பயணிகள் உதவியால் விமான கடத்தல் முறியடிப்பு
பீஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்கு அடிக்கடி இனமோதல்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் எல்லையோரம் இப்பகுதி அமைந்துள்ளதால், அங்குள்ள தீவிரவாதிகளுடன் பிரிவினைவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஹோடன் நகரில் இருந்து உரும்கி நகருக்கு நேற்று பயணிகள் விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் விமானத்தில் 6 மர்ம நபர்கள், விமானத்தை கடத்த முயற்சித்தனர். உஷாரான பயணிகள் அவர்களுடன் சண்டை போட்டனர். அதற்குள் விமான ஊழியர்களும் சேர்ந்து 6 மர்ம ஆசாமிகளையும் மடக்கினர். உடனடியாக விமானம் மீண்டும் ஹோடன் நகரில் தரையிறக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். விமானத்தில் ஏற்பட்ட சண்டையில் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர், 7 பயணிகள் காயம் அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. பயணிகளின் உதவியால் விமான கடத்தல் சதி முறியடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment