ஆசிரியர்கள் ஒழுங்காக உடை அணிய வேண்டும்
சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 55667 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1 கோடியே 35 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களை இப்போது கல்வித் துறை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டது.
வருகைப்பதிவில் தொடங்கி பாடம் நடத்தும் முறை, தேர்ச்சி வீதம் குறைவது என பல விஷயங்களில் ஆசிரியர்களை கல்வித்துறை நெருக்கி வருகிறது. இதற்கிடையே, மாணவர்களை கடுமையாக தண்டிப்பது, பலர் முன்னிலை யில் திட்டுவது, கட்டண விஷயத்தில் தனிமைப்படுத்துவது என்று ஆசிரியர்கள் நடந்து கொள்வதாகவும், மாணவ, மாணவியரிடம் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் புகார்கள் வருகின்றன. புகாரில் சிக்கும் ஆசிரியர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.
பாலியல் புகார் கூறப் படும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த மாதம் தமிழக அரசு அதிரடி உத்தரவு போட்டுள் ளது. இதன்படி, மாணவ, மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு மற்றும் டிஸ்மிஸ், வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்ற இயலாத வகையில் அவரது கல்வி சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இப்போது மேலும் சில அதிரடி விதிமுறைகளையும் பள்ளிக் கல்வித் துறை கொண்டு வருகிறது. இது தொடர்பாக புதிய சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கிறது. அதில் கூறப் பட்டுள்ளதாவது: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடத்துடன் ஒழுக்கத்தையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பின்பற்றும் வகை யில் ஆசிரியர்களும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆசிரியர்களுக்கென சில சீருடை விதிகள் உள்ளன. அதன்படி ஆசிரியர்கள் உடை அணிந்து வரவேண்டும்.
மாணவர்களும் சீருடை அணிந்து வருவதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும். பெண் ஆசிரியர்கள் தேவையற்ற அணிகலன்களை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. மாணவர்கள் இடையே ஒழுக்கத்தை வளர்க்கும் ஆடைகளை ஆசிரியைகள் உடுத்தி வரவேண்டும். மாணவ மாணவியருக்கு அருவருப்பு ஊட்டும் வகையான ஆடைகள், அணிகலன்களை அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக் கூடாது. மரியாதை வரும் அளவுக்கான உடைகளை உடுத்தி வர வேண்டும்.
ஆசிரியர்கள் நாகரிகமாகவும், ஒழுங்காகவும் உடை அணிந்து வருகிறார் களா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒழுங்காக உடை அணியாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரை செய்ய வேண்டும். நேரம் தவறாமல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா என்பதையும் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்a

0 comments:
Post a Comment