ரயில்வேக்கு சேவை வரி உண்டா? தொடரும் குழப்பம்
கருத்தை பதிவு செய்ய
பரந்த சேவை:சேவை வரி வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்கிற நோக்கில், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேர்மறை பட்டியலில், 119 இனங்களுக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல், எதிர்மறை பட்டியலில் இடம் பெற்றுள்ள, 38 இனங்களைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும் சேவை வரி விதிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது.
இதையொட்டி, எதிர்மறை பட்டியலில் இடம் பெற்றுள்ள இறுதிச் சடங்குகள், பிணங்களை புதைப்பது, பிணங்களை கொண்டு செல்லும் வண்டிகள் உட்பட 38 வகையினங்களுக்கு, சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல், கல்விப் பயிற்சி மையங்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டாலும், பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளுக்கு வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மேலும், ரயில்களில் சரக்கு கட்டணம், ஏ.சி., மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளுக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமருக்கு கடிதம்:இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய், "நாளை (இன்று) முதல், ரயில்வேயில் சேவை வரி, அறிமுகப்படுத்தப்படாது. நிதியமைச்சர் பொறுப்பை வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இதுகுறித்து கடிதம் எழுதப்பட்டுள்ளது' என்றார். ரயில்வே அமைச்சரின் இந்த அறிவிப்பால், ரயில்களில் சரக்கு கட்டணம், ஏ.சி., மற்றும் முதல் வகுப்பிற்கு, இன்று முதல் சேவை வரிகள் விதிக்கப்படுமா அல்லது விதிக்கப்படாதா என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment