உண்டாக்கினார். இந்த குஷ்பு கடவுள் இந்த மக்களுக்கு ஏதாவது பண்ண போறாரா? இல்லையே! இதையெல்லாம் சிந்திக்க கூட வழியில்லாமல் நமது தமிழ் சமூகம் அடிமுட்டாளாகி போனது.

சினிமாவை பற்றியே செய்திகள் எழுதி சமூக வலைத்தளங்களை நாறடிக்கும் மக்கள் திருந்துவார்களா?

ஏன்? தனி தமிழ் நாடு அமைய வேண்டும்!

 நீண்ட நெடும் காலமாக வட இந்திய அரசியல் சக்திகளால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இது ஹிந்தி திணிப்பில் தொடங்கி, இலங்கை பயங்கரவாத அரசால் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் கூடங்குளத்தில் முடிந்திருக்கிறது. 
கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் கொக்க கோலா குளிர்பானம் தாயரிப்பு, இவைக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் கேரளாவாகும். கேரளாவில் அனைத்து கட்சிகள், மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் அவை தமிழகத்தை நோக்கி தள்ளிவிடப்பட்டன. 

கூடங்குளத்தில் காவல்துறை நடத்திய வெறியாட்டத்தின் போது, பெண்களை மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டி, பெண்களின் பிறப்புறுப்பில் லத்தியால் குத்தியுள்ளனர். அது மட்டுமல்லாது பெண்களில் சேலையை உருவி அவமானப்படுத்தியுள்ளனர். சிறுவர்களையும், முதியவர்களையும் கடுமையாக தாக்கி காயம் உண்டாக்கியுள்ளனர்
வலது பக்கம் உள்ள விடியோவை பார்க்கவும்.

இதுமட்டுமல்லாது கூடங்குளம் பஞ்சாயத்து அலுவுலகத்தையும், டாஸ்மார் கடையையும் போலீசாரே உடைத்து விட்டு, அதை பொதுமக்கள் தலையில் போட்டுள்ளனர். மேலும் கூடங்குளம் மக்களின் வாகனங்களையும், வீடுகளையும், கடைகளையும் காவல் துறையினர் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். சொந்த மக்களை அழித்தொழிக்கும் இந்திய அரசோடு தமிழர்கள் சேர்ந்திருக்க வேண்டுமா? 

இலங்கை அரசால் இதுவரை கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 500 தாண்டுகிறது. இந்த செயல் ஒருநாட்டின் மீது போர்தொடுப்பதற்கு சமம். இதே சம்பவம், கேரளா மாநிலத்தவர்களுக்கோ, கர்நாடக மாநிலத்தவர்களுக்கோ நடந்திருந்தால் இந்திய அரசால் மவுனம் காக்க முடியுமா? இல்லை அவர்கள்தான் சும்மா இருப்பார்களா! 

எங்களிடம் வலிமையான கடல்படை இருக்கிறது, என்று உலக அளவில் பீற்றி திரியும் இந்தியாவின் கடல்படை, தமிழர்கள் விசயத்தில் எங்கே போனது? ஒருபேச்சிக்கு அமெரிக்காவுக்கு அருகே இலங்கை இருந்திருக்குமேயானால் ஒரு அமெரிக்க குடிமகனை தொட்டிருந்தால் அமெரிக்க கடல்படை என்ன செய்யும்! யோசித்து பாருங்கள்!. 

இலங்கை கடல்படையை, நாய்களை அடித்து துரத்துவது போல் துரத்தி இருப்பார்கள். தமிழர்களில் சில அப்பாவிகள் நாம வல்லரசாகனும், அணுஉலை இருந்தால்தான் வல்லரசு, இலங்கை போன்ற அந்நிய நாடுகளின் விசயத்தில் தலையிட்டால்தான் நாம் வல்லரசு என்று நினைக்கிறார்கள். ஒருநாடு தனது நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்காத நிலையில் அதை வல்லரசாக கருத முடியாது. 

காவேரி நடுவர் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை இதுவரை கர்நாடகா மதித்ததே இல்லை. *இதே காவிரி தமிழ் நாட்டில் இருந்து* நாம் கர்நாடகாவிற்கு தண்ணீர் தர மறுத்தோம் என்றால் இந்தியாவின் மொத்த ராணுவமும் இங்கேதான் குவிக்கப்பட்டு இருக்கும். அந்த தண்ணீரை (இப்போது மின்சாரத்தை பகிர்வது போல்) மற்ற எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்துவிட்டு மீதத்தைதான் நமக்கு கொடுப்பார்கள்.

இன்றும் தமிழகத்தில் உள்ள அரசு சார்ந்த கோப்புகள் எல்லாம் ஆங்கிலம், மற்றும் ஹிந்தியிலேயே உள்ளது. இனப்படுகொலைகள் நடந்த இலங்கையில் கூட திரும்பிய பகுதிகள் எல்லாம் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என்று மும்மொழிகளும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இங்கே தமிழ் நாட்டில் தமிழில் கோப்புகள் இல்லை. ஆங்கிலமும், ஹிந்தியிலும் மட்டுமே உள்ளன. 

இது போதாதென்று இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அனுமதி கொடுக்கப்படாத தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, தேனி மாவட்டத்தில் உள்ள நியூட்ரினோ ஆய்வகம் போன்ற அழிவு சக்திகள் அனைத்தையும் தமிழகத்தை நோக்கி தள்ளிவிடுகிறார்கள். ஒரு கல்பாக்கம் தமிழ் நாட்டுக்கு போதுமானது மீண்டும் இதுபோன்ற அணு உலைகள் தேவையில்லை. 

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழர்களுக்கு போதுமானது. தமிழகம் ஒன்றும் பன்னாட்டு நிறுவனங்களின் குப்பை கூடை இல்லை. நமது வளங்களையும், இயற்கையையும் அழிக்கும் விசயங்களை வன்மையாக எதிர்ப்போம். நாம் தமிழர் என்று சொல்வோம். நீண்ட நெடிய வரலாற்று கொண்ட தமிழனுக்கு என்று ஒரு நாடு. தனி தமிழ் நாட்டின் சுதந்திர காற்றை சுவாசிக்க ஒவ்வொரு தமிழனும் தயாராக வேண்டும்.

வெள்ளையனுக்கு எதிராக ஒரு சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டது. அதுபோல் தமிழகத்தை மீட்க்க மீண்டும் காந்திய வழியில் ஒரு சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு நமது முழு ஆதரவை தெரிவிப்போம். இந்தியா என்கிற வல்லாதிக்க வடஇந்திய ஆட்சியோடு நாம் ஏன் ஒட்டி கிடக்க வேண்டும். சிந்திப்போம். 


கூடங்குளம் மற்றும் இடிந்த கரை மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று mptstar.blogspot.in
இணையத்தளம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 
.