குறையுமா ? பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை குறையுமா: கச்சா எண்ணெய் விலை வேகமாக வீழ்ச்சி
புதுடில்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருவதால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன. லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, ஜூலை 1ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெயின் அன்றாட விலைக்கேற்ப, நாள்தோறும் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மந்தத்தால் வந்த சரிவு: ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் உள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் கச்சா எண்ணெய், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் பயன்பாடு குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை பொறுத்தவரை, உற்பத்தி குறையாமல் உள்ளது. இதனால், இதன் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. சென்ற ஏப்ரல் மாதம், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 125 டாலராக இருந்தது. இது, தற்போது, 25 சதவீதத்திற்கும் மேல் குறைந்து, 80 டாலருக்கும் கீழ் சரிவடைந்துள்ளது.
இழப்பும், மதிப்பும்: இதனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு, அடக்க விலைக்கும் குறைவாக டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விற்பனையால் ஏற்படும் இழப்பு, நடப்பு நிதியாண்டில், இதுவரை, 22 சதவீதம் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளதால், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், அதன் இறக்குமதி செலவினம் அதிக அளவிற்கு குறையாத நிலை உள்ளது. பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை, மத்திய அரசு, கடந்த 2010ம் ஆண்டு நீக்கியது. இதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, உள்நாட்டில், பெட்ரோல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதன்படி, இறுதியாக, கடந்த ஏப்ரல் மாதம், 23ம் தேதி பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 7.54 ரூபாய் உயர்த்தப்பட்டது. நாடு முழுவதும், இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள், முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இதையடுத்து, சென்ற 2ம் தேதி, பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது.

முடிவு தாமதம்: மேலும், விலை குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், எண்ணெய் நிறுவனங்கள், இது குறித்து, முடிவு எடுப்பதில் தாமதம் செய்து வந்தன. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை, வரும் ஜூலை மாதம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாகஇருக்கும் என்று கருதப்படுகிறது. அதனால், பெட்ரோல் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக, எண்ணெய் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தினந்தோறும் மாறும் விலை: தற்போது, பெட்ரோல் விலையை இரு வாரங்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி அடைந்து வருவதால், இந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றாமல் உள்ளன. இந்நிலையில், புதிய விலை நிர்ணய நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து, எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், சர்வதேச கச்சா எண்ணெயின் அன்றாட விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. அதுபோல, இந்தியாவிலும், இந்த நடைமுறையை பின்பற்றுவது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் யோசித்து வருகின்றன. இது, அமலுக்கு வந்தால், நுகர்வோருக்கு பயன் அளிப்பதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
0 comments:
Post a Comment