ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்ப ஏடிஜிபி துக்கையாண்டி சஸ்பெண்ட்
ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்ப
ஏடிஜிபி துக்கையாண்டி சஸ்பெண்ட்
சென்னை : சென்னை விரைவு போக்குவரத்துக் கழக விஜிலன்ஸ் ஏடிஜிபியாக இருப்பவர் துக்கையாண்டி. இவரது பணிக்காலம் நேற்று மாலையுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்நிலையில் அவர் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் இருப்பதாகவும், இதனால் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உள்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறைச் செயலாளர் ராஜகோபால் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார். துக்கையாண்டி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குரூப் ஒன் தேர்வு மூலம் டிஎஸ்பியாக பணியில் சேர்ந் தார். 1986ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சிபிசிஐடி, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு பிரிவு ஆகியவற்றில் ஏடிஜிபியாக பணியாற்றினார். பல்வேறு முக்கிய வழக்குகளையும் விசாரித்து வந்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 7 மாதத்துக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். பதவி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக துக்கையாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment