குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை என்ன?

சென்னை : குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், Ôமது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும். நாளுக்கு நாள் மதுபான கடைகளை அதிகரிப்பது தவறானது. எனவே மேலும் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்Õ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் நாராயணன் நேரில் ஆஜராகி, ''கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மனுவை தாக்கல் செய்தேன். வழக்கில் அரசு பதில் அளிக்க நோட்டீஸ் நீதிமன்றம் அனுப்பியது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது 32 ஆயிரம் பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 44 பேர் சாலை விபத்தால் இறந்துவிடுகிறார்கள். இதில் 60 சதவீதம் பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் இறக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் பார்கள் உள்ளது. ஆனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை அங்கு தடை செய்துள்ளார்கள். எனவே இங்கும் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.
அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேஷ் ஆஜராகி, ''குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லைசென்சு ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது''என்றார். தலைமை நீதிபதி குறுக்கிட்டு, ''தமிழகத்தில் மதுபானத்தை அரசே விற்கிறது. இதனால் அரசுக்கு வருமானம் வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் கண் மூடித்தனமாக உத்தரவிட முடியாது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது அரசே நடவடிக்கை எடுக்கிறது. இதற்காக ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் சோதனையிட முடியுமா? இதற்காக ஆயிரக்கணக்கில் போலீசாரை நியமிக்க முடியுமா? இது சாத்தியமாகுமா? இதில் தலையிட்டால் 100க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகளை தாக்கல் செய்வார்கள். அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என்றார்.
மனுதாரர் நாராயணன் பதில் அளிக்கும்போது, ''அரசு கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட நான் கோரவில்லை. மது மூலம் அரசுக்கு 18 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இருந்தாலும் ஒரு வகையில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது மனித உரிமை பிரச்னை. எனவே இதில் அரசுக்கு அறிவுரை கூறவேண்டும். உரிய உத்தரவு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகன விபத்து நடக்கிறது. இதை தடை செய்ய வேண்டும்'' என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ''குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று 2 வாரத்தில் விளக்கம் அளிக்கவேண்டும்'' என்று உத்தரவிட்டனர்.

0 comments:
Post a Comment