தீபாவளிக்கு வருகிறது பஜாஜ் ஆட்டோவின் குட்டி கார்
\
ஆட்டோ ரிக்ஷாவுக்கு மாற்றாக அதிக பாதுகாப்பு கொண்ட புதிய நான்கு சக்கர வாகனத்தை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்துள்ளது. பஜாஜ் நிறுவனம் வடிவமைத்த முதல் நான்கு சக்கர வாகனம் இதுதான். இந்த ஆண்டுக்குள் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய குட்டிக் காரின் சோதனை ஓட்டங்களை பஜாஜ் ஆட்டோ தற்போது நடத்தி வருகிறது. இதில், ஒரு லிட்டருக்கு 35 கிமீ முதல் 40 கிமீ வரை மைலேஜ் தருகிறதாம் இந்த குட்டிக் கார். எனவே, இந்த குட்டிக் கார் அறிமுகம் செய்யப்படும்போது அதிக மைலேஜ் கொடுக்கும் நான்கு சக்கர வாகனம் என்ற பெருமையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 200சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த வாகனத்தை வரும் தீபாவளி பண்டிகையின்போது விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment