பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசினால் டிரைவர் டிஸ்மிஸ்

பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசினால் டிரைவர் டிஸ்மிஸ்


சென்னை : சென்னை மாநகரில் மொத்தம் 3,497 பஸ்கள் உள்ளன. இதில் 275 பஸ்கள் மாற்று பஸ்களாக இருக்கும். இதுதவிர 3,222 பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. மொத்தம் 8,140 டிரைவர்கள் பணியாற்றுகின்றனர். ''செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன. எனவே அரசு பஸ்களில் பணியில் இருக்கும்போது ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்'' என்று தமிழக அரசு கடந்த 2010 ஜனவரியில் உத்தரவிட்டது.


இதையடுத்து பஸ்சை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் உடனே பயணிகள் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்த தடை உத்தரவு சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பதை காற்றில் பறக்கும் தடையுத்தரவு என்று தினகரன் கடந்த 24ம் தேதி சுட்டிக் காட்டியிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்துக்கு டிரைவர் செல்போன் பேசிக் கொண்டே பஸ்சை ஓட்டியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி கூறியதாவது: 

பஸ் ஓட்டும் போது டிரைவர்கள் செல்போன் பேசினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படும். ஏற்கனவே உள்ள தடை உத்தரவுகளை அனைத்து டிரைவர்களும் பின்பற்ற வேண்டும். டிரைவர்கள் செல்போன் பேசுவதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் இருக்கின்றனர். இவர்களின் பணி தீவிரப்படுத்தப்படும்.

சோதனையின்போது செல்போன் பேசியது உறுதி செய்யப்பட்டால் 7 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர். தொடர் ந்து 3 அல்லது 4 முறை செல்போன் பேசிய புகாரில் சிக்கினால் அவரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்.  இவ்வாறு அவர் கூறினர்.

புகாருக்கு : 93833 37639

மாநகர பேருந்து டிரைவர் பஸ் ஓட்டும் போது, செல்போனில் பேசினால் ''93833 37639'' என்ற எண்ணில் பயணிகள் புகார் அளிக்கலாம்.
புகார் கொடுக்கும் போது, அந்த பஸ் தடம் எண், நேரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். நாங்கள் ஓயர்லெஸ் மூலம் சம்பந்தப்பட்ட பஸ்சை மடக்கி பிடித்து சோதனை நடத்துவோம். அப்போது டிரைவர் செல்போன் பேசியது உறுதி செய்யப்பட்டால் முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்.  தொடர்ந்து புகாரில் சிக்கினால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்'' என்று மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments:

.