தேதியை மட்டும் சொன்னால் கிழமையை சரியாக சொல்லும் 11வயது சிறுமி
தேதியை மட்டும் சொன்னால்
கிழமையை சரியாக சொல்லும் 11வயது சிறுமி
திருச்சி: நாடு சுதந்திரமடைந்த 1947 ஆகஸ்ட் 15ம் தேதி என்ன கிழமை என்று உங்களிடம் கேட்டால், இன்டர்நெட்டில் பதில் தேடுவோம். ஆனால், பட்டென்று வெள்ளிக்கிழமை என பதில் சொல்கிறாள் 11 வயது சிறுமி பிரியங்கா. ஆண்டு, மாதம், தேதியை கூறினால், அந்த தேதிக்கான கிழமையை சரியாக கூறி ஆச்சர்யமூட்டுகிறாள் திருச்சி தீரன்நகரைச் சேர்ந்த சிறுமி பிரியங்கா. இதுபோல், கடந்த 110 ஆண்டுகளின் கிழமையை சரியாக சொல்கிறாள். இத்தனைக்கும் பிரியங்கா ஒரு மாற்றுத்திறனாளி. அவள் பிறந்தபோதே மாறு கண்ணுடனும், இடது கையை முழுமையாக இயக்க முடியாமலும் இருந்தாள். அவள் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவள். பிரியங்கா திருச்சி புத்தூர் ஆல் செயின்ட்ஸ் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறாள். பள்ளியில் சேர்வதற்கு முன் சிறப்பு பள்ளியில் பயிற்சி பெற்றாள். இவரது தந்தை கண்ணன், சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தாய் பானு, திருச்சியில் ஒரு பள்ளியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் கேர் டேக்கர். கடந்த ஆண்டு ஜூலையில் ஒரு நாள் பானு, ‘ஆகஸ்ட் 13ம் தேதி நடைபெறும் திருவிழாவுக்கு விடுமுறை கிடைக்குமா என்று தெரியவில்லையே’ என புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா, ‘அன்று சனிக்கிழமை, விடுமுறைதான்‘ என்று சொன்னாள். உடனே பானு காலண்டரை எடுத்து பார்த்தால், பிரியங்காவின் பதில் சரியாக இருந் தது. ஆச்சர்யமடைந்த பானு, 40க்கும் மேற்பட்ட தேதிகளை கேட்டுள்ளார் பிரியங்கா சரியான பதிலை கூறியுள்ளார். இதில் மேலும் ஆச்சர்யமடைந்த பானு, 2001 முதல் 2020ம் ஆண்டு வரை உள்ள காலண்டரை நெட்டில் டவுண்லோடு செய்து கொடுத்துள்ளார். அதை சிறிது நேரமே பார்த்த சிறுமி, 20 ஆண்டுகளின், மாதம், தேதிகளை கூறினால் கிழமையை சரியாக சொல்லிவிட்டாள். பின்னர் பானு 1941ம் ஆண்டு முதல் 2050ம் ஆண்டு வரை காலாண்டரை பிரியங்காவிடம் கொடுத்தார். தற்போது பிரியங்கா 110 ஆண்டுகளின் மாதம், தேதியை கூறினால் கிழமையை சரியாக கூறிவிடுகிறாள். மேலும், ஒரு குறிப்பிட்ட ஆண்டில், ஒரு மாதத்தில் எத்தனை சனிக்கிழமைகள் என்று கேட்டாலும் உடனே வருகிறது பதில். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளியில் நடந்த விழாவில் 120 மாணவ, மாணவிகளின் கேள்விக்கு சரியாக பதில் சொல்லி பரிசு வாங்கியுள்ளா
0 comments:
Post a Comment