Recent Video

உலகின் மிக நீண்ட நீச்சல் குளம்


நீச்சல் குளங்களை குறித்து அறியாத யாரும் இந்த உலகத்தில் இருக்க முடியாது.   நகரங்களில் இந்த நீச்சல் குளங்கள் செயற்கையாக கட்டப்பட்டும்  . கிராமங்களில் இந்த நீச்சல் குளங்கள் இயற்கையாக ( அதாங்க நம்ம ஊரு குளம் .. ஹி ஹி ) அமைந்தும் உள்ளது.  இந்த நிலையில்  இந்த உலகின் மிக நீண்ட நீச்சல் குளத்தை ஜெர்மனியில் கட்டுவதற்கு Realitties : United என்ற நிறுவனம் வடிவமைப்பை தயார் செய்துள்ளது.  
 
 
 
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் ஓடும் Spree என்ற நதியில் தான் இந்த பெரிய நீச்சல் குளம் கட்டப்பட போகிறது .  இந்த நீச்சல் குளத்தின் நீளம் 745 மீட்டர் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  17  ஒலிம்பிக் நீச்சல் குளங்களின் மொத்த நீளத்தை விட இது அதிகமாகும். 
 
3.9  ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையும் இந்த பெரிய நீச்சல் குளத்தின் தண்ணீரானது நீச்சல் குளத்தின் ஆரம்பத்தில் 1 . 8 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாணல் படுகையினால் வடிகட்டப்பட்டு நீச்சல் குளத்தினுள் அனுமதிக்கப்படும்.   நீச்சல் குளத்தின் பின் பகுதியில் குறுக்காக ஒரு அணை கட்டப்பட்டு சுத்திகரிக்கப்படாத நீர் பின்னால் நீச்சல் குளத்திற்குள் வராமல் தடுக்கப்படும்.
 
 
 
ஆற்றங்கரையின் பல பகுதிகளில் இதற்காக படிகள் அமைக்கப்பட்டு , தோட்டங்கள் , பூங்காக்கள் , உடை மாற்றும் அறைகள் அமைக்கப்படுவதினால் ஜெர்மன் மக்கள் அநேகர் இந்த நீச்சல் குளத்திற்கு படையெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த திட்டம் மிலன் நகரில் நடந்த மூன்றாவது  உலகளாவிய  ஹல்சியம் அவார்ட்ஸ் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது என்பது கூடுதல் தகவல் . 

புகை பிடிப்பவரா நீங்கள் .....? இதை கொஞ்சம் பாருங்கள்


புகை பிடிக்கும் பழக்கம் 3000 வருடங்களுக்கு முன்பாகவே இந்த உலகில் தோன்றி உள்ளது என் ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இன்றைய உலகில் புகை பிடிப்பது ஒரு ஸ்டைலான காரியமாக மாறி உள்ளது . டென்ஷன் ஆனால் தான் புகை பிடிக்கிறோம் என அநேகர் சாக்கு சொல்லுகிற போது அநேகம் இளைஞர்கள் .., ஏன் மாணவர்கள் கூட புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது . உண்மையில் இந்த புகை பிடிப்பதால் வருகிற காரியங்களை கொஞ்சம் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது .





சிகரட்கள் கிட்டத்தட்ட 4000 வேதிபொருட்களை கொண்டுள்ளது அவற்றில் 100 க்கும் மேற்பட்ட நச்சு பொருட்கள் உள்ளன என்பது கொஞ்சம் அதிர்ச்சி கலந்த உண்மை . தகவலுக்கு : http://quitsmoking.about.com/od/chemicalsinsmoke/a/chemicalshub.htm . சிகரெட்டில் கலந்துள்ள பொருட்களை அறிந்து கொள்ள கொஞ்சம் http://quitsmoking.about.com/cs/nicotineinhaler/a/cigingredients.htm பாருங்கள் .


சிகரெட்டில் உள்ள நிகோட்டின் புகையை உள் இழுக்க ஆரம்பித்த 10 வினாடிகளுக்குள் மூளையை சென்று அடைந்து விடும் . இது உடலின் எல்லா பகுதிகளிலும் கலந்து இருக்கும் . புகை பிடிக்கும் பெண்களின் தாய்ப்பாலில் கூட இந்த நச்சு இருக்குமாம் .
சிகரெட்டில் உள்ள கார்பன் monaxide ரத்த சிவப்பணுக்களின் ஹீமோ க்ளோபினை பாதித்து உடலுக்கு தேவையான ஆக்சிஜென் கிடைக்காமல் செய்து விடும் .
சிகரெட்டில் உள்ள கான்சர் உருவாக்கும் நச்சு பொருட்கள் , செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் முக்கியமான ஜீன்களை பாதித்து அவற்றின் மூலம் ஒழுங்கற்ற செல் வளர்ச்சி உண்டாகி கான்சர் உருவாகிறது .
புகை பிடிப்பதினால் சுவாச மண்டலம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது .
சேதமடைந்த செல்களை சரி செய்யும் antioxidants அளவு ரத்தத்தில் புகை பிடிப்பதின் மூலம் குறைகிறது .
புகை பிடிப்பவர் தனக்கு மட்டும் அல்லாமல் தன அருகில் நிற்ப்பவருக்கும் இதே பாதிப்பை ஏற்ப்படுதுகிறார் .


இத்தனை பாதிப்புகளை ஏற்ப்படுத்தும் இந்த புகை பழக்கத்திற்கு எதிராக கடுமையான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த சமுதாயம் உள்ளது . என்ன தான் சொன்னாலும் சம்பந்தப்பட்ட நீங்கள் முடிவு எடுத்தால் தான் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு அடிகோல முடியும் .


டிஸ்கி : இந்த கட்டுரையை எழுதும் போது எனக்கு இரண்டு காரியங்கள் நியாபகத்திற்கு வருகிறது .

கடவுள் மனிதன் புகை பிடிக்க வேண்டும் என நினைத்திருந்தால் அவனது மூக்கு தலைக்கு மேலே புகை போக்கி போல வைத்திருக்கலாம் .
ஒரு சிகரெட்டின் அளவு குறைய குறைய அதை புகைப்பவரின் ஆயுளும் குறைந்து கொண்டிருக்கிறது .

காலிப்ளவர் பிரியாணி



தேவைப்படும் பொருட்கள் :

பாஸ்மதி - அரைகிலோ
நெய்- 3 டீ ஸ்பூன்
பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி- முறையே 1,2,3,2
தயிர்- 100 கிராம்
தக்காளி விழுது-200 கிராம்
வெங்காயம்- 2
கொத்தமல்லி- அரை கப்
புதினா- அரை கப்
உப்பு- தேவைக்கு
பிரியாணி தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பச்சைமிளகாய் -2

காலிப்ளவர் பொரிக்க:
காலிப்ளவர்- நார்மலான சைஸில் ஒன்று
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
அஜினோ மோட்டோ- கால் ஸ்பூன்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுந்து - 2 ஸ்பூன்
அரிசி மாவு- ஒரு கைப்பிடி
எண்ணெய்- 100 கிராம்

பாஸ்மதியை தேவைக்கு நீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பாதி வேக்காட்டிலேயே வடித்துவிடவும்.

எண்ணெய் தவிர காலிப்ளவர்க்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊற விடவும்.

எண்ணெய் சூடாக்கி அதில் பொரித்து எடுக்கவும்.

கடாயில் நெய் விட்டு வாசனை பொருட்கள் சேர்த்து பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் இஞ்சி பூண்டு விழுந்து சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.

அதில் பிரியாணி தூளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

தக்காளி விழுந்தையும் தயிரையும் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரிய வதக்கவும்.

கொத்தமல்லி, புதினா சேர்த்து பாதியாக வதங்கும் வரை வதக்கவும்.

பொரித்த பூக்களை சேர்த்து 1 நிமிடம் மட்டும் வைத்திருந்து பின் இறக்கவும்.

சாதத்தில் கொட்டி மூடியிட்டு லேசாக குலுக்கி விட்டு 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.

பிரியாணி தயார். ரைத்தா உடன் பரிமாறவும். அசைவ கறிகளுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

நோன்பு கஞ்சி செய்யும் முறை

ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது.

மாலையில் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்து நாவரட்சி ஏற்பட்டு, உடலின் சர்க்கரை பகல் முழுதும் பயன்படுத்தப்பட்டதால் சிலருக்கு சோர்வு/தலைவலி ஏற்படும். இந்நிலையில் சோர்வுற்ற உடலுக்குத் தேவையான உடனடி புத்துணர்வை வழங்க அருமையான ஆகாரமாக நோன்புக்கஞ்சி இருக்கிறது.


தேவையானவை:
அரிசி – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை – கால் கப்
கொத்து கறி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 5
மல்லித் தழை – 2 கொத்து
புதினா – 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
உப்பு – அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
தேங்காய் – ஒரு மூடி
பட்டை – ஒன்று
கிராம்பு – 4
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி


செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும். கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கொத்திய கறியை போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும். மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும். எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும். அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.


அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும். பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும்.சுவையான நோன்புக் கஞ்சி தயார்.

இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது.

மக்களே அவசர எச்சரிக்கை..............!! உடனே நிறுத்துங்கள்..................!!





டெல்லி காவல்துறையின் மிகவும் முக்கியமான தகவல் இந்தியா முழுவதிற்கும். இன்னும் அடுத்த ஐயிந்து (5) நாட்களுக்கு ப்ரூட்டி
( FROOTI))நிறுவனத்தின் எந்த தயாரிப்பையும் பருக வேண்டாம். ப்ரூட்டி கம்பெனியில் வேலை செய்யும் எய்ட்ஸ் தொழிலாளியின் இரத்தம் கலந்து விட்டது என்று நேற்று (NDTV) தொலைக்காட்சி ஒளிபரப்பி உள்ளது...
எய்ட்ஸ் இரத்தம் கலந்த ஸ்டாக் எந்த பகுதிக்கு சென்று இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை,

மக்களே யாரும் ப்ரூட்டி என்ற பானத்தை பருகாதீர்கள்....

a closer look of the Frooti Bottle with a lizard like creature.

பெற்றோர்களே நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது!



பிறந்த குழந்தைகளுக்கு தலையில் நல்லெண்ணெய் தேய்க்ககூடாது. தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கனும். குழந்தை தலையிலும் உடம்பிலும் தேய்க்க தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்பால் விடுங்க. அது படபடன்னு கொதிச்சு அடங்கினதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் கஸ்துரி மஞ்சள் பொடியை போட்டு இறக்குங்க. பின்னர் அந்த எண்ணையை குந்தைக்கு பயன்படுத்துங்க.

குழந்தைக்கு 1 வயது வரும் வரை இந்த எண்ணையை தான் தேய்க்கனும். ஆனால் இந்த எண்ணெய் நல்லா போகுற மாதிரி தேய்ச்சி குளிப்பாட்டனும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்பில் சொறி சிரங்குன்னு எதுவும் வராமல் மேனி பட்டு போல் இருக்கும்.  பொதுவாக குழந்தைகளுக்கு நான்கு வயது வரை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பாட்டுவது தான் உசிதம். நல்லெண்ணெய் குளியல் குழந்தைகளுக்கு கூடாது.

முன்னெல்லாம்  ப்ரெஷ்ஷா தேங்காய் பால் எடுத்து காய்ச்சி அதிலிருந்து எண்ணை எடுத்து குழந்தைகளுக்கு தேய்ச்சி குளிப்பாட்டுவாங்க.. இப்பவும் கேரளாவுள அப்படிதான் செய்யறாங்க. ஆனா இந்த காலத்துல உடனுக்குடன் எண்ணெய் எடுக்குறதுலாம் முடியுற காரியமா? அதுக்கு பதிலா நல்ல தேங்காய் எண்ணெய்யை இரண்டு கரண்டி அளவுக்கு எடுத்து சுட வைத்து அதுல கால் கரண்டி தேங்காய்பாலும் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளும் போட்டா  தேங்காய் பால் சடசடங்கற சத்தத்தோட முறிஞ்சு ப்ரெஷ் தேங்காய் எண்ணையை கமகமன்னு மணக்கும்.

இதை குழந்தையோட தலை உடம்புன்னு ழுழக்கப்பூசி குளிப்பாட்டினா ஜோரா இருக்கும். எண்ணைபசை போக சீயக்காயெல்லாம் போக்கூடாது.. பாசிப்பயறு அல்லது கடலைமாவு தேய்ச்சு குளிப்பாட்டினாலே எண்ணைபசை போயிடும். இப்படி குளிக்க வைச்சா குழந்தைக்கு கரப்பான் சொறிசிரங்கு மாதிரியான சரும வியாதிகள் எதுவும் பக்கதுலேயே வராது. வெயில் காலத்துல ஒரு பக்கெட் தண்ணியிலேயே

குழந்தைகள் தலைக்குக் குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டுக் குளிப்பாட்டுவது நல்லது. மாதமொரு முறை வெந்தயம் 1 ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து 5 நிமிஷம் ஊறியபின் குளிப்பாட்டுவது சூட்டைத் தணிக்கும். கிருமிகள் அணுகாமல் தடுக்கும்.

பிறந்த குழந்தைகளுக்கு வேம்பின் கொழுந்து இலை சிறிதளவு, 2 மிளகு, சீரகம் இவைகளை மை போல் அரைத்து, அதில் சுண்டைக்காயளவு வெந்நீரில் கலக்கி, எண்ணெய் ஸ்நானம் முடிந்ததும் கொடுத்துவர, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்.

எந்த இடத்துல ரயில் வருது.. மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்!

ரயில் எந்த இடத்தில் வருகிறது என்பதை மொபைலிலேயே தெரிந்து கொள்ள புதிய வசதியை ஐஐடி கான்பூர் உருவாக்கியுள்ளது.
சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டும் என்றாலே டென்ஷன் தான். அதிலும் ரயில் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் ரயில் நிலையத்தில் பயணிகளிடத்தில் பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிடுகின்றது.
இனி மேல் இந்த பரபரப்பு தேவையில்லை என்று சொல்லுவது போல புதிய தொழில் நுட்ப வசதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரயிலின் நம்பரை மொபைலில் டைப் செய்து, 09415139139 அல்லது 09664139139 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்தால் போதும், ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை பெற ரயிலில் ஒரு ரிசீவரை பொருத்த வேண்டி இருக்கிறது. ஒரு ரயிலில் இந்த ரிசீவரை பொருத்த ரூ. 50,000 வரை ஆகிறது. இந்த வசதியை கிட்டத்தட்ட ரயில் ட்ராக்கர் என்று கூட சொல்லலாம். இந்த ப்ராஜெக்டிற்கு 121 கோடி செலவளித்திருக்கிறது ரயில்வே துறை.
ரயில் வரும் இடத்தினை கண்டறியும் இந்த புதிய வசதி ராஜதானி, சாதாப்தி, டியூரன்டோ போன்ற அதி வேக ரயில்களில் மட்டும் இப்போதைக்கு வழங்கப்பட இருக்கிறது. இன்னும் 18 மாதத்தில் இந்த ட்ரெயில் ட்ராக்கர் வசதி எல்லா ரயில்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
இதை வைத்து பார்க்கும் போது 2013-ஆம் ஆண்டில் இந்த வசதி அனைத்து ரயில்களிலும் வழங்கப்படும்.ரயில்வே துறை இந்த வசதியினை ரயில்களில் வழங்க இஸ்ரோவிடம் அனுமதியும் வாங்கி உள்ளது.
ரயில் வரும் இடத்தினை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிரோம் என்று கூட பலருக்கு தோன்றலாம். சில சமயங்களில் சின்ன சின்ன அவசரங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.
சில சமயங்களில் வேறு ஏதேனும் முக்கிய விஷயங்களை, ஒரு ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டு வர வேண்டி இருக்கும். அல்லது ஏதாவது பொருட்கள் ரயில் நிலையத்திற்குள்ளேயே வாங்கி வர வேண்டியது இருக்கும். ஆனால் ரயில் அதற்குள் வந்துவிட்டால் என்ன செய்வது என்று காத்து கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ரயில் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அந்த சவுகரியத்தினை இந்த ட்ரெயின் ட்ராக்கர் வசதியின் மூலம் பெறலாம். ரயில் பயணிகளுக்கு இந்த வசதி முக்கியமான ஒன்று தான்.

அஸ்ஸலாமு அலைக்கும்



அஸ்ஸலாமு அலைக்கும்

தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தங்கியிருக்கும் நோன்பாளிகளுக்கு ஸகர் 

உணவு இலவசமாக அனுப்பித் தரப்படும்.

முதல் நாள் இரவு 9:30 க்கு முன்பாக எங்களை அலைபேசியில் தொடர்பு 

கொண்டு விவரம் தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறோம்.

அலைபேசி: 9894007374, 9043501404, 9786519233.


நன்றி: அப்துல் வக்கில்.

நன்றி:எமனை ஷர்புதீன்.

(இதை போன்று மற்ற மாவட்டதில் உள்ள சகோதரர்களும் பின் பற்றலாமே)

ஓட்டை பஸ்சுக்கு எப்சி கொடுத்தது எப்படி?


ஆர்டிஓ அதிகாரிகள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
தெரிவித்தார். 20 நா்களுக்கு முன்புதான் அஏநுமதி தந்துள்ளார்கள் என்று கூறிய நீதிபதி, எப்படி கொடுத்தனர் என்று கேட்டார். பொறுப்பான அனைவரும் நாளை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் தர உத்தரவிட்டார்.
இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்கூல் பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலி சேலையூர் பள்ளி முதல்வர் கைது


ஸ்கூல் பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலி சேலையூர் பள்ளி முதல்வர் கைது



தாம்பரம்: பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக தாம்பரம் பள்ளி முதல்வர், பஸ் உரிமையாளர், டிரைவர், கிளீனர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் விடிய விடிய போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் எம்டிசி நகரை சேர்ந்தவர் சேதுமாதவன் (32), ஆட்டோ டிரைவர். மனைவி பிரியா (28). இவர்களது மகன் பிரணவ் (9), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். மகள் ஸ்ருதி (6), சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை வகுப்பு முடிந்ததும் பள்ளி பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டாள். பள்ளி பஸ்சில் 60 மாணவர்கள் இருந்தனர்.
முடிச்சூர் இ.பி. காலனி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வேகமாக திரும்பியபோது, நிலைதடுமாறிய சிறுமி ஸ்ருதி, இருக்கைக்கு கீழ் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்தாள். பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். அதுகூட தெரியாமல் டிரைவர், பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார். ஸ்ருதி விழுந்ததும் சக மாணவிகள் அலறினர். சாலையில் சென்றவர்கள், பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். டிரைவரை சரமாரியாக தாக்கினர். பின்னர் மாணவர்களை இறக்கிவிட்டு, பஸ்சை தீ வைத்து கொளுத்தினர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் படைப்பையை சேர்ந்த சீமானை (58) கைது செய்தனர். பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன் (30), பள்ளி முதல்வர் விஜயன் (60), கிளீனர் சண்முகம் (18) ஆகியோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரித்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதிகாலை 3.30 மணியளவில் அனைவரையும் கைது செய்தனர்.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் செந்தமிழ்ச் செல்வி, இணை இயக்குநர் கார்மேகம், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழ்மணி ஆகியோரும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். ‘விசாரணை அறிக்கையை முதல்வருக்கு அனுப்புவோம். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்Õ என்று பள்ளிக் கல்வி துறை செயலர் சபீதா தெரிவித்தார். மாணவி பலியானதை தொடர்ந்து சீயோன் பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் 4 பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பஸ்சில் இருந்து விழுந்து மாணவி இறந்தது குறித்து சம்பந்தப்பட்ட ஆர்டிஓ முழுமையாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி திறந்தவுடன் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது. குறை ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அளிக்கப்படும் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்படும். விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் பர்மிட் ரத்து செய்யப்படும்’ என போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.
பள்ளி பஸ்சில் ஓட்டை இருப்பது தெரிந்தும் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் இதே ஓட்டையில் மாணவி ஸ்ருதியின் கால் சிக்கியுள்ளது. அப்போது அதிர்ஷ்டவமாக தப்பிய சிறுமி, இதுபற்றி தந்தையிடம் கூறியுள்ளார். அவரும் பஸ்சில் உள்ள ஓட்டையை அடைக்கும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். டிரைவர் உள்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், அநியாயமாக ஒரு சிறுமியின் உயிர் போயிருக்காது. அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடைகள் அடைப்பு பள்ளி சிறுமி இறந்ததையடுத்து முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன.
ஐகோர்ட் கடும் கண்டனம்

பள்ளி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி பலியான சம்பவத்துக்கு ஐகோர்ட் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் இன்று காலை கோர்ட்டுக்கு வந்ததும், அரசு வக்கீல் வெங்கடேஷை பார்த்து, ‘சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி, பஸ் ஓட்டையில் விழுந்து இறந்தது மிகவும் சோகமானது; வேதனையானது. நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இதுபோன்ற பஸ்கள் இயக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. அட்வகேட் ஜெனரல் எங்கே இருக்கிறார்? அவர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இதுதவிர சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!


உடல் எடையைக் கூட்ட, குறைக்க, திராட்ச்சை சாப்பிடுங்கள்!!

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சை பழம் உதவுகிறது. இவற்றில் கறுப்புத் திராட்சை,பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள். உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். அதே நேரம் திராட்சை உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அதாவது, கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேலை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து விடும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வரும். நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

ராகிங் கொடுமையால் துயர சம்பவம்?


ராகிங் கொடுமையால் துயர சம்பவம்?


ஹைதராபாத்,july,24: ஆந்திர பிரதேச மாநிலத்தில் சீனியர் மாணவிகளின் ராகிங்கால் மாணவிக்கு பேசும் சக்தி இழக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் ஒன் மாணவியான ஷியாமிலுக்கு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் காயத்ரி ஜூனியர் கல்லூரி ஹாஸ்டலில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சாரம் தடைப்பட்ட வேளையில் மாணவியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த சீனியர் மாணவிகள் அவரை தாக்கியுள்ளனர். நைலான் கயிற்றால் மாணவியின் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்துள்ளனர். இதனால் அவர் பேசும் சக்தியை இழந்துள்ளார்.
எத்தனை சட்டம் கொண்டுவந்து என்ன பயன்.  மாணவர்கள் நீங்கள் திருந்தாவிடில்

சென்னையில் விரைவில் மோனோ ரெயில் திட்டம் தொடங்கப்படும்.


ஜூலை 21: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் “மோனோ” ரெயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். முதல் கட்டமாக சென்னை, புறநகர் பகுதியில் “மோனோ” ரெயில் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. 

எனவே, புறநகர் பகுதி மக்களின் போக்கு வரத்து வசதிக்காக மோனோ ரெயில் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சென்னை புறநகர் மோனோ ரெயில் திட்டத்தில் 4 வழித் தடங்களுக்கான பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் வேளச்சேரியில் இருந்து வண்டலூர் வரை 23 கிலோ மீட்டர் தூரமும், வடபழனியில் இருந்து பூந்தமல்லிவரை 18 கி.மீ. தூரமும் 2 மோனோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. 

இது போல் வண்டலூரில் இருந்து புழல் வரை 54 கிலோ மீட்டர் தூரம் மோனோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. பூந்த மல்லியில் இருந்து கத்திப் பாராவரை அமைக்கப்படும் மற்றொரு மோனோ ரெயில் பாதையின் நீளம் 16 கிலோ மீட்டர். 8,500 கோடி ரூபாய் செலவில் இது செயல்படுத்தப்படுகிறது. 

இந்த பணிக்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவிலான டெண்டர் மூலம் பல நிறுவனங்கள் இந்த திட்டப்பணிகளை செய்ய தயாராக உள்ளன. இதில் 5 நிறுவனங்கள் அரசால் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு “மோனோ” ரெயில் பாதைகள், மோனோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும். இன்னும் 3 மாதத்தில் இந்த பணிகள் தொடங்கி விடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மியன்மாரில் கொடூரமாக கொன்றொழிக்கப்படும் முஸ்லிம்கள்.


ஜுலை 21: ஆரம்பத்தில் இந்திய பெருநிலப்பரப்பில் ஒரு பகுதியாக இருந்து பின்பு பிரிந்து சென்ற ஓரு தென்கிழக்காசிய நாடே பர்மாவாகும். இது 1989ல் ‘ஐக்கிய மியன்மார்’ என தன்பெயரை மாற்றிக் கொண்டது. இந்நாடு நமது இலங்கை நாட்டைக் காட்டிலும் சரியாக ஒருமாதத்திற்கு முன்னர் 1948 ஜனவரி மாதம் 4ஆம் திகதி பிருத்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

மியன்மாரில் இருக்கும் 54 மில்லியென் சனத்தொகையில் 8.1 மில்லியன் மக்கள் முஸ்லிம்களாகும். அதாவது மொத்த சனத் தொகையில் 15 வீதமானோர் ஈமானை சுமந்தவர்களாகும். இந்தவகையில் தேரோவாத பௌத்தத்தை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் மத்தியில் இரண்டாவது சமயப்பிரிவினராக முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நாட்டில் முக்கிய நகரங்கள் தோறும் முஸ்லிம்கள்; உள்ளனர். பிராந்திய ரீதியாக பார்க்கின்றபோது மேற்கு மியன்மாரில் அரக்கான் (யுசயமயn) பிராந்தியமே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தின் விஸ்தீரணம் 32,180 சதுர கலோ மீற்றராகும். இதில் 75 வீதத்திற்கு மேல் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.( இப்பிராந்தியமே தற்போது செந்நிறமாக மாறி வருகின்றது)
மியன்மார் சுதந்திரம் அடைவதற்கு முந்திய நிலைமையைக் காட்டிலும் சுதந்திரத்திற்கு பின்பே முஸ்லிம்களுக்கெதிரான துவச விதைகள் நடெங்கும் பாரியளவில் விதைக்கப்பட்டன. அவை பென்னம் பெரிய விருட்சங்களாக இன்று வளர்ந்தோங்கி விட்டன. இதனால் ஒரு காலத்தில் கீழத்தேய நாடுகளின் அரிசிக்கிண்ணமாக பார்க்கப்பட்ட மியன்மார் தற்போது முஸ்லிம்களுக்கான வதைகூடமாக பரிணமித்திருக்கின்றது.
(இக்கட்டுரை சுருக்கமாக எழுதப்படுவதால் சுதந்திரத்திற்கு முந்திய நிலைமைகள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை.)
இலங்கை முஸ்லிம்களைப் போலவே மியன்மார் முஸ்லிம்களில் அனேகர் அரபிய வம்ச வழிவந்தவர்களாகும். எட்டாம் நூற்றாண்டில் ஓர் நாள் மியன்மாருக்கு அண்மையாக கப்பலில் பயணித்த அரபியர் சீரற்ற காலநிலை காரணமாக கடலில் பயணத்தைத் தொடரமுடியாது மியன்மாரில் கால் பதித்தனர்.(ஏழாம் நூற்றாண்டில் ஆரம்ப காலத்தில் மியன்மாரில் அரபியரின் தொடர்பு இருந்ததாக சிலர் கூறுகின்றனர்) அன்றிலிருந்து அரபியர்களுக்கும் இந்நாட்டிற்குமிடையிலான தொடர்பு நீண்டது. அரபியர்கள் அந்நாட்டின் பூர்வீகக் குடிகளாயிருந்த பர்மிய பெண்களை ‘நிகாஹ்’ செய்தனர். அதன் மூலம் முஸ்லிம் குடிபெருக்கம் ஏற்பட்டது.

அரபியர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்ததும் அவர்கள் பர்மிய பெண்களை ‘நிகாஹ்’ செய்ததும் அதன் மூலம்; முஸ்லிம்கள் பெருகியதும் இதற்கெல்லாம் மேலாக ஒப்பீட்டளவில் மியன்மாரின் பூர்வீக புத்திரர்களைக் காட்டிலும் முஸ்லிம்கள் சிறந்த வாழ்க்கை வசதியைப் பெற்றிருந்ததும் பேரினவாதிகளின் உள்ளத்தில் நீண்ட காலமாக பொறாமைத்தீயைப் பற்றவைத்தது. இதன்வெளிப்பாடாகவே பல தசாப்தங்களாக முஸ்லிம்களுக்கெதிரான சூட்சுமமான நாசகாரத்திட்டங்களின் அரகேற்றம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மியன்மாரில் முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாக கொல்லப்படுவதும் இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதும் சொத்துக்கள் கபளிகரம் செய்யப்படுவதும் காலம் காலமாக இடம்பெற்று வந்த போதும் கடந்த ஓரு தசாப்தமே இனஅழிப்பின் சிகரத்தை எட்டியுள்ளது.

இக்கால கட்டத்தில் முஸ்லிம்கள் வகை தொகை இல்லாது கொலை செய்யப்பட்டனர். பள்ளிவாசல்கள் இடித்துத் தகர்க்கப்பட்டன.முஸ்லிம் பாசாலைகள் யாவும் மூடப்பட்டன.அங்கு வாழும் முஸ்லிம்களால் இஸ்லாத்தை படிப்பதும் போதிப்பதும் ஆகாது.இஸ்லாமிய ஆடைகளை அணிவதற்கு இயலாது. சங்கங்கள் அமைப்பதற்கும் கூட்டம் கூடுவதற்கும் உரிமை இல்லை. பொதுவைத்திய சாலைகளில் சிகிச்சை கிடையாது. ஹஜ்ஜுக்கு யாத்திரை செல்லத் தடை. பெருநாட்கள் கொண்டாட முடியாது. இதெல்லாம் என்ன அல்லாஹ்வை தொழுவதற்கு கூட முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.

கடந்த 2001ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட தீவிர போராட்டத்தின் தொடரில் அதியுச்சத்திற்குச் சென்று 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் தீவிர வாதிகளின் முடிசூட்டுவிழா பிரகடனம் செய்யப்பட்டது போல் முஸ்லிம்களுக்கெதிரான வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்திலிருந்து பல்லாயிக்கணக்கான மக்கள் வெட்டியும் கொத்தியும் தீயிட்டு கொளுத்தியும் கொல்லப்படுகின்றனர். கணக்கு வழக்கின்றி பெண்களின் மானங்கள் கயவர் கூட்டங்களினால் துடைத்தெறியப்படுகிறன.கோடி கோடியாய் உடைமைகள் கொள்ளையிடப்படுகின்றன. மாடி வீடுகள் தொட்டு குடிசைகள் வரை வாழிடங்கள் யாவும் தீக்கிரையாக்கப்டு அழிக்கப்படுகின்றன. ( கடந்த சில வாரங்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது)
மியன்மாரில் செயற்பட்ட நடுநிலையான ஊடகங்களின் பணிகள் முடக்கப்பட்டதனால் முஸ்லிம்களது பாதிப்புக்கள் பற்றிய தகவல்கள் வெளியுலகைச் சென்றடைவது தடைப்பட்டுள்ளது.

இதனால் உயிர் பிழைத்தோர் இழப்பதற்கு எதுவுமில்லாத நிலையில் பரம்பரையாக வாழ்ந்த தமது சொந்த வாழிடத்தைவிட்டுவிட்டு அகதி நாமத்தோடு பங்காளதேஷ; முதலான அயல் நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வாறு இடம்பெயரமுடியாதோர் சொந்த நாட்டிலேயே வெட்டவெளிகளில் ஊண் உறக்கமின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இத்தகைய இன ஒழிப்பு வேலைத்திட்டத்தை சரியாக திட்டமிட்டு, மிக நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்பவர்கள் யார். அவர்கள்தான் ‘இனந் தெரியாதவர்கள்’ !

இவ்வளவும் நடந்தபோதும் நடத்தாட்டுகின்றபோதும் மியன்மார் அரசாங்கம் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறது. ஆம். அரசாங்கம் அல்லவா அது அப்படித்தான் நடக்கும்! ஆனால், 1991ஆம் ஆண்டில் சமதானத்திற்கான நோபல் பரிசைப் வென்ற எதிர்க்கட்சி தலைவி ஆங்சாங் சூகி கூட இவ்அக்கிரமம் குறித்து சும்மா ஓர் வார்த்தையைத்தானும் வெளியிடாதது அவரும்கூட அந்த ‘இனந் தெரியாதவர்’ என்பதனாலோ ?

மனித உரிமைகள் அமைப்புக்களும் ஐக்கிய நாடுகள் தாபனமும் இவ்விடயத்தில் எவ்வித அக்கறையையும் வெளிக்காட்டவில்லை. இந்நிறுவனங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்கள் மீது பெரிதும் கரிசனையற்றவர்கள் என்பது நாம் அறிந்த விடயம்தான். ஆனால், முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம் நிறுவனங்களும் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதன் மர்மம்தான் விளங்கவில்லை.
ஈமானிய இதயங்களே, மியன்மார் முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு முதலில் அல்லாஹ்விடம் உளப்பூர்வமாக இறைஞ்சுங்கள.; அதன் பின்பு அகதிகளாக இடம்பெயர்ந்திருப்போருக்காவது இயன்ற அளவு உதவுங்கள். உங்கள் ‘ஹதியா’க்களுக்கு ஒன்றுக்கு பன்மடங்கு நன்மையை குவிப்பதற்கு ரமழான் மாதமும் வந்து வாய்த்திருக்கின்றது. உங்கள் உதவிகளைப் பெற்று உரியவர்களுக்கு வழங்குவதற்காக நம்பிக்கையான முஸ்லிம் நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

அத்தோடு, இம்மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பொறுப்பற்ற முறையில் செயற்படும் மியன்மார் அரசாங்கத்தை நோக்கி சர்வதேச சமூகம் கூரிய பார்வையை செலுத்துவதற்கு பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் பெருந்தகைகளே உங்கள் ஆற்றலை மிகக் கவனமாக வெளிப்படுத்துங்கள். அதன் மூலம் மியன்மார் முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன்வாருங்கள்.

தெரிஞ்சுக்கோங்க-(Maths Tricks)



        ******ப்பூ ...இவ்ளோதானா..!******

                 


(ரமேஷ் ): டேய்..சுரேஷ்..மேத்ஷ்(Maths) எக்ஸாம் எப்டி எழுதியிருக்க?


(சுரேஷ்) : எல்லா சம்சும் கம்ப்ளீட் பண்ணனும்னு நெனைச்சேன்.
                    பட் நிறைய ஸ்டெப்சு இருந்ததால முடியல..


(ரமேஷ் ): ஆமாண்டா.. நம்ம அப்பாக்களெல்லாம் சின்ன சின்ன 
                  கால்குலேஷன் (Calculation) போடறதுக்கு கூட   
                  கால்குலேட்டரை   அல்லது கம்ப்யூட்டர்ல 
                   இருக்கற கால்குலேட்டரை யூஸ்  பண்ணறாங்க.. 


 (சுரேஷ்) : ம்ம் .. ஸ்கூல்ல நமக்கும் பர்மிஷன் கொடுத்தா நல்லா
                    இருக்கும்...


(ரமேஷ் ): கவலைப் படாதடா...அதுக்குப் பதிலா 
                  மல்ட்டிப்ளிக்கேஷன் (Multiplication) பண்றதுக்கு ஷார்ட் கட் 
                 மெதெட்ஸ் நிறைய இருக்குடா..எங்க மாமா சொல்லிக் 
                  கொடுத்தாரு..ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்டா...



(சுரேஷ்) :  அப்படியா..ப்ளீஸ் சொல்லுடா..






(ரமேஷ் ): இப்ப இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட டிஜிட்ஸ்(Digits)
                   நம்பர்ஸ்-ஐ Multiplication பண்றதை பார்க்கலாம்.


For example, 23 x 41 = 943 இந்த Multiplication-ஐ  ஷார்ட் கட் மெதெட்ஸ்-ல ஈசியா போடலாம்.


To multiply two numbers (of two or more digits), split each number into two parts. If the first number is a1 + b1 and the second number is a2 + b2, then the product of the two numbers is:

                      (a1 x a2) + (a1 x b2 + b1 x a2) + (b1 x b2) 
    

The solution comprises three parts (as shown by the boxes and arrows above): the head, the middle, and the tail.


   1. The digits on the right are multiplied vertically to get the tail part: b1 x b2 
     (excess carried over)
   2. All digits are multiplied crosswise and added together to get the middle part:

       a1 x b2 + b1 x a2 (excess carried over)
   3. The digits on the left are multiplied vertically to get the head part: a1 x a2



In our example 23 x 41  = 943,

Consider       2 as a1
             3 as b1
             4 as a2 &
             1 as b2
The steps are:


   1. 3 x 1 = 3
   2. 2 x 1 + 3 x 4 = 14, put down 4 and carry over 1
   3. 2 x 4 = 8, plus the 1 carried over, is 9


இப்ப இரண்டுக்கு மேற்பட்ட டிஜிட்ஸ்(Digits) நம்பர்ஸ்-ஐ Multiplication பண்றதை பார்க்கலாம்.


Example (2) : 108 x 64 = 6912

                           

The steps are:


   1. 8 x 4 = 32, put down 2 and carry over 3
   2. 10 x 4 + 8 x 6 = 88, plus the 3 carried over, is 91; put down 1 and carry
        over 9
   3. 10 x 6 = 60, plus the 9 carried over, is 69





(சுரேஷ்) : very useful-டா. இன்னும் வேற Techniques இருக்காடா?


(ரமேஷ் ): ம்ம்..சொல்றேன் ...இப்ப "5'-ல் முடியும் 2 digits Numbers -ஐ
                    Multiply பண்றதை பார்க்கலாம்.


For example, 25 x 25 = 625,
   Now Consider
       Before "X" symbol Nos
              2 as a1
              5 as b1
       After X" symbol Nos
              2 as a2
              5 as b2
      
       now use formula,
          i) b1 X b2 (i.e) 5 X 5 = 25


         (ii) a1 X (a2+1) (i.e) 2 X 3 = 6
         Now Put first result at right side
          second result at left side.
         we got, 25 X 25 = 625
Example(2):
                   65 x 65 = 1225
Before "X" symbol Nos
              6 as a1
              5 as b1
       After "X" symbol Nos
              6 as a2
              5 as b2
      
       now use formula,
          i) b1 X b2 (i.e) 5 X 5 = 25
         (ii) a1 X (a2+1) (i.e) 6 X 7 = 42
         Now Put first result at right side
                second result at left side
         we got, 65 x 65 = 4225


      
         (சுரேஷ்) :   ரொம்ப தேங்க்ஸ்டா..இன்னும் நிறைய Short cuts சொல்லிக் கொடுடா..


(ரமேஷ் ):    ஷ்யூர் டா...ஏன்னா நீ என் நண்பேண்டா...!

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் பாடல்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முதல் பாடல்

    First ever song composed by AR Rahman


விலை வாசி குறையுமா ...? வாய்ப்பிருக்கிறதா ...?

இப்பொழுது எங்கே பார்த்தாலும் , எதை எடுத்தாலும் விலை அதிகமாகி கொண்டே தான் போகிறது . எந்த பொருளும் விலை குறைந்த மாதிரி இல்லை என புலம்பும் அநேகரில் நானும் ஒருவன் . ஒவ்வொரு முறை விலை கூடும் போதும் , விலைவாசியை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டது என குற்றம் சொல்லுவோரும் உள்ளனர் . உண்மையில் விலைவாசி குறையுமா ....? அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது டஜன் கேள்வி .





ஒரு பொருளின் விலை எதை வைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் , அதன் தேவை ( Demand ) மற்றும் உற்பத்தியை ( Supply ) பொருத்தே. ஒரு சின்ன உதாரணம் காண்போம் ..

10 பேருக்கு ஒரு நாள் அரிசி தேவை - 10 கிலோ என்று வைத்து கொள்ளுவோம் . ஆனால் 30 கிலோ அரிசி உற்பத்தி செய்கிறோம் என்றால் உற்பத்தியான அரிசி விற்பனை ஆகவேண்டும் ( விற்பனை ஆனால் தான் விற்றவனும் , உருவாக்கியவனும் சாப்பிடமுடியும் ) என்பதற்காக அதனுடைய விலை சற்றே குறைத்து விற்பனை செய்யப்படும் .

ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி 5 கிலோ தான் என்று வைத்துக்கொள்ளுங்கள் . அதனுடைய தேவை அதிகரிப்பதாலும் , உற்பத்தி குறைந்து இருப்பதினாலும் விலை அதிகமாகி விடும் .




இது ஒரு சின்ன உதாரணம் தான் . மிக முக்கியமாக தேவை அதிகரிக்கிறது ஆனால் உற்பத்தி குறைகிறது . இது தான் சாராம்சம் ... சரி .. இதற்க்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போமே ..!


மக்கள் தொகை பெருக்கம் :





இது ஒரு முக்கியமான காரணம் . ஒவ்வொரு ஆண்டிலும் மக்கள் தொகை இந்தியாவில் பெருகி வருகிறது . தற்பொழுது 121 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை வெகு விரைவில் சீனாவை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஒவ்வொரு குழந்தை பிறக்க பிறக்க தேவை அதிகமாகிறது என்று அர்த்தம் . அதனால் தான் குழந்தை கட்டுப்பாட்டு முறைகள் அரசால் மக்கள் மத்தியில் போதிக்கப்பட்டு வருகிறது . ஆனால் வழக்கம் போல நாம் அதை கண்டுகொள்வதில்லை என்பது வேறு விஷயம் ....


விவசாயத்தின் தேக்கம் :






நாட்டின் பல இடங்களில் விவசாயம் அழிந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . ஏன் எனில் விவசாயத்தினால் கிடைக்கும் வருமானம் போதாத காரணத்தினால் வேறு வேலைகளை தேடி விவசாயிகள் பயணமாகிறார்கள் . அதனால் தான் அரசும் இயன்ற வரையில் இலவச மின்சாரம் , உர மானியம் என்றெல்லாம் பல கொடுக்கிறது . காரணம் அப்படியாவது விவசாயம் அழியாமல் இருந்தால் உற்பத்தி பெருகுமே ...




ரியல் எஸ்டேட் மோகம் :





தற்பொழுது நாட்டை பிடித்திருக்கும் மிகப் பெரிய பகைமை இது தான் . வீடு கட்ட இடம் என்ற நிலை போய் , நிலம் வாங்கி விற்பது ஒரு தொழிலாய் மாறின பிறகு , என்னமோ அழிவது எல்லாம் விளை நிலங்கள் தான் . அதில் தான் நல்ல தண்ணீர் , பசுமை இருப்பதால் விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன. மறைமுகமாக உற்பத்தி அழிக்கப்படுகின்றன ...




சர்வதேச சந்தையில் எரிபொருளின் ஏற்ற / இறக்கங்கள் :
நமது எரிபொருள் தேவை சர்வதேச சந்தையை நம்பி இருக்கிற படியால் , எரிபொருள் விலை உயருகிற பொழுது , அதனோடு கூட சேர்ந்து அது சம்பந்தப்பட்ட விலையும் உயர்கிறது .


நாம் என்ன செய்யலாம் :-
கூடுமானவரை ..... நாம் இருவர் ...நமக்கு ஒருவர் .....! சரி பரவாயில்லை நமக்கு இருவர் ....
விவசாய நிலம் இருக்குமானால் தலையே போனாலும் விற்பனை செய்ய வேண்டாமே ... ஏதாவது விவசாயம் நடக்கட்டும் .
ரியல் எஸ்டேட் தொழிலை ஆதரிக்கும் வகையில் அதிக நிலங்கள் வேண்டாமே ... டிஸ்கி : இன்னும் சில வருடங்களில் விலை பட்டியல் ...
ஒரு லிட்டர் பெட்ரோல் - 250 ருபாய் .
ஒரு கிலோ அரிசி - 100 ருபாய்
ஒரு கிலோ உப்பு - 50 ருபாய் ( இது கூடவா ..!)

பெரிய அலை மின் நிலையம்

மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் , மின்சாரம் உற்பத்தி செய்யும் அணைத்து வழிகளையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அணைத்து நாடுகளும் முயன்று வரும் சூழலில் மிக பெரும் அலை மின் நிலையம் ஓன்று பிரான்சின் கடல் பகுதியில் அமைக்கப்படுகிறது.





அயர்லாந்து வை தலைமையிடமாக கொண்ட Open Hydro என்ற நிறுவனம் இந்த அலை மின் நிலையத்தை நிறுவப்போகிறது. 850 டன் எடையுள்ள மிக பெரிய டர்பைன்கள் நான்கினை பிரான்சின் கடலில் பொறுத்த இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது . இந்த டர்பைன்கள் ஒவ்வொன்றும் 2 MWe மின்சாரத்தை கொடுக்கும் சக்தி படைத்தவை .


72 அடி விட்டமுள்ள இந்த டர்பைன்கள் கடலில் 115 அடி ஆழத்தில் நிறுவப்பட போகிறது . 2012 ம் ஆண்டில் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த அலை மின் நிலையத்தின் மூலம் 4000 வீடுகளுக்கு தேவையான மின்சாரம் கொடுக்க முடியும் என நம்பப்படுகிறது .

பாரிமுனை என்ற பெயர் வர காரணம் ( வரலாற்று சுவடுகள் ) !!!


மெட்ராசுக்கும் பாரீசுக்கும் என்ன தொடர்பு? பிரெஞ்சுக்காரர்களுடன் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த பிரிட்டீஷார் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதிக்கு பிரான்சின் தலைநகரத்தின் பெயர் வர எப்படி அனுமதித்தார்கள்? சென்னையின் மையப் பகுதியான பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பாரிமுனையைக் கடக்கும்போது இப்படி ஒரு கேள்வி உங்களுக்குள் எழலாம். இந்த கேள்விக்கான விடையை நான் தேடிய போது, சற்றும் எதிர்பாராத ஒரு பதில் கிடைத்தது.

பாரீசுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஒரு சுவாரஸ்யமான மனிதர்தான் இந்த பெயர் வரக் காரணம் என்றும் தெரிய வந்தது. தாமஸ் பாரி என்ற அந்த மனிதர், இங்கிலாந்தின் வேல்ஸ் நகரில் இருந்து இந்தியாவில் வியாபாரம் செய்வதற்காக 1788ஆம் ஆண்டு மெட்ராசுக்கு வந்தார். கிழக்கு இந்திய கம்பெனியாரிடம் அனுமதி பெற்று தனி வர்த்தகராக தம்மை பதிவு செய்துகொண்ட பாரி, பல்வேறு பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டார். ஆனால் அவரின் முக்கியமான வியாபாரம் வட்டிக்குப் பணம் கொடுப்பது.

வட்டி என்றால் சாதாரண வட்டி அல்ல 12.5% வட்டி, இதுதவிர 1% கமிஷன் வேறு. ஆனாலும் அவரிடம் வட்டிக்கு வாங்க நிறையப் பேர் இருந்தார்கள். திப்பு சுல்தான் போன்றவர்களோடு சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் என்பதால், நிறைய இளவரசர்களும், கிழக்கிந்திய அதிகாரிகளும் போர்த் தேவைகளுக்காக பாரியிடம் கை ஏந்தினார்கள். பாரியின் வியாபாரமும் ஓஹோவென்று இருந்தது.
இதனால் 1792இல் பாரி சொந்த அலுவலகம் ஒன்றைத் தொடங்கினார். இந்த அலுவலகம் பல்வேறு துணிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. திடீரென வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட, அனைத்தையும் விட்டுவிட்டு 1796இல் கர்நாடக நவாப்பின் கருவூல அதிகாரியாக சிறிது காலம் பணிபுரிந்தார். பின்னர் 1800இல் கிளைவ் பிரபு ஆளுநராக வந்தபிறகு மெட்ராசில் வர்த்தகர்களின் நிலை மாறியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு தொடர்பில்லாத தனி வர்த்தகர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி, கோட்டையைவிட்டு வெளியேற்றினார் கிளைவ். அப்போதுதான் தாமஸ் பாரி, இப்போது பாரீஸ் கார்னர் என்று அழைக்கப்படும் பகுதிக்கு வந்தார்.
ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல், மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது. அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது. அதைத்தான் வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி. 1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது.

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி, நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இந்த சூழலில் தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார் ஜான் வில்லியம் டேர் (John William Dare). பாரி கட்டடத்தின் பெயர் 'டேர் ஹவுஸ்' என்று இருப்பதற்கு இந்த டேர்தான் காரணம். கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால், பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர்.

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக 1823இல் இங்கிலாந்து திரும்ப முடிவெடுத்தார் பாரி. அவரின் வழியனுப்பு விழாவுக்காக உள்ளூர் வர்த்தகர்கள், பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர். ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்துவிட்டதால், அவர் ஊருக்கு போகாவிட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர். இந்தளவு மக்கள் மனதில் இடம்பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும், ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும்தான் காரணம்.

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால், தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு செய்யப் போனபோது காலரா வந்து உயிரிழந்தார் பாரி.

'உல்லாசமாக' வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட. அவர் எழுதி வைத்த உயிலே, இதற்கு அத்தாட்சி. தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி. தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண்பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11 ரூபாயும், செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் தலா 5 ரூபாயும், மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்ற மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும், உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்கும் குழந்தைக்கு 50 ரூபாயும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக் கொண்டார். 1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிபட்டு அவரும் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தார். ஆனால் இரு நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை. எங்கிருந்தோ வந்து, சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து, மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த இருவரையும், பாரிமுனையும், அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

* தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது
* முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
* அமெரிக்க தூதரகமும் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது.

naan ee online movie

Naan ee Online Movie

online play

download  (coming soon)
.