Recent Video

குற்றாலத்தில் குளு,குளு சீசன்: அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் குளு,குளு சீசன்:  அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி



குற்றாலத்தில் குளு,குளு சீசன் நிலவுகிறது. அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்து அருவிகளில் குளித்து மகிழ்வர்.

கடந்த ஆண்டு சீசன் சரியான நேரத்தில் அதாவது ஜுன் 1-ந்தேதி அதிரடியாக துவங்கியது. தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பெருமளவு கொட்டியது. ஆனால் இந்தாண்டோ நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 7-ந்தேதி மெயினருவியில் தண்ணீர் விழத்தொடங்கியது. ஒரு வார காலம் மட்டுமே தண்ணீர் விழுந்த நிலையில், அதன் பிறகு குற்றாலம் பகுதியில் சாரல் இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து பெருமளவு குறைந்துவிட்டது.

மெயினருவி மற்றும் ஐந்தருவியில் மட்டும் குறைந்த அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனால் லட்சக்கணக்கில் பணம் முதலீடு செய்து ஏலம் எடுத்த வியாபாரிகளும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தனர்.

சீசன் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு காலம் நிறைவு பெற்ற நிலையில், குற்றாலம் பகுதியில் கடந்த 2 தினங்களாக லேசான சாரல் இருந்து வந்தது. குளு, குளுவென தென்றல் காற்று வீசி வந்தது. வெயிலே தெரியாத அளவிற்கு மேகக்கூட்டங்கள் திரண்டிருந்தது. இதனால் நேற்று ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை மெயினருவில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது.

ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. குளு, குளு சீசன் நிலவுவதாலும், அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் குற்றால சீசனும் நன்றாக களைகட்டி விடும் என சுற்றுலா பயணிகள் நம்பிக்கையில் உள்ளனர். மேலும் இதே நிலை குற்றாலத்தில் நீடித்தால் இன்னும் சில தினங்களில் புலியருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்டவைகளில் தண்ணீர் விழ தொடங்கிவிடும்

குரோம்பேட்டையில் மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் சாவு: காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

குரோம்பேட்டையில் மனைவியை மிரட்ட தீக்குளித்தவர் சாவு: காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

குரோம்பேட்டை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (25). பெயிண்டர். இவரது மனைவி அனிதா (23). நாகராஜனும், அனிதாவும் 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 
இவர்களுக்கு தினேஷ் (3 1/2) என்ற குழந்தை உள்ளது. அனிதாவுக்கு அவரது கணவர் நாகராஜன் மீது சந்தேகம் இருந்தது. இதனால் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு 7 மணி அளவில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 
உடனே தீக்குளிக்கப் போவதாக கூறி அனிதா தனது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜன் மனைவியை மிரட்டுவதற்காக, கண் இமைக்கும் நேரத்துக்கள் தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 
இதை சிறிதும் எதிர்பார்க்காத அனிதா அவரது கணவரின் உடலில் பற்றிய தீயை அணைக்க முயன்றார். ஏற்கனவே அனிதா உடலிலும் மண்எண்ணை இருந்ததால், அவர் மீதும் தீப்பற்றிக் கொண்டது. 2 பேரும் உடல் பற்றி எரித்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர். 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய 2 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயன் இல்லாமல் நாகராஜனும், அனிதாவும் பரிதாபமாக இறந்தனர். 

சென்னையில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து நாசம்

சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதியார் நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் சிலிண்டர் வெடித்த வீடு மட்டும் தீ பிடித்து எரிந்துள்ளது. 

சற்று நேரத்தில் அருகிலிருந்த குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. சுமார் 40 குடிசைகள் இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளன. உடனடியாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 5 தீயணைப்பு வண்டிகளில் வந்துள்ள வீரர்கள் வேறு குடிசைகளுக்கு பரவாமல் தீயை அணைப்பதற்காகப் போராடி வருகின்றனர்

இன்று இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கும் : நேரக் கண்காணிப்பாளர்கள் தகவல்


வாஷிங்டன்: உலகளாவிய நேரப்படி, இன்று சனி இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறது என்று சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஜூன் 30-ஆம் தேதி இரவு 11:59:59 மணிக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிக்கு முன் 11:59:60 என்று ஓரு விநாடி நேரம் அதிகரிக்கும். இந்த பூகோள நேர மாற்றத்தை அனைவரும் திருத்திக் கொள்ள வேண்டும் என்று பாரீசில் செயல்பட்டு வரும் சர்வதேச புவுயியல் ஆராய்ச்சி மையத் தலைவர் டேனியல் காம்பிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் சலுகை



சென்னை: பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இரு வழிப் பயணங்களுக்கும் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதே கட்டணச் சலுகையில் மானவருடம் மேலும் ஒருவர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்றும், போக்குவரத்து அலுவலரிடம் அழைப்புக் கடிதத்தைக் காட்டி இந்தக் கட்டணச் சலுகையைப் பெறலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்று பலாபழம் ஒரு தகவல்....



பலாச்சுளைகள் பொட்டாசியம்இ கால்சியம்இ பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன.







  • அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.




  • முக்கனிகளில் தேன் சுவை கொண்ட கனியாக போற்றப்படுவது பலா. பழங்களின் அரசன் என்ற பெருமைக்குரியது பலாப்பழம்.. மரத்தில் விளையும் பழங்களிலேயே பெரிய பழம் பலாப்பழமாகும். பூமத்தியரேகைப் பகுதிகளில் இது அதிகமாகக் காணப்படும் . சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது..

    பலாவில் உள்ள சத்துக்கள்

    பலாப்பலத்தில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் 
    காணப்படுகின்றன. ஏ, சி மற்றும் சில பி வைட்டமின்களும் உள்ளன. தவிர கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட கனிமப்பொருட்களும் பலாப்பழத்தில் அடங்கியுள்ளன.


    நரம்புகளை உறுதியாக்கும் பலா

    வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் 
    வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும், 
    நரம்புகளுக்கு உறுதி தரும். ரத்தத்தை விருத்தியாக்கும். பல் தொடர்பான நோய்களைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தொற்றுக்கிருமிகளை அழிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும்.

    தேனில் ஊறிய பலா

    பலாப்பாழத்தை முறையுடன் சாப்பிட்டால் கெடுதல் இருக்காது.. பலா பழத்தை சாப்பிட்ட உடன், சிறிது நெய் அல்லது கொஞ்சம் பாலை அருந்தினால் எந்த தொல்லைகளும் ஏற்படாது. உடல் பலம் பெறும். வெறும் பலாப்பலத்தை சாப்பிடாது சிறிது நாட்டுச்சர்க்கரையை கலந்து சாப்பிட உடல்புத்துணர்ச்சி பெறும். தாகம் தணியும். எளிதில் சீரணமாகும். குடலுக்கு வலிமை தரும்.

    அதிகம் சாப்பிட்டால் ஆபத்து அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இது பலாப்பழத்திற்கும் பொருந்தும். குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.

    பெண்கள் மாதவிடாய் காலங்களில் தவிர்ப்பது நல்லது. இதனால் போக்கு மிகுதிப்படும். பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால்  குழந்தைகளுக்கு மாந்தநோய் ஏற்படும். மூல நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் தொல்லை அதிகமாகும். வாதநோய்க்கும் ஆகாது. இருமல் நோய் உள்ளவர்கள் சாப்பிட்டால் இருமல் அதிகமாகும்.

    பலாப்பிஞ்சு

    பலாப்பிஞ்சு கறி சமைக்க உதவும். இதனை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.
    அதிகமாக சாப்பிட்டால்,வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும். பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
    பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

    தூக்கமின்மை பிரச்னைக்கான தீர்வுகள்



    இன்றைய உலகில் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். எப்பொழுமே வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பவர்கள் தான் அதிகம். 
    தூக்கம் வராமல் கஷ்படப்படுபவர்கள் வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நன்றாக தூக்கம் வரும். 

    ரோஜாப்பூ வெள்ளை மிளகு, சுக்கு ஆகியவற்றில் தலா 50 கிராம் எடுத்து அரைத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்னை தீரும்.

    முக்குளிக் கீரையை சூப் செய்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும். மாம்பழச் சாறுடன் பால் கலந்து சர்க்கரை சேர்க்காமல் குடித்தால் தூக்கம் வரும்.

    மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும். 

    மணலிக் கீரை, துளசி, வில்வம் மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி இரவு நேரத்தில் தினமும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

    மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நல்ல தூக்கம் வரும். 

    20 கிராம் கொத்தமல்லியுடன், 3 கிராம் கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்

    EURO CUP கால்பந்து இறுதி போட்டி: இத்தாலியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது ஸ்பெயின்!...




    ஜூலை.02:- உலக கோப்பை கால்பந்து போட்டியை அடுத்து மிகவும் பிரசித்து பெற்றது யூரோ கோப்பை கால்பந்து ஆகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்தப்போட்டி உலக கோப்பையை போலவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
    16 அணிகள் பங்கேற்ற 14-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி போலந்து, உக்ரைன் நாடுகளில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் நடைபெற்றது.
    இதில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின்-இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 14-வது நிமிடத்திலே ஸ்பெயின் வீரர் டேவிட் சில்வா தலையால் முட்டி கோல் அடித்தார். அதன்பிறகு இத்தாலி வீரர்கள் தங்கள் பங்கிற்கு கோல் அடிக்க மும்மரமாக விளையாடினாலும் அவர்கள் முயற்சி ஸ்பெயின் வீரர்களால் முறியடிக்கப்பட்டது.
    ஸ்பெயின் அணியின் ஜோர்டி ஆல்பா சிறப்பாக விளையாடி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியிலே ஸ்பெயின் அணி 2 கோல்களுடன் முன்னிலை வகித்தது.
    ஆட்டத்தின் அடுத்த பாதியின் இத்தாலி வீரர்கள் கோல் அடிக்க விடா முயற்சி செய்தனர். ஆனாலும் ஸ்பெயின் வீரர்கள் அவர்களுக்கு ஈடு கொடுத்து விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும் அனல் பறந்தது.
    ஆட்டத்தின் 83-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டோரஸ் கோல் அடித்தார். இதனால் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட ஸ்பெயின் அணியிடம் வந்தது. டோரஸ் கோல் அடித்த சிறிது நேரத்தில் அதாவது ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜுவான் மாதா கோல் அடித்தார்.
    இத்தாலி வீரர்கள் கடைசி வரை போராடி விளையாடிய போதிலும் அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
    இதனால் ஆட்டத்தின் முடிவில் ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
    ஸ்பெயின் அணி 1964 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் யூரோ கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தற்போதும் இத்தாலியை வீழ்த்தி மூன்றாவது முறையாக யூரோ கோப்பையை கைப்பற்றியுள்ளது.
    இதற்கு முன்னதாக ஜெர்மனி அணி அதிகபட்சமாக 3 முறை (1972, 1980, 1996) யூரோ கோப்பையை வென்றுள்ளது. அதனை தற்போது ஸ்பெயின் அணி சமன் செய்துள்ளது.
    எந்த ஒரு அணியும் தொடர்ந்து 2 முறை ஐரோப்பிய போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றது இல்லை. ஆனால் ஸ்பெயின் அணி 2008-ம் ஆண்டு மற்றும் தற்போதைய போட்டியில் வென்றதன் மூலம் அந்த சாதனையையும் நிறைவேற்றியுள்ளது.
    2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்தில் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் இஸ்லாமிய தாவா FM ரேடியோ ஆரம்பம்.






    புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும்; வழி சொல்லும் ஆய்வு?


    இன்று ஒரு இருதயநலக் குறிப்பு:


    மது அருந்துவதில் உங்களுக்கு விருப்பமோ, ஆர்வமோ இல்லாமல் போனால் அருந்தாமல் இருந்துவிடுங்கள். நண்பர்களின் தூண்டுதல், “கம்பெனி” கொடுப்பதற்க்காக தண்ணி அடிப்பது போன்ற பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது அவசியம், உங்கள் இருதய நலனை பேணிக் காக்க! 

    நம்ம சூர்யாவோட வாரணம் ஆயிரம் படம் பார்த்த எல்லாருக்குமே தெரியும், அந்தப் படத்துல கதாநாயகனா வர்ற சூர்யா தன்னோட காதலி சமீரா ரெட்டி, ஒரு எதிர்பாராத விபத்துல இறந்துபோக, அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாம, கொஞ்சம் கொஞ்சமா மது, புகைப்பழக்கம், கஞ்சா, போதை மருந்து ஊசி இப்படி எல்லாம் கலந்த, நரகத்தைவிட மோசமான போதைப்பழக்கத்துக்கு அடிமை ஆயிடுவாரு!
    அப்புறம் “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல”ன்னு பாட்டெல்லாம் பாடிட்டு, ஒரு வழியா போதைப்பழக்கம்ங்கிற  நரகத்துல இருந்து மொத்தமா மீண்டு வெளியே வர்றதுக்கு, உடற்பயிற்ச்சின்னு ஆரம்பிச்சி (8 மாசம் கஷ்டப்பட்டு?) கடைசியில சும்மா அட்டகாசமான ஒரு “சிக்ஸ் பேக்”கோட சிக்ஸ் பேக் சூர்யாவா ராணுவத்துல சேர்ந்துடுவாரு!

    இப்படித்தான் நம்ம சமுதாயத்துல, இளைஞர்கள் பல பேரு வாழ்க்கையில ஏற்படுற பல்வேறு கசப்பான அனுபவங்கள், இழப்புகள எதிர்கொள்ள முடியாம, பல்வேறு போதைப்பழக்கங்களுக்கு அடிமையாயிடுறாங்க. அதுல ஒரு முக்கியமான போதைப்பழக்கம்தான் புகைப்பழக்கம்! ஒருவர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனா, புகைப்பழக்கத்துக்கு அடிமையாவதற்க்கு காரணங்களா, அதிகமான புகைப்பழக்கமுள்ள என்னோட கல்லூரி கால நண்பர்கள் சொன்னது……
    1. சும்மா ஸ்டைலுக்காக/போர் அடிச்சதுனால
    2. வேலைப்பளு
    3. மன உளைச்சல்
    4. காதல் தோல்வி
    சும்மா ஒரு கிக்குக்காக (நண்பர்களால் தூண்டப்பட்டு)  
    இப்படி இன்னும் எத்தனையோ காரணங்களுக்காக புகைப்பிடிக்கத் தொடங்கி, காலப்போக்கில் அந்தப் பழக்கத்துக்கு நாம் அடிமையாகிவிட்டோம் என்பது தெரியாமலே புகைப்பிடித்திருக்கும் பலரை நாம நம்ம அன்றாட வாழ்க்கையில, நண்பரா, அக பணியாளரா, பெற்றோரா, சகோதரரா, உறவினரா பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். ஆனா, இப்படிப்பட்டவர்கள்ல பெரும்பாலனவங்க, அந்தப் பழக்கத்துலயிருந்து எப்படியாவது விடுபடனும்னு முயற்ச்சி செய்றாங்க, ஆனா அப்படி முயற்ச்சி செய்யுறவங்கள்ல வெகுச்சிலரைத்தவிர மத்தவங்க தோத்துப்போயிடுறாங்கங்கிறதுதான் நிதர்சனம்!
    அது சரி இந்த அவல நிலையை மாற்ற என்னதான் வழி?
    இந்தக் கேள்விக்கான விடையுடன், புகைப்பழக்கத்தை சுலபமாக நிறுத்திவிட முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறது அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. இந்த ஆய்வுல என்ன செஞ்சாங்க, புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்க்கான வழியென்ன அப்படீங்கிறதப் பத்தித்தான் நாம இனிமே பார்க்கப்போறோம்…..
    மூளையின் பகுத்தறிவுப் பகுதியும், புகைப்பழக்கத்துக்கான சிகிச்சை முறைகளும்!
    கடந்த 20-ஆம் நூற்றாண்டில் சுமார் 100 மில்லியன் மக்களை காவு வாங்கிய புகைப்பழக்கத்தை கைவிட, திட்டமிடப்பட்ட சிகிச்சை முறைகள் உண்டு. அதில் புகைப்பழக்கத்தின் மோசமான பின்விளைவுகளை எடுத்துச்சொல்லி புரியவைக்கும் ‘காக்னிட்டிவ் பிஹேவியரல் தெரப்பி’ அல்லது ‘காக்னிட்டிவ் சைக்கோதெரபி’ என்று ஒருவகை சிகிச்சை முறை உண்டு. இந்த முறையில்…..
    1. ஒருவர் தன் போதைப்பழக்கத்தினால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைப் பற்றி தெரிந்துகொண்டு அதை கைவிடுவது
    2. எந்தவொரு விஷயத்திற்க்கு இரண்டே முடிவுகள்தான். உதாரணத்துக்கு வாழ்வா சாவா? என்பதைப் போல ஒரு நிலைப்பாடை எடுத்து புகைப்பழக்கத்தை கைவிட முயற்ச்சிப்பது
    3. ஒரு விஷயத்தினால் ஏற்படும் கெடுதல்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்துவது. உதாரணமாக, புகைப்பழக்கத்தினால் ஏற்படும் நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை மட்டுமே கவனத்தில்கொண்டு அதைக் கைவிட முயல்வது
    இந்தவகையான சிகிச்சை முறையினால் பயனுண்டு என்பதற்க்கான விஞ்ஞானப்பூவமான ஆதாரங்கள் இதுவரை இல்லாமலிருந்தது, இம்முறையின் பயன்/தரம்குறித்த ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது! ஆனால், இம்முறையினால் நிச்சயம் பயனுண்டு என்பதற்க்கான மூளைசம்பந்தப்பட்ட நரம்பியல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளார் யேல் பல்லகலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர், முனைவர் திரு.ஹெடி கோபர்!
    இந்தவகையான சிகிச்சை முறையினால் பயனுண்டு என்பதற்க்கான விஞ்ஞானப்பூவமான ஆதாரங்கள் இதுவரை இல்லாமலிருந்தது, இம்முறையின் பயன்/தரம்குறித்த ஒரு ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது! ஆனால், இம்முறையினால் நிச்சயம் பயனுண்டு என்பதற்க்கான மூளைசம்பந்தப்பட்ட நரம்பியல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளார் யேல் பல்லகலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர், முனைவர் திரு.ஹெடி கோபர்!
    அதாவது, மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையின்போது, புகைப்பழக்கத்தின் நீண்டகால பின்விளைவுகளைப் பற்றி சம்பந்தப்பட்ட ஒருவருக்கு எடுத்துச்சொல்லும்போது, ஒரு மனிதனின் பகுத்தறிவு மற்றும் சுயக்கட்டுப்பாடுக்கு அடிப்படையான மூளைப்பகுதியான ப்ரீஃப்ரான்டல் கார்டெக்ஸ் (, என்னும் பகுதி தூண்டப்பட்டு, செயல்படத்தொடங்கியதாகவும், அதேசமயம் போதைமருந்துக்காக ஏங்கும் அல்லது எதாவதொரு பொருளுக்காக தீராத மோகத்துடன் அலையும் செயல்களுக்கு அடிப்படையான ஸ்ட்ரையேட்டம் (striatum) என்னும் மூளைப்பகுதியின் செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்கிறார் கோபர்!
    சரி, அதனாலென்ன இப்போ அப்படீன்னு கேட்டீங்கன்னா, “புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் நிச்சயமாக அதிலிருந்து மீண்டு வர முடியும். ஆனால், எப்படி மீண்டு வருவது என்பதை தகுந்த சிகிச்சை முறைகள் மூலம் அவர்களுக்கு எடுத்துச்சொன்னால் போதும்” என்கிறார் கோபர்! 
    அதுமட்டுமில்லாமல், சில விஞ்ஞானிகளின் கருத்துப்படி, போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் ப்ரீஃப்ரான்டல் கார்டெக்ஸ் என்னும் பகுத்தறிவுடன் தொடர்புடைய மூளைப்பகுதியானது பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வருகிறது. ஆனால், புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களில் இது நன்றாக செய்ல்பட்டு முற்றிலும் எதிர்மறையாக இருப்பது வியப்பளிக்கிறது என்றும், இந்தப் பகுதியின் அதிகமான செய்ல்பாட்டினால், புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள், தங்களின் ஏக்கம்/போதை எண்ணங்கள் குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றும் கூறுகிறார் விஞ்ஞானி கோபர்!

    செங்கல் சூளையில் இருந்து 34 கொத்தடிமைகள் மீட்பு



    கமுதி: கமுதி அருகே செங்கல் காளவாசலில் கொத்தடிமையாக இருந்த 34 பேரை அதிகாரிகள் மீட்டனர். இவர்களை மீட்க சென்ற தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை நள்ளிரவில் சிறைப்பிடித்தனர். இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட் டம் கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் காளவாசல் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எஸ்.மறைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள், வேலை பார்த்து வந்தனர். இவர்களை கொத்தடிமைகளாக நடத்தி வந்ததாக புகார் எழுந்தது.
    இது குறித்து அருப்புக்கோட்டை ஆர்டிஓ குணசேகரனுக்கு புகார் வந்தது. இந்த தகவல் விருதுநகர் கலெக்டர் பாலாஜிக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் ஆர்டிஓ குணசேகரன், காரியாபட்டி தாசில்தார் சுதந்திரமணி, நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் சில போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அச்சங்குளத்துக்கு வேனில் சென்றனர். அவர்களை பார்த்ததும் அங்கு வேலை பார்க்கும் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். கொத்தடிமைகளாக உள்ளவர்களை மீட்டுக் கொண்டு செல்ல முடியாதபடி அதிகாரிகளை அவர்கள் முற்றுகையிட்டனர். இந்த காளவாசலுக்குள் சென்று வெளியே வர இரண்டு பாதைகள் உள்ளன. இதை ஜேசிபி இயந்திரத்தையும், லாரியையும் நிறுத்தி அடைத்தனர். இதனால் அதிகாரிகளால் வெளியேற முடியவில்லை. அதிகாரிகள் நடத்திய பேச்சில் எந்த பலனும் ஏற்படவில்லை. இது குறித்து பரமக்குடி ஆர்டிஓ மீரா பரமேஸ்வரிக்கும், கமுதி தாசில்தார் காளீஸ்வரனுக்கும் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். மீட்பதற்கு வந்த அவர்களையும் சிறைப்பிடித்தனர். இதையடுத்து அபிராமத்தில் இருந்து ஒரு போலீஸ் படை, காளவாசலுக்கு விரைந்தது. போலீசார் பேச்சு நடத்தி எச்சரித்ததன் பேரில் அதிகாரிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுடன் கொத்தடிமை களாக இருந்த 13 குடும்பங்களை சேர்ந்த 14 ஆண்கள், 13 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உள்பட 34 பேரும் மீட்கப்பட்டனர். தாசில்தார் சுதந்திரமணி கொடுத்த புகாரின் பேரில், அதிகாரிகளை சிறைபிடித்த 20 பேர் மீது அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெள்ளைச்சாமி (35), மலைச்சாமி (44), காந்தி (45), முருகேசன் (40) உள்பட 14 பேரை கைது செய்தனர். நள்ளிரவில் அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கமுதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Vijay Awards








    6th Annual Vijay Awards - An Annual Awards Ceremony presented by Vijay Television 

    for outstanding achievements in the tamil cinema industry across various categories








    List of orphanage in Chennai



    Orphanages in Chennai


    Orphans are the one who should be taken care to greater extent. There are many organizations in Chennai who provide their support to the orphans in Chennai. There are some of theorphanages in Chennai who provide great support to the orphans and the people of Chennai also offer their help to the orphans in Chennai. Education is the first main thing that has to be given to the children to eradicate the social issues in India. In that way the orphanages in Chennai provide good education to the children and make them great leaders in future.

    It is the duty of every human being to help the other human beings who are suffering. It can also be said that the service to the mankind is the service to the god. Every action performed by the human being is taken list by the god and the same is reflected to our life also. Orphanages in Chennai are increasing and this should not be taken in the positive approach. Though the orphanages in Chennai are a great thing because it serves the orphans, the fact is that a country or state without orphanage is the best country in the world. If the proper education is provided to people, this orphanage can easily be removed in the future. 



    Bala Gurukulam Orphanage 
    1 Ashram St Murugambedu 
    Kallikuppam Ambattur 
    Chennai.INDIA

    Avvai Home 
    24 Besant Avenue 
    Adyar 
    Chennai-20

    DEAN Foundation, Hospice and Palliative Care Center 
    Deepa Muthaiya,
    Old No. 73/New No. 59,
    II Street Aspiran Garden Colony 
    Kilpauk Chennai – 600010

    Compassion Children Home 
    Jeroham Ministries Trust No:8 Lotus Street,
    Shakthi Nagar 
    Adambakkam chennai - 600 088 India.

    The Megha Foundation 
    Saranalaya Children Home 4/129,
    kelma nagar 83 
    thandalam (kovur via)
    Chennai-602101

    Dazzling stone Orphanage 
    Sirukalathur,
    Kundrathur Near Madha engneering college
    Sriperumputhur Road,
    Kundrathur Chennai - 600069.
    Tamil Nadu

    Ebenezer Home of Social Outrea 
    M-4 Boganvilla Apartments 
    K- Block Anna Nagar Chennai,
    Tamil Nadu India 600 102

    Greenseen Foundation 
    1 Malayappan Street 
    R A Puram 
    Chennai India

    Hindu Mission Hospital 
    D. K. Srinivasan 
    103 G. S. T. Road,
    Tambaram West 
    Chennai - 600045
    Tamil Nadu India

    Jeeva Jothi 
    No 58 Chinnakulandai Main Street,
    Perambur Chennai 
    Tamil Nadu India 
    600011

    Janaki Ramachandran Educational trust
    31 Duraisamy Road,
    Vadapalani Chennai 
    TamilNadu 
    600026 India

    Kaingkarya Social Welfare Organisation
    Kaveri Natrajan 32 11th Avenue,
    Ashok Nagar,
    Chennai - 600083 Tamil Nadu India

    Karna Prayag Trust 
    10 Raja Krishna Road 
    Teynampet 
    Chennai 600 018

    Mahalakshmi Foundation
    21/10,2nd street Kamaraj Nagar 
    Avadi 
    Chennai-71

    Kamaliya Trust 
    KAMALIYA TRUST Aanaikaar Complex,
    10/24 M.V.Badran Street 
    Periamet,Chennai-600003,
    TamilNadu India

    MGR Memorial Trust 
    6 Adayar Bridge Road Chennai,
    Tamil Nadu 
    600028 India MGR Memorial Building 27 
    Arcot Mudali Street ,
    Chennai 600017 India

    Mercy Home 
    No. 64 Halls Road 
    Kilpauk 
    Chennai-10. 
    Ph: 26442820
    GOOD LIFE CENTRE - ORPHANAGE 
    12 LOGANATHAN STREETNEAR VIDYA THEATRE
    WEST TAMBARAM,
    CHENNAI – 600045


    MOTHER CHILDREN'S HOME 
    DAWN MISSION TRUST No.29/42,
    7th Street Extension 
    Vanchi Nagar,
    Korattur,
    Chennai - 600 080 India

    Om Sakthi Peetam 
    17 1st Street B. V. Colony 
    Sarmanagar Chennai,
    Tamil Nadu 
    600 039 India

    Nethaji Mercy Home 
    No. 12 Pandithurai Street 
    Kamarajapuram,
    Velachery 
    Chennai-42.Tamil Nadu

    Roshini Children's Home 
    1/180 3rd Street,
    Viduthalai Nagar 
    Sunnambu Kolathur 
    kovilambakkam Chennai 600117

    Orphanage Home 
    No. 12 Pandithurai Street 
    Kamarajapuram Velachery 
    Chennai-42. 
    Ph: 22448447

    Seva Chakkara Orphanage
    No. 89/41 Swami Pillai Street 
    Choolai Chennai-112. 
    Ph: 25383195

    Sangita Charitable Trust 
    No. 2 D.B. Shanmuga Street ,
    Kilpauk 
    Chennai - 600 010 Tamil Nadu
    India

    Sankara Nethralaya 
    Dr. S. S. Badrinath,
    18 College Road 
    Chennai - 600006 Tamil Nadu 
    India

    SHORE HOME 
    A Project of SHORE TRUST, 
    NO. 71/3 Ground Floor Kurunal Street, 
    V.O.C Nagar Menambedu Ambattur 
    Chennai-53.
    Ph: 9380566754
    Email:shoretrust@gmail.com

    Tamilnadu social welfare association
    NO-50/103 Pillaiyar koil st, 
    Arumbakkam, 
    Ph: 044-24750932 
    M:9283286237nEmail: admin@tansowa.com 
    Web: http://tansowa.com
    Chennai-600106

    Sivananda Saraswathi Sevashram 
    20 Kambar Street Tambaram East 
    Chennai-59. 
    Ph: 22391078

    The Banyan 
    Vandana Gopikumar 
    6th Main Road,
    Mogapair Eri Scheme,Mogapair West 
    Chennai - 600 037 Tamil Nadu India

    TANKER Foundation 
    Latha Kumaraswami 
    17 Wheatcrofts Road 
    Nungambakkam 
    Chennai - 600 034 Tamil Nadu 
    India

    Valluvar Gurukulam 
    D. K. Srinivasan 
    220 G. S. T.Road,
    Tambaram West 
    Chennai - 600045 
    Tamil Nadu India

    Udavum Karangal
    No. 460 N.S.K. Nagar Arumbakkam 
    Chennai-106. 
    Ph: 26216321
    .